Archive For ஏப்ரல் 15, 2023

வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் = தினை அல்லது சஞ்சீவனி- மேலட்டை

By |

வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் = தினை அல்லது சஞ்சீவனி- மேலட்டை

அடுத்து வர இருக்கும் என் நாவல் தினை அல்லது சஞ்சீவனி-க்கான மேலட்டை இப்படி இருக்கக் கூடும்




Read more »

புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் ஒரு நிலவு ராத்திரி

By |

புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் ஒரு நிலவு ராத்திரி

நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி வீட்டுக்கு வெளியே, நனைந்த மண் பரவிய வாசலில் தடுக்குகள் இட்டு இருந்து, பூவரச இலைகளில் வட்டித்துச் சுடச்சுடப் புளிக் குழம்பும் வழுதணங்காய் எண்ணெய்ப் புரட்டலுமாக, அமர்க்களமாக உண்டு முடிந்தானது. சோறுண்டு வயிறு நிறைந்து, குளிர்ந்த நிலவு ஒளிவீசிய இரவிலெல்லோரும் கூடி இருந்து மகிழ அவன் குழலூதத் தொடங்கினான். குரலிசைக் கலைஞர்கள் பாடிப் புகழ்பெற்ற சில பாடல்களை குழலில் பகர்த்தியெடுத்து அவன் வெளி நிறைக்க, கீதங்களுக்கு இடையே சில்வண்டுகள் கிறீச்சிட்டுத் துளைக்கும்…




Read more »

என் வெளிவர இருக்கும் அடுத்த நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து

By |

என் வெளிவர இருக்கும் அடுத்த நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து

அத்தியாயம் 9 முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும் அடிவாரத் தரிசு பூமி. எல்லோரும் தினம் புழங்கினாலும் யாருக்கும் நினைவு இல்லை. கருங்கல் ஒற்றைச் சிற்பமாக நிற்கும் மலையின் கீழே ஒரு காலத்தில் சூரிய வெளிச்சம் உள்ளே வராமல் மறைத்த அடர்ந்த பெருமரத் தோப்புகளும் பரந்து பந்தலித்த கொடிகளும், மூலிகைச் செடிகளும் வளர்ந்து செழித்திருந்ததை யாரும் நினைவு கொள்வதில்லை. கேட்டால், அறுதப் பழசுக் கதை என்பார்கள். நடப்பில் இருக்கும் காலத்துக்கு ஆயிரம் வருடம் முற்பட்டது என நம்பிக்கை. மலையின்…




Read more »

Blurb at wrapper – நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’

By |

Blurb at wrapper – நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’

blurb– வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ பின் அட்டையில் இடம் பெறுகிறது ஜன்னல் வழியே நிலவு ஒளி ஓசைப்படாமல் இறங்க காலடியில் ஒரு வெங்கலப் பானை எழும்பி எழும்பிக் குதித்துக் கொண்டிருந்தது. செம்புக்குள் மறைந்து என்னை வம்புக்கு இழுக்கும் நீ யார் புழுவே. நான் தினை. குவித்து, மலர் மாலை சார்த்தி வைத்த புராதன வம்சாவளி செப்புக் குடத்தில் பெய்த மூன்று கைப்பிடி தினையரிசி . தினையும் தேனுமெல்லாம் பேசுவது எந்த…




Read more »

பெருந்தேளரசரின் ஹோலோகிராமும் காலப் படகும்

By |

பெருந்தேளரசரின் ஹோலோகிராமும் காலப் படகும்

என் 14-வது நாவல் தினை அல்லது சஞ்சீவனி வெளிவர இருக்கிறது. நாவல் பகுதி ஒன்று – திண்ணை காம் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகிறது. அதிலிருந்து- ஊ ஊ என்று சன்னமாகக் காற்று போல் சீழ்க்கை ஒலி தொடர்ந்து வர ஒரு அணு கூட நகராமல் காலப் படகு பின்னோக்கிக் காலத்தில் பயணமாகிக் கொண்டிருக்கிறது. ஜம்புத் தீவு பிரகடனமும் துரைசாமியும் கால வெள்ளத்தில் குறுந் திவலையாகி மறைந்து போகப் பயணம் நீள்கிறது; காற்றைப் போன்ற ஒலி நின்றது….




Read more »

வெளிவர இருக்கும் புதுநாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ யில் இருந்து ஒரு சிறு பகுதி

By |

வெளிவர இருக்கும் புதுநாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ யில் இருந்து ஒரு சிறு பகுதி

ஏப்ரல் 3 2023 திண்ணை டாட் காம் இணைய இதழில் அத்தியாயம் 8 பிரசுரமானது ஒன்றும் செய்ய முடியாது. நிகழ்ந்து முடிந்த வரலாறு. மாற்றி நிகழ்த்த, அதுவும் பல நூற்றாண்டுகள் உருண்டோடப் பின்னால் வந்த குயிலி பார்க்க வேண்டுமானால் சும்மா பார்த்துவிட்டுப் போகலாம். திரும்ப வேண்டிய நேரம் இது, தள்ளுவண்டியில் வைத்து இழுத்துப் போன தார்க் கலவை வழியெல்லாம் சிதறிக் கொண்டு போக, ஒரு குத்து சூடான தார் குயிலி கால்மேல் விழுவதாக சிதறி வந்தது. அது…




Read more »