Archive For ஜனவரி 11, 2023

கன்னத்தில் பூத்த ஹைப்ரிட் செவ்வரளி – ஒரு கவிதைத் தொகுதி – சென்னை புத்தகக் காட்சி 2023

By |

கன்னத்தில் பூத்த ஹைப்ரிட் செவ்வரளி – ஒரு கவிதைத் தொகுதி – சென்னை புத்தகக் காட்சி 2023

நேற்று சென்னை புத்தகக் காட்சி 2023-இல் நண்பர் கவிஞர் பெருந்தேவியின் கவிதைத் தொகுப்பு ‘அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது’ வெளியிடப்பட்டது. நூலில் இருந்து ஓர் அருமையான கவிதை – நள்ளிரவில் ஃப்ரஞ்ச் ஃப்ரை தின்பவள் ————————————————- கவிஞர்களுக்கும் பூனைகளுக்கும் நள்ளிரவில் பசிக்கலாம் பெண்களுக்கு நள்ளிரவில் பசிக்கக் கூடாது ஆனால் சிங்கப்பூரில் இரவு கிடையாது 12.46 மொபில் செயலியில் ஃப்ரஞ்ச் ஃப்ரை ஆர்டர் செய்கிறாள் எப்போது வரும் நேரத்தைப் பார்க்கிறாள் வரைபடத்தைப் பார்க்கிறாள் பெயரைப் பார்க்கிறாள் ஏன்…




Read more »

ஷராவதி போற்றுதும் – நடந்தாய் வாழி ஷராவதி

By |

ஷராவதி போற்றுதும் – நடந்தாய் வாழி ஷராவதி

பெருநாவல் மிளகு – ஒரு சிறு பகுதி ———————————————– காவேரி நதியும், கோதாவரியும் கிழக்கு நோக்கிப் பெருகிப் போக, ஷராவதி நதியோ மேற்குத் திசையில் பிரவகித்து ஹொன்னாவரில் அரபிக் கடலில் கலக்கும். அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக  நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து,  குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து…




Read more »