Archive For அக்டோபர் 5, 2023

மருந்து இது நல்மருந்து அனைவர்க்கும் சேர்வதானது

By |

மருந்து இது நல்மருந்து அனைவர்க்கும்  சேர்வதானது

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்யாயம் 34இல் இருந்து எல்லாம் சரிதான், மருந்து சேர்மானம், செய்முறை என்ன? உன்னி நிறைந்த இடங்களில் இது பொது யுகம் CE 5000 காலத்தில் கிடைக்காது என்பதால் CE 300 போய் மாட்டுத் தொழுவங்களில் பூவுலகமெங்கும் சேகரிக்கப்பட வேண்டும். (மேலும்) அவற்றின் இறகு பர்ர்ர்ர் என ஒலியெழுப்பும் வரை அந்த உன்னிகளும், மிளகு விழுதும் உப்பும் கலந்து காடியோடு சேர்த்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்சப்படும். அடுத்து நூறு தவளைகள் அடுப்பில் ஏற்றி.வேண்டாம்…




Read more »

An interaction with an Artificial Intelligence system -தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

By |

An interaction with an Artificial Intelligence system -தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

சுவாரசியமான இந்த உரையாடல் என் நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இடம் பெறுகிறது. இந்த வாரம் திண்ணை இணையப் பத்திரிகையில் முழுமையாக வெளியாகிறது’. ———————————————————————————————————————– போகட்டும். நீ என்ன யோசனை சொல்கிறாய் ஆயுள் நீடிக்க, அதாவது ஆயுள் நீடிக்க ஆய்வு செய்ய? எனக்கு இது குறித்து யோசனை ஏதுமில்லை. நாம் நல்ல நண்பர்கள். எனக்காக யோசித்துப் பார்க்கலாமே. எனக்கு அப்படியான பிரியம், நட்பு, அன்பு போன்ற உணர்வுகள் கிடையாது. வினோதமான யோசனை இருந்தால் கூட சரிதான். எப்படி,…




Read more »

இரா.முருகன் படைப்பு உலகம் – நற்றுணை கலந்துரையாடல்

By |

இரா.முருகன் படைப்பு உலகம் – நற்றுணை கலந்துரையாடல்

கடந்த ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 அன்று கிட்டத்தட்ட முழுநாள் கருத்தரங்கமாக என் படைப்புகள் நண்பர்களால் விரிவாக அலசி ஆராய்ந்து விவாதிக்கப்பட்டன. கருத்தரங்கில் பேசிய, கேட்ட அன்பு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி, அருமை நண்பர் ஜெயமோகனின் நண்பர் குழாத்தில் பட்ட இலக்கிய ஆர்வலர்களான இளையோர் ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்து நடாத்தி, கருத்தரங்கக் காணொளியை இணையத்தில் ஒளிபரப்பி, எந்நேரமும் காண இணையத்தில் வைத்து அமர்க்களப்படுத்தி விட்டார்கள். அவர்களுக்கும் ஆசான் ஜெயமோகனுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஜெயமோகன் அவர்களின்…




Read more »

நீலன் வைத்தியர் இறந்துவிட்டார். நீலன் வைத்தியர் பசியாறுகிறார்

By |

நீலன் வைத்தியர் இறந்துவிட்டார். நீலன் வைத்தியர் பசியாறுகிறார்

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் முக்கியமான அத்தியாயம் – அத்தியாயம் 33 இரா முருகன் நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும். விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின் மின்னஞ்சல் வந்தது. ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை என்பது குழலனுக்கும் வானம்பாடிக்கும் குயிலிக்கும் மட்டும் இப்போதைக்குத் தெரிந்த உண்மை என்பதால் நீலன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இம்மூவரும் மட்டும் பரிமாறிக்கொள்வது…




Read more »

இரா.முருகன் படைப்புகள் – கலந்துரையாடல் – செப்டம்பர் 24 ஞாயிறு சென்னை

By |

இரா.முருகன் படைப்புகள் – கலந்துரையாடல் – செப்டம்பர் 24 ஞாயிறு சென்னை

இரா.முருகன் படைப்புகள் – கலந்துரையாடல் நாள் = செப்டம்பர் 24, ஞாயிறு நேரம் பிற்பகல் 3 முதல் இரவு 8 வரை இடம் கவிக்கோ அரங்கம், மயிலை




Read more »

புதுக் கல்வி – நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து

By |

புதுக் கல்வி – நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து

பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தியா, தெருவில் திரிந்து கொண்டிருந்தியா? பத்து பனிரெண்டு வயதுள்ள ஆண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துச் சத்தம் போட்டார்கள். காரணம் இல்லாமல் இல்லை. காலையில் ஸ்கூல் போனபோது உடுத்தி விட்ட சுத்தமான யூனிபார்ம் முழுக்க திட்டுத் திட்டாக சாக்கடை வண்டலோடு சாயந்திரம் வந்து நின்றால் சத்தம் போடாமல் என்ன செய்வார்கள். ஓடைக் குழாயில் அடைப்பு நீக்குவது எப்படி என்று சிறப்பு வகுப்பு இருந்தது. ஆசிரியர் எப்படி ஓடைக் குழாய்க்குள் புகுந்து நறுமணம்…




Read more »