Archive For செப்டம்பர் 17, 2023
நண்பர்களுக்கு வணக்கம் அடுத்த நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் படைப்புகள் குறித்த நேரடி அமர்வாக வரும் வார இறுதியில் நிகழவுள்ளது 24-09-2023 ஞாயிறு மதியம் 03:00 மணி முதல் 08:00 மணி வரை கவிக்கோ அரங்கம், CIT colony, மைலாப்பூர், சென்னை வரவேற்புரை:- எழுத்தாளர்:- ஜா.ராஜகோபாலன் வாழ்த்துரை:- எழுத்தாளர்.:- ரகுநாதன் ஜெயராமன் அமர்வுகள்:- அ) அரசூர் நாவல்கள் 1.சுரேஷ்பாபு ( நற்றுணை ) 2. காளிப்ரஸாத் ( நற்றுணை ) ஆ) பிற நாவல்கள் 1….
From chapter 33 of Thinai or Sanjeevani நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும். விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின் மின்னஞ்சல் வந்தது. ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை என்பது குழலனுக்கும் வானம்பாடிக்கும் குயிலிக்கும் மட்டும் இப்போதைக்குத் தெரிந்த உண்மை என்பதால் நீலன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இம்மூவரும் மட்டும் பரிமாறிக்கொள்வது நடப்பில் உள்ளது. அவ்வகையில் இன்றைக்கு…
தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 31-இல் இருந்து பெருந்தேளரும் தேளவை மருத்துவ, தொழில்நுட்ப அறிஞர்களும் ஏமப் பெருந்துயில் மண்டபம் ஏக, முதுதேளர் கணிசமாகப் பேசிக் களைத்ததால் அயர்வு வந்ததாக உரைத்து உடன் நித்திரை போனார். இது மறு உயிர்ப்பு இல்லை என்றும் பத்து இருபது நிமிடங்களுக்கு நீடிக்கும் தற்காலிக விழிப்பு என்றும் கூறப்படுகிறது. நீலர் இன்னும் சில நாட்கள் உறங்கியும், முதுபெருந்தேளர் சில நூற்றாண்டுகள் உறங்கியும் விழிக்க, அவர்தம் வலிமையும் அறிவும் முழு வீச்சில் தேளரசு பயனுறக்…
மிளகு அத்தியாயம் ஐம்பத்திமூன்று 2000 லண்டன் – a small portion வெள்ளிக்கிழமை பகலில் மழை எட்டிப் பார்த்து விட்டுப் போனபோது மருது கருங்குதிரை வீதியில் வசிக்கும் மூன்று பெட்ரூம் அபார்ட்மெண்ட் அறைக்குள் மடிக் கணினியில் மூழ்கியிருந்தான். வாசலில் நான்கு ஐந்து முறை அழைப்பு மணி அடிப்பது காதில் விழாமல் மிளகு வாங்கி விற்கும் அப்ளிகேஷன் – செயலியில் முழுக் கவனத்தோடு இருந்தான் அவன். கதவைத் திறந்து உள்ளே வந்து தயக்கத்தோடு மருது என்று இன்னொரு முறை…
தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம் 31-இல் இருந்து ஒரு சிறு பகுதி நீலன் வைத்தியர் எழுந்து விட்டார். பெருந்தேளர்தம் பேரரசு நடாத்தும் நிலந்தரை எங்கணும் இதுதான் பேச்சு. கரடி குட்டிக்கரணம் அடித்தபடி பறந்ததைக் கூட யாரும் லட்சியம் செய்யவில்லை. போன வாரம் வரை இப்படி ஆகியிருந்தால், எப்படி, கரடி கரணம் அடித்தபடி பறந்திருந்தால் வீடுகளில் கலவி செய்திருக்கும் மானுடரும் வளையில் புணர்ந்தபடி இருக்கும் தேள்களும் ரதி விளையாட்டு நிறுத்தி கரடியின் இடுப்பை ஆர்வமாக நோக்கி, ரசிக்க…
நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து – அத்தியாயம் 30 சிறு பகுதி சில்லு பதிக்கச் சொன்னா வல்ல பயகளும் மாட்டேன்னு ஓடிடுவான். இப்போ பாரு அவனவன் வந்து தோசை தின்னுட்டு ஆயுசுக்கும் அவனைக் கொத்தடிமை ஆக்கற சில்லு பதிச்சு விடு பதிச்சு விடுன்னு பிடுங்கி எடுத்து சில்லனாகி விட்டது மொத்த கோகர்மலைநாடே. இந்தச் சில்லுகளை வைத்து ஒவ்வொரு தேள். கரப்பு, மனிதர், இதர ஜீவராசிகள் பெருந்தேளர்ப் பெருமான், அவரது அன்பு மனையாட்டி பெருந்தேள்ப்பெண்டான நீவிர் என…