Archive For ஆகஸ்ட் 25, 2022
விஷம் குறுநாவல் இரா.முருகன் அத்தியாயம் – 2 வாசலில் சங்கரன். மேல் மாடியில் குடியிருக்கும் போத்தியின் ஏக புத்ரன். என்னை விட உயரமான அந்தப் பதினைந்து வயதுப் பையன் அழுகையும் மலையாளமுமாகச் சொன்னது இந்த்த் தரத்தில் இருந்தது – போத்திக்கு ஏதோ ஆகியிருக்கிறது. படுக்கையில் தொப்பல் தொப்பலாக வியர்வையோடு மூச்சு வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். வீட்டில் யாரும் இல்லை. பையனின் அம்மா சங்கணாச்சேரி போயிருக்கிறாள். எப்போது திரும்பி வருவாள் என்று தெரியாது….
விஷம் – குறுநாவல் இரா.முருகன் இது என் முதல் குறுநாவல். 1991-ல் கணையாழி குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பிரசுரமானது. முதல் குறுநாவல் என்பதாலோ என்னமோ, கட்டற்ற, ‘கேர் ஃபார் நத்திங்’ மனதோடு கதை போகிற போக்கில் எழுதிப் போன குறுநாவல் இது. எழுதும் போது இருந்த அந்த மகிழ்ச்சி இத்தனை வருடம் கழித்து மீண்டும் படிக்கும்போதும் உண்டாகிறது. முதல் காதல்! —————————————————————————————————————— அத்தியாயம் – 1 ரஞ்சனா ஆடிக்கொண்டிருக்கிறாள்….
விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 13 விஷ்ணுபுரம் தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கிற சிறு நகரம். தமிழகத்தின் மற்ற சிறு நகரங்கள் போல மார்பளாவு சிலைகளும் ஒடுங்கிய வீதிகளும், ஒன்றிரண்டு சினிமா தியேட்டர்களும், தெருவில் குறுக்கும் நெடுக்கும் படர்ந்து பந்தலிடுகின்ற கேபிள் டிவி ஒயர்களும், வாகன இரைச்சலும், மக்கள் தொகைப் பெருக்கமும் இங்கும் உண்டு. கலாச்சார ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ, தொழிற்துறை மேம்பாட்டாலோ இதுவரை இந்த ஊர் முதன்மைப்படுத்தலோ சிறப்பாகப் பேசப்படவோ இலக்கானதில்லை. இப்போது…
விஷ்ணுபுரம் தேர்தல் குறுநாவல் பகுதி 11 ஆ [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[ ’மெழுகுவர்த்தி எங்கே தொலஞ்சது?’ ‘இருட்டிலே வாசப்பக்கம் போகாதேடா… கதவைச் சார்த்து…’ ‘உங்களுக்கு ஒண்ணுமில்லே… ஹியரிங் எய்டைக் கழட்டி வச்சுட்டுப் படுத்துக்குங்கோ.. .’ ‘டார்ச் லைட் தலைமாட்டுலே தான் இருக்கு.. இண்டு பேப்பரை மடிச்சு பத்திரமா வச்சாச்சு.. எத்தனை தடவை தான் சொல்றதோ…’ ‘எலக்ஷனும் மண்ணும் எதுக்காக வர்றதோ.. முனிசிபாலிடி ஆகலேன்னு யாரு அழுதா..வருஷம் பூரா தண்ணி கிடையாது.. மண்ணெண்ணை கிடையாது.. சக்கரை…
குறுநாவல் விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 11 இன்று மீன் ஒலிபரப்பு இல்லை. சாயந்திரம் ‘பரிபாலய ரகுராமா’ இல்லை. டாக்டர் வீட்டில் இருந்து அழுகை சத்தம். ‘நீ என்ன காப்பி கொண்டு போறது.. நான் சாதம் போட மாட்டேனா.. எங்கேயோ ஒழியறேன்… எல்லாரும் சௌக்கியமா இருங்கோ.. சந்தி சிரிச்சா என்ன போச்சு?’ டாக்டர் வீட்டு மாமி குரல் தான். மாமி விடுவிடுவென்று படி இறங்கிப் போனாள். ‘அம்மா..’ …
குறுநாவல் ‘விஷ்ணுபுரம் தேர்தல்’ – பகுதி 11 டாக்டர் சதானந்தத்தை எத்தனையோ தடவை வக்கீல் மோகனதாசன் வீட்டுத் திண்ணையில் பார்த்திருக்கிறோம். மோகனதாசனுடனோ, ஜீவராசனுடனோ, இல்லை வருகிற சிவப்புத் துண்டுக்காரர்களிடமோ ஊர் வம்பு பேசிக்கொண்டு.. இது சாதாரணமாக ராத்திரி ஒன்பது மணிக்கு அவர் சாப்பிட்டு விட்டு பனியனுடன் வெளியே வரும்போது நடக்கும். அப்பா கூட சில சமயம் அங்கே போய் நிற்பார். ராத்திரி பதினொரு மணி வரை ‘பிரிவீபர்ஸ்’ என்று ஏதோ மணி பர்ஸ்…