Archive For ஆகஸ்ட் 19, 2022

கானா நியூஸ் வந்த விஷ்ணுபுரம் தேர்தல்

By |

கானா நியூஸ் வந்த விஷ்ணுபுரம் தேர்தல்

விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 9 கிருபாகரன் சாப்பிட்டு விட்டு ஓட்டமும் நடையுமாக வந்தான். கையில் மஞ்சளும் சிவப்புமாக ஏதோ பத்திரிகை.   ‘எனக்கு கானா நியூஸ் வந்திருக்குடா..’   கவரை வாங்கிப் பார்த்தோம். ‘மங்கத் தயிரம்மா, கேர் ஆப் ராம்நிஜம் நாயுடு’ என்று விலாசம் எழுதி, இருபத்து நாலு பக்கத்துக்கு இருந்தது. எல்லாப் பக்கத்திலும் நல்ல கருப்பாக ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். அதே சாயலில் ஏழெட்டுப் பேர் டமாரம் வாசிக்கிர படம் கடைசிப் பக்கத்தில்…




Read more »

விஷ்ணுபுரம் தேர்தல் படகு ஓட்டம் ஐலசா – குறுநாவல் பகுதி

By |

விஷ்ணுபுரம் தேர்தல் படகு ஓட்டம் ஐலசா – குறுநாவல் பகுதி

விஷ்ணுபுரம் தேர்தல்                   குறுநாவல்  பகுதி – 7   முறை வைத்துக் கொண்டு மீன் ஆபீஸிலும் சைக்கிள் ஆபீஸிலும் ஒலிபரப்பு நடத்தினார்கள்.   மீன் ஆபீஸில் ‘கப்பலோட்டிய தமிழன்’ பாட்டும், ‘திருவிளையாடல்’ வசனமும் போட்டார்கள். ‘நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவி..சீவி.. சீவி..’ என்று கிராமபோன் மக்கர் செய்த போது நிறுத்தி, ‘நான் கவிஞனுமில்லை’ போட்டார்கள்.   ‘இங்கே ஒரு வருஷமாக விஷக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கின்றன.. காப்போம் தேசம். இல்லையென்றால் நாசம்’.. என்று எழுதி வைத்துக்…




Read more »

விஷ்ணுபுரம் தேர்தல் – பைசைகிளும் மீனும் -வரைய எளிய மீன்

By |

விஷ்ணுபுரம் தேர்தல் – பைசைகிளும் மீனும் -வரைய எளிய மீன்

வக்கீல் மோகனதாசன் ஆபீஸ் களைகட்டி இருந்தது.   கோர்ட் கட்சிக்காரர்களை விட, சிவப்புத் துண்டு போட்டவர்கள் தான் சாதாரணமாக் இங்கே அதிகம் தட்டுப்படுவார்கள். இப்போது, கருப்புத் துண்டு போட்ட பழக்கடை அறிவரசன், முனியாண்டி விலாஸ் தங்கராஜு, ரிக்‌ஷா நாச்சியப்பன் என்று ஏகக் கூட்டம்.   வக்கீல் வேதாத்திரி ஐயங்காரும் அங்கே தான் இருந்தார். இவர் ஒருத்தர் தான் கூட்டத்தில் கதர் சட்டை போட்டவர்.   நாங்கள் இடம் கிடைக்காமல் படிக்கட்டில் இடித்துப் பிடித்துக் கொண்டு நின்றோம்.  …




Read more »

விஷ்ணுபுரம் தேர்தல் – கார்பனேட் மிக்சர் என்ற அமிர்தம் – குறுநாவல் பகுதி 5

By |

விஷ்ணுபுரம் தேர்தல் – கார்பனேட் மிக்சர் என்ற அமிர்தம் – குறுநாவல் பகுதி 5

விஷ்ணுபுரம் தேர்தல்   இரா.முருகன்  பகுதி 5   ‘என்னடா அம்பி.. படக்கூடாத எடத்துலே கிரிக்கெட் பந்து பட்டு வீங்கிடுத்தா?’   டாக்டர் சதானந்தம் ஒரு கட்டு வெற்றிலையை மேஜை மேல் வைத்து சாவதானமாக மென்று கொண்டிருந்தார்.   ‘இல்லே டாக்டர் மாமா.. இது மருந்து சீசா..’   நான் டிரவுசர் பையிலிருந்து வெளியே எடுத்தேன்.   ‘தாத்தாவுக்கு… மூணு நாளா..’   அசங்கிய விஷயம். எப்படிச் சொல்வது?   ‘கொல்லைக்கு வரலியாமா?’   மவுனமாக சீசாவை நீட்டினேன்….




Read more »

விஷ்ணுபுரம் தேர்தல் குறுநாவலில் இருந்து

By |

விஷ்ணுபுரம் தேர்தல் குறுநாவலில் இருந்து

‘ராமு.. இன்னமா எழுந்திருக்கலே.. எட்டு மணியாறதே..’   ‘அவனுக்கு எவனோ வேலை மெனக்கெட்டு டெல்லியிலிருந்து ஒரு மூட்டை புஸ்தகம் அனுப்பியிருக்கான்..’   ஆபீசுக்குப் போகிற அவசரத்தில் அப்பா. ரசம் மணக்கிற கை படுக்கைக்குப் பக்கத்தில் எதையோ போட்டது.   ‘பாக்கு டப்பா எங்கே?’   ‘ராமுதான் நேத்து அதுலே வெள்ளரிக்கா விதை தேடித் தேடித் தின்னுட்டிருந்தான்..’   இனியும் படுத்துக் கிடந்தால் டின் கட்டி விடுவார்கள்.   ஓடியே போய் சைக்கிள் பின்னாலிருந்து பாக்கு டப்பாவை எடுத்துக்…




Read more »

எலிசபெத் டெய்லர் வந்த விஷ்ணுபுரம் தேர்தல்

By |

எலிசபெத் டெய்லர் வந்த விஷ்ணுபுரம் தேர்தல்

விஷ்ணுபுரம் தேர்தல்   இரா.முருகன்  பகுதி – 2   அந்த ஆள் பார்க்க வினோதமாக இருந்தான். வயது கிருபாகரன் அண்ணன் புருஷோத்தமனை விட கொஞ்சம் கூட இருக்கலாம். இவனுக்குப் பெரிய மீசை இருந்தது. பட்டையாக நெற்றியில் வீபுதி பூசி இருந்தான். சந்தனம், குங்குமம், ஜெமினி கணேசன் போல தொளதொள பேண்ட். கோயிலுக்குப் போய்விட்டு, ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடத் தயாராக நிற்கிற ஜெமினி. கோயில் வாசலிலேயே நிற்கிறான். ஒரு கையில் தொப்பி. கையில் ஏதோ காகிதம். கோபுரத்தை…




Read more »