Archive For ஆகஸ்ட் 31, 2023
புது நாவலில் அத்தியாயம் மூன்றில் இருந்து மருத்துவம் பார்க்க மந்திரவாதியை அழைக்க, ஒட்டகச் சிவிங்கி வந்து நிற்கிற அத்தியாயம் ஆதன் நல்ல மனிதன். முழுநிலவு நாட்களில் மட்டும் மனம் தரிகெட்டு ஓட அவன் ஒரு பக்கமும் இடுப்பு முண்டு இன்னொரு பக்கமுமாக நடுராத்திரிக்கு ஊருணிக்கரையில் அமர்ந்திருப்பது தவிர்த்தால். அது குடிப்பதற்கான நல்ல தண்ணி ஊருணி. அங்கே இவன் குளிப்பான் பௌர்ணமி ராத்திரியில். அவனைத் தவிர ஊர்ணியை அடுத்த பிரசவ ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளின் பீத்துணியை அலசிப் போவதும்…
லூசியா விடிந்து கொண்டிருக்கும்போதே போஜன சாலைக்கு வந்து விட்டிருந்தாள். வழக்கமாக பகல் பனிரெண்டுக்கு வாடிக்கையாளர்கள் உணவருந்த வர ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு காலை பத்து மணிக்கே ஒரு பெரிய கூட்டமாக பட்டாளத்துக்காரர்கள் வருகிறார்களாம். சாயந்திரம் சூரத்துக்கும், அங்கிருந்து லிஸ்பனுக்கும் கப்பல் பயணம் போகிறவர்கள் என்பதால் காலைச் சாப்பாடாகவும் இல்லாமல், பகல் உணவாகவும் இல்லாமல், ரெண்டுங்கெட்டான் நேரத்தில் உண்டுவிட்டுக் கப்பலேறுவார்கள். இவர்கள் அவசரத்துக்குக் கோழிகள் தாமே ஓடிவந்து கழுத்தறுத்துக்கொண்டு, மிளகு விழுதில் விழுந்து புரண்டு, மேலெல்லாம் மிளகுக் காப்பு புரட்டிக்கொண்டு,…
புது நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து புது நாவல் அத்தியாயம் இரண்டு மெழுகு திரிகள் பிரார்த்தனை நிலையம் போல் எரிந்து ஒளியைப் பரப்பும் குகை அது. பழையதாக சுவரெல்லாம் தண்ணீர் கசிந்து உப்புப் பூத்து பச்சையாக பாசி பிடித்த குடைவரை இருப்பிடம். இரண்டு மில்லியன் மனித இனமும், மற்றபடி மொத்தமாக ஒன்றரை மில்லியன் மற்று உயிரினங்களும் சுவாசித்திருக்கும் உள்வெளி இந்தக் குகை. அடுக்கக வசதி நிறைந்த குடியிருப்புகளில் தகுதி நோக்கி பலதரப்பட்ட உயிரினங்கள் வசிக்குமிடம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது….
இன்று ஒரு முக்கியமான தினம் என்பதால் புது நாவல் (பெயரும் அதுதான்!) எழுதத் தொடங்கி இரண்டு அத்தியாயங்கள் எழுதினேன். தினை அல்லது சஞ்சீவனி என்ற என் முந்தைய ஃபாண்டஸி நாவலின் தொடர்ச்சியும் நீட்சியுமாக புது நாவல் அமையும். அவ்வப்போது இந்த இணையத் தளத்தில் ’ இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக’ புது நாவல் எந்தத் திசையில் எப்படி நடக்கிறது என்று சூசனை காட்ட அத்தியாயங்களிலிருந்து ஒன்றிரண்டு பக்கங்கள் பிரசுரமாகும். கிருஷ்ணார்ப்பணம் ======================================================================================================================= புது நாவல் அத்தியாயம் 1…
ராமோஜி ஆங்கரே – எலிப்பொறிச் சத்திரம் 1707 இரண்டு ஒட்டகங்கள். ஒரு மட்டக்குதிரை. ஒரு பல்லக்கு. பல்லக்குத் தூக்கிகளாகவும், ஒட்டகம் நடத்திக் கூட்டிப் போகிறவர்களுமாக மொத்தம் பனிரெண்டு காலாட்கள். மட்டக்குதிரையில் ஆரோகணித்து கெச்சலாக ஒரு காரியஸ்தன். கூடவே மூங்கில் கடகங்களைத் தலையில் சுமந்தபடி ஓடும் இரண்டு பேர். ஆக பதினைந்து பேர் சேர்ந்து வர சுவர்ணதுர்க்கத்தில் இருந்து புறப்பட்டது போன ஞாயிற்றுக்கிழமை காலையில். மராட்டிய சமுத்திர சேனையில் படைத் தளபதியான ராமோஜி ஆங்கரே யாத்திரையில் இருக்கிறான். மனைவி…
அத்தியாயம் 51 இல் இருந்து சங்கரன் எழுந்து நின்றார். பாத்ரூம் போகணும் என்றார். அவரை தாங்கிப் பிடித்தபடி விமான டாய்லெட்டுக்கு நடத்திக் கூட்டிப் போனாள் வசந்தி. “கதவை மூடலே. நானும் இருக்கேன். பயப்படாமல் போங்கோ. யாரும் துப்பாக்கி வச்சுண்டு நிற்கலே வாசல்லே” என்றாள் வசந்தி, டாய்லெட் கதவைத் திறந்தபடிக்கு வைத்து, சங்கரனை கமோடில் இருத்தியபடி. இவர்கள் பத்து நிமிடம் வரவில்லையே என்று தெரிசா இருக்கைகளின் ஊடாக நடந்து கழிவறை வாசலுக்கு வந்தாள். “தெரிசா, அடல்ட் டயாபர் போட்டுவிட்டு…