Archive For ஜனவரி 25, 2023
சென்னை புத்தகக் காட்சி 2023 – Takeaway நடந்தேறிய சென்னை புத்தகக் கண்காட்சி 2023-ல் கிடைத்த அனுபவப் பாடங்கள் – 1)முந்தைய வருடம் 1200 பக்கத்துக்குப் பெருநாவல் எழுதி வெளியிட்டிருந்தாலும், இந்த வருடத்துப் புத்தகக் காட்சிக்குப் புதியதாகக் குறைந்தது இருநூறு பக்கத்துக்கு வருவதாகப் புத்தகம் எழுதி வெளியிடவேண்டும். 2) 400 பக்கத்துக்கு மேல் புத்தகம் இருந்தால், பாகம் ஒன்று, இரண்டு எனப் பிரித்து வெளியிடுவது நன்று. நேற்று என் நண்பர் ஆங்கில எழுத்தாளினி சொன்னது – ‘மிளகு…
நண்பர் ஜெயமோகனின் வழிகாட்டுதற்படி இலக்கிய வீதியில் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்காவாழ் நண்பர்களோடு அண்மையில் (ஜனவரி 21,2023 சனிக்கிழமை) ஒரு நேர்காணலில் பங்கு பெற்றேன். மிக நேர்த்தியாக க.நா.சு உரையாடல் அரங்கு என்ற அவர்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நேர்காணல் பற்றி ஜெயமோகனின் இணையத் தளத்தில் அவரும், ஆஸ்டின் சௌந்தரும் எழுதியிருப்பது இங்கே விஷ்ணுபுரம் இலக்கியச் சந்திப்பு நண்பர் ஜெயமோகனுக்கு நன்றி. vishnupuramamerica.org – நண்பர்களுக்கும் நன்றி பல.
அன்பு நண்பர் ஜெயமோகனின் இணையதளத்தில் இன்று முதல் தகவலாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது, ‘இரா.முருகன் இணையச் சந்திப்பு’. அமெரிக்காவாழ் ஜெமோ அன்பர்களின் இலக்கிய அமைப்பு (vishnupuramusa@gmail.com) நாளை (ஜனவரி 21 2023 சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருக்கும் ஸூம் நிகழ்வுக்கான அழைப்பிதழ் இது. இலக்கிய அன்பர்களைக் கலந்து கொள்ளும்படி கோருகிறேன். நண்பர் ஜெயமோகனுக்கும் அவரது வழிகாட்டலோடு செயல்படும் விஷ்ணுபுரம் அமெரிக்கா இலக்கிய அமைப்புக்கும் என் மனமார்ந்த நன்றி. தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ! இரா.முருகன் இணையச் சந்திப்பு
இடாகினிப் பேய் இது பகுதியாக முன்னர் வெளியானது. அஃது படியா நின்றோர், கூறியது கூறற்றுயர் நீங்கவே தொடக்கத்தில் சில பத்திகள் கடந்து தொடர வேண்டுகிறேன். ‘இடாகினிப் பேய்களும்..’ என்ற பெயரில் என் (அண்மையில் காலம் சென்ற) நண்பர் கோபிகிருஷ்ணன் எழுதிய கதைத்தொகுப்பு பற்றிப் படித்தபோது எனக்கு இந்த இடாகினிப் பேயை எங்கேயோ பார்த்த நினைவு. சிலப்பதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அது வசமாகப் பிடிபட்டது. மாலதி என்ற பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் தரும்போது பால் விக்கி, அந்தக்…
அண்மையில் படித்த துறை சார்ந்த நாவல்களில் வித்தியாசமானது, நண்பர் அபுல் கலாம் ஆசாத் எழுதிய ‘போலி’ . சினிமாவில் சண்டைக்காட்சிகளில் வில்லனாக, கதைப் போக்கின் படி கதாநாயகன், நாயகி, பெண்ணாக வேடமிட்ட கதாநாயகன் இப்படி சகலமானவர்களிடமும் உதை வாங்கும் அடியாளாக, மூன்றாம் மாடியிலிருந்து கீழே மோட்டார் பைக்கில் குதித்து (சரித்திரப் படத்தில் குதிரைமேல் குதித்து) ஓட்டிப் போகும் ஹீரோவின் டூப் ஆக உயிரைப் பணயம் வைத்து வெள்ளித்திரையில் தோன்றி மறையும் இந்த சண்டைக்கலைஞர்களின் அசாத்தியமான வாழ்க்கை கொண்டாடப்பட…
நேற்று சென்னை புத்தகக் காட்சி 2023-இல் நண்பர் கவிஞர் பெருந்தேவியின் கவிதைத் தொகுப்பு ‘அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது’ வெளியிடப்பட்டது. நூலில் இருந்து ஓர் அருமையான கவிதை – நள்ளிரவில் ஃப்ரஞ்ச் ஃப்ரை தின்பவள் ————————————————- கவிஞர்களுக்கும் பூனைகளுக்கும் நள்ளிரவில் பசிக்கலாம் பெண்களுக்கு நள்ளிரவில் பசிக்கக் கூடாது ஆனால் சிங்கப்பூரில் இரவு கிடையாது 12.46 மொபில் செயலியில் ஃப்ரஞ்ச் ஃப்ரை ஆர்டர் செய்கிறாள் எப்போது வரும் நேரத்தைப் பார்க்கிறாள் வரைபடத்தைப் பார்க்கிறாள் பெயரைப் பார்க்கிறாள் ஏன்…