Archive For மே 31, 2023

தினை அல்லது சஞ்சீவனி – ஆழிப் பேரலை அடித்துப் போன பெருவெளியில் மூலிகை தேடும் படலம்

By |

தினை அல்லது சஞ்சீவனி – ஆழிப் பேரலை அடித்துப் போன பெருவெளியில் மூலிகை தேடும் படலம்

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து மருத்துவர் பகடு பூட்டிய ரதம் செலுத்தி, என்றால், எருது பூட்டிய வில்வண்டி ஏறி புறநகர் வந்து சேர்ந்தபோது குற்றுச் செடிகள் முளைத்த தரிசு முழுக்கக் குதங்கள் உயர்ந்திருக்கக் கண்டாரேயன்றி மூலிகை ஏதும் முளைத்திருக்கப் பார்த்திருந்தாரில்லை. ஆயுள் நீட்டிக்கும் மருந்து உண்டாக்கத் தேவையான ஐந்து மூலிகைகளில் இரண்டு, மழை பெய்த ராத்திரிகளில் மலர்ந்து விடியலில் உதிர்ந்து போகும் வகையானவை. மீதி மூன்றில் இரண்டு, சகஜமாகக் கிட்டும் நாயுருவியும் நெல்பரணியும். ஏகமாகக் கிடைக்கும்,…




Read more »

ஈரமான உட்சுவர் கொண்ட குகைகளில் அலைந்து திரியும் வைத்தியர்கள்

By |

ஈரமான உட்சுவர் கொண்ட குகைகளில் அலைந்து திரியும் வைத்தியர்கள்

போன வாரம் வெளியாகியுள்ள என் நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இருந்து குகை. குகைக்குள் இருந்து இடமும் வலமும் பாதை பிரிந்து இன்னும் இரண்டு குகைகள். அவற்றில் ஒன்றில் பிரவேசிக்க தண்ணீர் குகையின் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இந்தக் குகையைக் கடந்தால் அந்தகாரம் தான். இருள் பிரபஞ்ச இருள்பொதியோடு இணைந்து பிசையப்பட்டுத் தனிமை இழக்கக் கூடும். இடது பக்கம் பாதை பிரியும் குகைக்கு மேலே சிறு பாறை நகர்வு வழியே மறையும் சூரிய…




Read more »

மருந்தோடு வந்த யவனனும் தெருவெங்கும் திரிதரு மாந்தரும்

By |

மருந்தோடு வந்த யவனனும் தெருவெங்கும் திரிதரு மாந்தரும்

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் யவனன் வரும் பதினைந்தாம் அத்தியாயத்தில் இருந்து மருத்துவர் நீலன் தர்மனார் தினசரி வாழ்க்கை ராஜநர்த்தகியின் வனப்புள்ள குதம் பற்றிய கவலைகளில் ஆழ்ந்திருக்கக் கடந்து போன தை மாதம் தைப்பொங்கலுக்கு அடுத்த வாவு நாளில் அவரைத் தேடி ஒரு யவனன் வந்தான். நல்ல உயரமும் தீர்க்கமான நாசியும் விநோத உடுப்பும் மின்னல் போல் காலில் பளிச்சிடும் காலணிகளுமாக வந்தவன் கோட்டை மதில் அருகே நின்று கொச்சைத் தமிழில் உரக்கக் கேட்டது – மருத்துவன்…




Read more »

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ வெளியாகி விட்டது

By |

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ வெளியாகி விட்டது

ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் உரிமையாளர்களும் இந்நாவல் பதிப்பாளர்களுமான நண்பர்கள் காயத்ரி, ராம்ஜி நரசிம்மன் எழுதுகிறார்கள்- மிளகு நாவலின் வெற்றியைத் தொடர்ந்து EraMurukan Ramasami எழுதிய தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சாகி கைக்கு கிடைத்து விட்டது. முதல் முறையாக அவர் நாவலை கெட்டி அட்டையில் அச்சிடுவதில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பெருமை கொள்கிறது. 200 பிரதிகள் மட்டுமே கெட்டி அட்டையில் அச்சிடப்படும். முதல் 100 பிரதிகளுக்கு மட்டும் நாற்பது சதவீதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறோம். இதை வாங்கிப் படித்து…




Read more »

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ – அணையப் போகும் பழந்தீ

By |

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ – அணையப் போகும் பழந்தீ

வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள். இலுப்பெண்ணெய் தாராளமாக ஊற்றிப் பெரிய பருத்திப் பஞ்சுத் திரிகள் எண்ணெய் நனைத்துக் கொளுத்திய சுடர்கள் தெருவெங்கும் வீட்டு மாடப்புரைகளில் இருந்து ஒளி வீச இன்னும் சிறிது நேரத்தில் இரவு நிலம் போர்த்தும். குயிலிக்கு வியப்பாக இருந்தது. ஐம்பதாம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்கு வந்து சேர்ந்தாலும், இரவும் பகலும் அந்தியும் இன்னும் எந்த வித்தியாசமும் இல்லாமல் வந்துதான் போகும். எப்போதும்…




Read more »

கெருஸோப்பாவில் இருந்து ஹொன்னாவருக்கு ஒரு பயணம் – பெருநாவல் மிளகுவில் இருந்து

By |

கெருஸோப்பாவில் இருந்து ஹொன்னாவருக்கு ஒரு பயணம் – பெருநாவல் மிளகுவில் இருந்து

வேலைக்கு விடுப்பு வந்த தினம் என்று நிறைவேற்றிக் கதவு சார்த்திப் பூட்டுப் போட யாருக்கும் கஷ்டமில்லை. இன்று அப்படி கடைவீதி உறங்கும் பௌர்ணமி வாவுதினம். அழகான அதிகாலை. பௌர்ணமி வாவுதினமும், அமாவாசை வாவுதினமும் சிறுமிளகு பெருநாவல் சிறுபகுதிக்கு சொடுக்குகவன் மஞ்சுநாத்தின் அப்பா பரமன் பெரும்பாலும் ஜெருஸோப்பா வீட்டில் இருக்கும் நாட்கள் இல்லை. ஹொன்னாவருக்கு வந்து ரதவீதி மிட்டாய் அங்காடியில் ஏதாவது புது இனிப்புப் பலகாரம் செய்து பார்க்கும் முயற்சிகளில் இருப்பார் பரமன். வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால், ஊர்…




Read more »