Archive For பிப்ரவரி 27, 2023
இன்று சொல்வனம் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகி இருக்கும் என் ’மிளகு’ பெருநாவல் அத்தியாயம் 40-லிருந்து ஒரு சிறு பகுதி- கெரஸுப்பா கிருஷ்ணஸ்வாமி திருக்கோவிலும் தலபுராணமும் மிளகு பெருநாவலுக்காக நான் எழுதிய பக்திபூர்வமான புனைவு. ஜெரஸூப்பா ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி திருக்கோவில் ஆஷாட மாதம் அஷ்டமி ஜெரஸுப்பா நகரில் புகழ் பெற்ற ஸ்தலங்களில் முதன்மையானது நகருக்கு வடக்கே ஸ்ரீபாத பஹிச்சா என்ற திருவடித் தோட்டம் என்னும் வளம் மிகுந்த செய்வனத்தின் மத்தியில் அமைந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அம்பலம் என்னும் திருக்கோவில் ஆகும்….
திண்ணை.காம் இதழில் என் புது நாவல் தினை வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்த வாரம் வெளியாகியுள்ள அத்தியாயம் மூன்றில் இருந்து // நாவல் -தினை. அத்தியாயம் மூன்று முழுமையாக நாவல் ‘தினை’ அத்தியாயம் மூன்று படிக்க முந்தைய வரியைச் சொடுக்குக //அவன் மலை இறங்க முற்படும்போது துணி மூட்டையைத் தலையிலும், கூழச்சக்கைப் பலாப்பழத்தை கையிடுக்கிலும் இடுக்கியபடி காடன் புலவன்கூட நடந்தான். முடமுதுப் பார்ப்பான் மலைகிழவோனைப் பார்த்துப் பகடியாக உருவாக்கப்பட்டவனா என்று கேட்க நினைத்து வாயைத் திறந்து, வேண்டாம் என்று…
உலகளவில் பிரபலமடைந்துள்ள செயற்கை அறிவு உரையாடல் அமைப்பு ChatGPT=யோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்….. நான் – உங்களுக்கு பாரதியாரைத் தெரியுமா? கணினி – பாரதியார் என்பவர் இந்தியாவின் மதுரை பகுதியில் பிறந்த ஒரு கவிஞர், பாடலாசிரியர், பேராசிரியர் மற்றும் சிந்தனைத் தலைவர். அவர் தமிழ் இலக்கிய உலகில் உயர்ந்த இடம் பெற்றவர். அவர் செய்த பலருக்கு பலர் உள்ளனர். நான் – பாரதியாரின் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா? கணினி – எனது படிக்கும் அளவுக்கு பாரதியாரின் கவிதைகள் தமிழ்…
குறிஞ்சிக்கு அலுப்பும் எரிச்சலுமாக வந்தது. சமவெளி மனுஷர்களுக்கு கால்நடையாகவும், எருது இழுக்கும் வண்டி ஏறியும், குதிரை சவாரி செய்தும், ஒட்டகம் ஏறிப் பாலை நிலம் கடந்தும் சதா மலைகளுக்குத் தாவியேறி அங்கே திமிர்த்து அலையும் பெண்டிரைக் கண்ணிமைக்காது நோக்கி வருவதில் என்ன ஓர் ஈடுபாடு! கொம்புத் தேன், தினை மாவு, வரகரிசி, உலர்ந்த உடும்பு மாமிசம் என்று பெருமளவு மலைபடு பொருள்கள் வாங்கி, அரிசியும், கேப்பையும், மதுவும் கொடுத்துப் பண்ட மாற்று செய்வதில் அவர்களுக்கு ஆர்வம் நிறைய…
Regret to know of the sad demise of Thiru Professor Pas Pasupathi. we have lost a walking encyclopedia of Tamil language, Tamil culture . Tamil literature and music. He was another Roja Muthiah with a huge digitized data of old Tamil magazines, with thousands of metalinks in his neurons. When I was writing my novel…