Archive For மார்ச் 31, 2023

ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டனர் – புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ முன்னுரை

By |

ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டனர் – புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ முன்னுரை

முன்னுரை – நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ ஒரு நாவலில் அல்லது சிறுகதை, குறுநாவலில் ஒருவர் கழுகு மாதிரிப் பறந்தால் அது புராணம். புராணம் பற்றிக் கேள்வி எழுப்ப முடியாது. அந்த மனுஷர் வானத்திலேறிப் பறக்காமல், மசாலா குளித்து எண்ணெய்ச் சட்டியில் பொறிபட முன்பு உயிர்த்திருந்த கோழி போலத் தரைக்கு ஐந்தடி உயரே பறக்க, அப்படிப் பறக்கும் மனிதனை லட்சியம் செய்யாமல் கூட நடக்கிறவன் போல் பாவித்து மற்றவர்கள் அவனோடு உரையாடிப் போனால் அது மேஜிக்கல் ரியலிசம்….




Read more »

புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ தமிழ்ப் புத்தாண்டு 2023 வெளியீடாக ..

By |

புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’  தமிழ்ப் புத்தாண்டு 2023 வெளியீடாக ..

புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 2023 வெளியீடாக இருக்கக் கூடும் நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது. ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை. ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள் பத்தரை மணி ஆகியும் புறப்படவில்லை. பயண அலுவலகத்தின் புறப்பாடு பகுதியில் ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்குப் பயணம்…




Read more »

பெருநாவல் மிளகு – சட்டகக் கவி ஒன்று – பாட்டுடைத் தலைவியர் இரண்டு

By |

பெருநாவல் மிளகு – சட்டகக் கவி ஒன்று – பாட்டுடைத் தலைவியர் இரண்டு

மிளகு பெருநாவலில் இருந்து – சொல்வனம் இணைய இதழில் மார்ச் 26 2023 பிரசுரமானதன் ஒரு சிறு பகுதி ——————————————————————————————– சென்னா அப்பக்கா அரசியாகிய பிரதேசமான உள்ளாலுக்கும் புட்டிகே-க்கும் சுய விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தது இருபது வருடம் முன்பு. மங்கலாபுரமும் கொல்லூரும் சென்று தொழுது உள்ளால் நகரம் வந்தாள் சென்னா அப்போது. இப்போது தளர்ச்சி காரணம் மிர்ஜான் கோட்டையிலிருந்து உள்ளாலுக்கு நேரே வந்துவிடுவாள் என்று அப்பக்கா மகாராணிக்குத் தோன்றியது. போன தடவை வந்தபோது சிரித்து மாளவில்லை…




Read more »

காலப் பயணத்தில் சந்தித்த இரண்டு வயது உத்தமதான புரம் சாமிநாதய்யர் – பொது யுகம் 1854

By |

காலப் பயணத்தில் சந்தித்த இரண்டு வயது உத்தமதான புரம் சாமிநாதய்யர் – பொது யுகம் 1854

மார்ச் 26 2023 திண்ணை இணைய இதழில் வெளியாகியிருக்கும் நாவல் – தினை அல்லது சஞ்சீவனி- ஒரு சிறு பகுதி காலப் படகின் நாற்பரிமாணக் கூறுகளை சற்றே கணினி கொண்டு திருத்தி தன்னை எல்லோரும் பார்க்கக் கூடியபடி அலகுகளை மாற்றியமைத்தாள். பத்து வினாடியில், அவள் அணிந்திருந்த உடுப்பு கால்சராய், மேல்சட்டையிலிருந்து புடவை, ரவிக்கை ஆனது. தலைமுடியைக் கைப்பையிலிருந்து எடுத்த சீப்பால் வாரி, புடவைத் தலைப்பை நேராக்கிக் கொண்டு நடந்தாள். வாயில் மென்றிருந்த சூயிங் கம்மை எதிர்ப்பட்ட வீட்டு…




Read more »

புதுப் பதிப்பு காணும், என்றும் புதிய நாவல் ’1975’ –

By |

புதுப் பதிப்பு காணும், என்றும் புதிய நாவல் ’1975’ –

என் இன்னொரு நாவல் 1975 ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாகப் புதுப் பதிப்பு கண்டிருக்கிறது. நாவலில் இருந்து, முன்னுரை ———————————————————————————————– தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்ஷன் நெம்பர் 40, ரெட்டைத்தெரு, தியூப்ளே வீதி என்ற இரு நாவல்களாக வெளிவந்ததும் அந்த உத்தியை இன்னும் சற்று நீட்சி அடைய வைத்து, புனைவின் சுதந்திரமும், நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி காட்டும் வரலாற்றின் தகவல் துல்லியமும், ஒருங்கமைதியும், செறிவுமாக ஒரு படைப்பு எழுதிப் பார்க்கத் தோன்றியது. வழக்கம் போல் சிறுகதைப் பொறியைக்…




Read more »

அவசர அர்ச்சனை, நைவேத்தியம் – 1963 மார்கழி காலை

By |

அவசர அர்ச்சனை, நைவேத்தியம் – 1963 மார்கழி காலை

புதுப் பதிப்பு காணும் என் நூல்கள் வரிசையில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் புது வெளியீடாக இந்த ஆண்டு வந்த நாவல்கள் – அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரோ, தியூப்ளே வீதி இப்போது புதுப் பதிப்பு கண்ட பயோ பிக்‌ஷனல் நாவல் – நெம்பர் 40, ரெட்டைத் தெரு நெம்பர் 40, ரெட்டைத்தெரு நாவலில் இருந்து ————————————————————————————————- மார்கழி விடிகாலையில் தலையில் அந்தப் பட்டுத் துணியைத் தோளில் வழிகிற கம்பீரமான முண்டாசாகக் கட்டிக்கொண்டு மீசை…




Read more »