Archive For மார்ச் 22, 2023
எடிட்டிங் ஒருவாறு பூர்த்தியாக்கி என் அடுத்த நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ பதிப்பாளர்களுக்கு first cut version ஆக அனுப்பப் பட்டுள்ளது நாவல் அமைப்பு – பூர்வாங்கம் அத்தியாயம் 1 – 15 மத்தியாங்கம் அத்தியாயம் 16- 25 பூர்வ உத்தராங்கம் அத்தியாயம் 26 -40 உத்தராங்கம் அத்தியாயம் 41-44 பூர்த்தி முக்கிய கதாபாத்திரங்கள் குயிலி, வானம்பாடி பொது யுகம் 5000 பெருந்தேளர் பொது யுகம் 5000 குழலன் பொது யுகம் 5200 கர்ப்பூரம் பொது யுகம்…
எல்லா அலுவலக, சமூக இடையாடலுக்கான நுகர்வோர் பொருள் விற்கும் கடைகள், உணவு விடுதிகள் என்று பல நிறுவனங்களில் தேளர், கரப்பர், மானுடர் என்ற இந்த மூன்று இனங்களின் தனிவெளியில் அவரவர் இனம் தாண்டாமல் வேண்டிய அளவு மட்டும் ஊடாடி வாழ்கிறார்கள். உணவைப் பொறுத்து மானுட இன உணவின் சுவைகளை மற்றவர்களும் வரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் அழுகிக் கெட்டுப்போன உணவை பாகம் செய்து கரப்பர்களுக்கு மனதுக்கு உகந்த உணவாக உண்ணத் தருவது நீடிக்கிறது. அந்த உணவு உருவாக்குமிடங்கள் மனுஷர்களுக்கான…
என் புது நாவல் தினை அத்தியாயம் 6 திண்ணை இணைய இதழில் பிரசுரமாகிறது. அதிலிருந்து – இந்தப் பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்ததும் வானம்பாடி அதுவரை தங்கி இருந்த அரசு குடியிருப்பில் இருந்து குயிலியின் பெரிய இருப்பிடத்துக்கு வந்து விட்டாள். அரசுக் குடியிருப்பில் கரப்புத் தொல்லை அதிகம் என்று ஒரு தடவை அவசரமாகச் சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டாள் வானம்பாடி. இரண்டு விதமாகப் பெரிய கரப்புகள் மானுடப் பெண்டிரைத் தொந்தரவு செய்வதுண்டு. அவர்கள் வீதியில் போகும்போது உருவம்…
திண்ணை டாட் காம் இணைய இதழில் வெளியாகும் என் புது நாவல் தினை – ஒரு சிறு பகுதி புது நாவல் தினை – நல்ல உணவு தன்னைத் தானே சமைத்துக்கொள்ளும் ”மகா ப்ரபு, சங்க காலம் யார் போனது? அந்தக் காலத்தைப் பகுதி வனைந்த நிகர்மெய் வெளியில் அல்லவோ எங்களை அனுப்பி வைத்தீர்கள்”. குயிலி சிரித்தபடி அமர்ந்தாள். பெருந்தேளர் சிரிக்க அவையே நகைத்தது. “சுனையும், மலையும், கூத்துப் பரம்பும் பகுதி உண்மை. மற்றபடி அங்கே இருந்தவர்கள்…
என் புது நாவல் தினை, இணைய இதழ் திண்ணையில் வாராவாரம் வெளியாகிறது. இந்த வாரம் வெளியாகி இருக்கும் அத்தியாயம் -5 சில பகுதிகள் பெருந்தேளர். ஒப்பற்ற, பிரம்மாண்டமான, அனைத்து அதிகாரத்துக்கும் ஊற்றுக்கண்ணான பெருந்தேளர். சகல வல்லமையும் கொண்ட, அறிவின் ஏக உறைவிடமான மகத்தான ஆளுமை பெருந்தேளர். ஊரும், நடக்கும், ஓடும், நீந்தும், பறக்கும் சகல உயிரினங்களுக்கும், கர்ப்பத்திலிருக்கும் சிசு முதல் காடேகக் காத்திருக்கும் விருத்தர் வரை அன்போடு எந்நேரமும் வழிநடத்தலும், வழிகாட்டுதலும் செய்த, செய்யும், என்றும் செய்யக்…