Archive For ஜூலை 9, 2022
வாழ்த்துரை — ஸ்ரீநிவாச ராகவன் S வணக்கம். வாழ்த்துகள் முருகன்ஜி. முருகன்ஜி-யை நான் சிறுவனாக இருக்கும்போது அண்ணாந்து பார்த்திருக்கிறேன். இப்போது நான் உருவத்தில் உயரமாக வளர்ந்த பிறகும் இலக்கிய உலகில் நான் அண்ணாந்து பார்க்கும் அண்ணா அவர் தான். நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக மிளகு பெரும்புதினத்துக்கு வருகிறேன். இந்தப் புதினத்தை நான் இரண்டு வகைகளில் அணுக விழைகிறேன். ஒன்று அதன் கட்டமைப்பு(structure). இரண்டாவது அவரது எழுத்து நடை (language). இரண்டுமே…
ராஜம் கிருஷ்ணன் சந்திப்பு ‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் – ஒன்பது இன்றைக்கு துலா மாசத்து சஷ்டி. அப்பா திதி. விஷ்ராந்தி போயிருந்தேன். பாலவாக்கம் மாதாகோவிலோடு திரும்பிக் கடற்கரையை நோக்கிப் போகும்போது உள்ளொடுங்கி இருக்கிற கட்டிடம் விஷ்ராந்தி. நிராதரவான முதியவர்களுக்கான காப்பகம். அம்மாவும் பாட்டித் தள்ளையுமாக வயசான பெண்களுக்கு மட்டுமான அந்த விடுதிக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை போகிற வழக்கம். அங்கே ஒவ்வொருவரோடும் கொஞ்சம் பேசி, சாப்பிடும்போது பரிமாறி, இலையில் அல்லது ஏந்திய…
வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் நான்கில் இருந்து வாழ்ந்து போதீரே அத்தியாயம் முப்பத்தாறு மலா பாக ருபயீ த்யா, மோதா பாவு. அப்பன் காஹீ தூபா கரீதீ கரூ. ஐந்து நிமிஷம் முன் டோம்பிவிலி ஃபாஸ்ட் லோக்கல் ரயிலில் வந்து சேர்ந்தவன், ரிடர்ன் டிக்கட்டை சிகரெட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியபடி திலீப்பிடம் சொன்னான். ஐந்து ரூபாய் வேணுமாம். போய் நெய் வாங்கி வருவானாம். நாலு மூங்கில் கழிகளும் தென்னங் கிடுகுமாக சைக்கிளில் வந்த…
வாழ்ந்து போதீரே அத்தியாயம் இருபது – விடியலின் ஈர வாடையும், சுட்ட சாம்பலைப் பொடி செய்து பன்னீரும் வாசனை திரவியமும் கலக்காமல் பூசும் வைராக்கியமான வீபுதி வாசனையும், குத்தாக அள்ளி ஏற்றி வைத்த மட்டிப்பால் ஊதுபத்தி மணமும், யாரிடம் இருந்து என்று குறிப்பிட முடியாதபடி நகர்கிற, நிற்கிற, உறங்கிக் கிடக்கிற ஜனத் திரளில் இருந்து எழுந்து பொதுவாகக் கவிந்த வியர்வை உலர்ந்த நெடியும், பறித்ததும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரும் செழித்த காய்கறிகளின் பச்சை மணமும்,…
மிளகு பெருநாவலுக்குச் சிறப்பான மதிப்பீடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் பிரசுரமான நாவல்களில் பரவலாகப் பேசப்படுகிற புதினமாக மிளகு திகழ்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சொல்வனம் இலக்கிய இதழில் நம்பி எழுதிய இந்த மேன்மைசால் மதிப்பீட்டைப் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். நம்பிக்கும் சொல்வனத்துக்கும் நன்றி மிளகு என்ற புனைவைப் பற்றிப் பேசும்முன் அதன் வரலாற்றுப் பின்புலத் தரவுகளைச் சற்று பேசிவிடுவோம். பெப்பர் நீக்ரம் (Piper nigrum) என்ற இந்நாவலின் ஆதாரத் தாவரம் வெப்ப மண்டலத்தில் அடரும் ஓர் படர்கொடி. மரங்களின்…
மிளகு பெருநாவலுக்கு இன்னுமொரு அடர்வும் ஆழமுமான மதிப்பீடு. நன்றி திரு பாலாஜி பிருத்விராஜ், நன்றி வல்லினம் இலக்கிய இதழ் ‘மிளகு’ நாவல் : கனவுவெளியும் காலடி நிழலும்