Archive For செப்டம்பர் 12, 2023

சாவு தீர்க்க மருந்தொன்றிருக்குது

By |

சாவு தீர்க்க மருந்தொன்றிருக்குது

தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 31-இல் இருந்து பெருந்தேளரும் தேளவை மருத்துவ, தொழில்நுட்ப அறிஞர்களும் ஏமப் பெருந்துயில் மண்டபம் ஏக, முதுதேளர் கணிசமாகப் பேசிக் களைத்ததால் அயர்வு வந்ததாக உரைத்து உடன் நித்திரை போனார். இது மறு உயிர்ப்பு இல்லை என்றும் பத்து இருபது நிமிடங்களுக்கு நீடிக்கும் தற்காலிக விழிப்பு என்றும் கூறப்படுகிறது. நீலர் இன்னும் சில நாட்கள் உறங்கியும், முதுபெருந்தேளர் சில நூற்றாண்டுகள் உறங்கியும் விழிக்க, அவர்தம் வலிமையும் அறிவும் முழு வீச்சில் தேளரசு பயனுறக்…




Read more »

the novel MILAGU – excerpts chapter 53

By |

the novel MILAGU – excerpts chapter 53

மிளகு அத்தியாயம் ஐம்பத்திமூன்று 2000 லண்டன் – a small portion வெள்ளிக்கிழமை பகலில் மழை எட்டிப் பார்த்து விட்டுப் போனபோது மருது கருங்குதிரை வீதியில் வசிக்கும் மூன்று பெட்ரூம் அபார்ட்மெண்ட் அறைக்குள் மடிக் கணினியில் மூழ்கியிருந்தான். வாசலில் நான்கு ஐந்து முறை அழைப்பு மணி அடிப்பது காதில் விழாமல் மிளகு வாங்கி விற்கும் அப்ளிகேஷன் – செயலியில் முழுக் கவனத்தோடு இருந்தான் அவன். கதவைத் திறந்து உள்ளே வந்து தயக்கத்தோடு மருது என்று இன்னொரு முறை…




Read more »

பத்து நூறு ஆண்டுகள் துயில் கொண்டு கண்விழித்த நீலன் வைத்தியர் – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

By |

பத்து நூறு ஆண்டுகள் துயில் கொண்டு கண்விழித்த நீலன் வைத்தியர் – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம் 31-இல் இருந்து ஒரு சிறு பகுதி நீலன் வைத்தியர் எழுந்து விட்டார். பெருந்தேளர்தம் பேரரசு நடாத்தும் நிலந்தரை எங்கணும் இதுதான் பேச்சு. கரடி குட்டிக்கரணம் அடித்தபடி பறந்ததைக் கூட யாரும் லட்சியம் செய்யவில்லை. போன வாரம் வரை இப்படி ஆகியிருந்தால், எப்படி, கரடி கரணம் அடித்தபடி பறந்திருந்தால் வீடுகளில் கலவி செய்திருக்கும் மானுடரும் வளையில் புணர்ந்தபடி இருக்கும் தேள்களும் ரதி விளையாட்டு நிறுத்தி கரடியின் இடுப்பை ஆர்வமாக நோக்கி, ரசிக்க…




Read more »

நெய் வடியும் கேசரியும், தோசைகளும், பயோ சில்லுகளும்

By |

நெய் வடியும் கேசரியும், தோசைகளும், பயோ சில்லுகளும்

நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து – அத்தியாயம் 30 சிறு பகுதி சில்லு பதிக்கச் சொன்னா வல்ல பயகளும் மாட்டேன்னு ஓடிடுவான். இப்போ பாரு அவனவன் வந்து தோசை தின்னுட்டு ஆயுசுக்கும் அவனைக் கொத்தடிமை ஆக்கற சில்லு பதிச்சு விடு பதிச்சு விடுன்னு பிடுங்கி எடுத்து சில்லனாகி விட்டது மொத்த கோகர்மலைநாடே. இந்தச் சில்லுகளை வைத்து ஒவ்வொரு தேள். கரப்பு, மனிதர், இதர ஜீவராசிகள் பெருந்தேளர்ப் பெருமான், அவரது அன்பு மனையாட்டி பெருந்தேள்ப்பெண்டான நீவிர் என…




Read more »

ஆயுள் நீட்டிப்பு மருந்து பருகப் பயிற்சி அளித்தபோது

By |

ஆயுள் நீட்டிப்பு மருந்து பருகப் பயிற்சி அளித்தபோது

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம் 30 இல் இருந்து ஒரு சிறு பகுதி பெருந்தேளர் மாளிகை விழாக் கோலம் பூண்டிருந்தது. விடியற்காலையில் பெருந்தேளர் சஞ்சீவனி எதிர்கொள்ளுதலைத் தலையாய கடமையாகப் பிரகடனப்படுத்த இருக்கிறார். ஒவ்வொரு குடும்பமும் பெருமகிழ்ச்சியோடு சாவா மருந்து பருகி நீள உயிர்க்கப் போகிறார்கள். குடும்பம் இல்லாத ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் சஞ்சீவனி பெருமருந்தை உடலில் ஏற்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழத் தயாராக இருக்கப் போகிறார்கள். அதிகம் யாரும் செலவழிக்கக் கையைக் கட்டிக்கொண்டு தேளரசு வேடிக்கை…




Read more »

புது நாவல் ஆல்ட் சி பிரபஞ்சத்தில் அறிமுகமான கடவுள்

By |

புது நாவல்  ஆல்ட் சி பிரபஞ்சத்தில் அறிமுகமான கடவுள்

உல்லுலூ என்ற இளைய கடவுள் -ஆல்ட் சி பிரபஞ்சத்திலிருந்து வந்தது தான் வந்தாய். அந்த அழுக்குச் சிறகுப் பெண்ணுக்கும் அவளது அடிவருடிகளுக்கும் நியாயத்தைச் சொல்லிப் போயேன் பழுப்பு நிற முடை நாற்றச் சிறகடித்து ஊருணிக் கிணறுகளைச் சுற்றியபடி ஒருவருக்கொருவர் பேன் பார்த்து மிதக்கும் ஒரு பிரிவு பணியாளர் தேவதைகள் ஆதனின் கை பிடித்து இழுத்துக் கூறின. அவன் தோள் பற்றி இரு வகைச் சிறகிகளும் அவனது கவனத்தை ஈர்த்து அவரவர்கள் தரப்பு நியாயத்தைச் சொல்ல முயன்றன. அப்போது…




Read more »