Archive For நவம்பர் 16, 2023

என் புதுச் சிறுகதை

By |

என் புதுச் சிறுகதை

அண்மையில் எழுதி லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் பிரசுரமாகியிருக்கும் என் சிறுகதை- விசிறி விசிறி சிறுகதை இரா.முருகன் கோபி பழைய மார்க்கெட்டை ஒரு தடவை சுற்றி வந்து விட்டான். சரஸ்வதி பூஜை என்பதால் பழைய புத்தகக்கடைகள் சீக்கிரமாகவே திறந்திருந்தன. நாயனார் கடையில் இன்னும் வாடிக்கையாளர்கள் கூட்டமாகக் குவியவில்லை. பாதிக் கடையில் மர அலமாரிகளும் சாக்குப்பைகளும் பழைய புத்தகங்களாக நிரம்பி வழிய, மரப்பலகை தடுத்து அடுத்த பகுதியில் பழைய மேஜை ஃபேன், பழைய எலக்ட்ரிக் ஹீட்டர், சுவர்க் கடிகாரம்…




Read more »

தேநீர் உபச்சாரச் சடங்கு – பொது யுகம் 5000

By |

தேநீர் உபச்சாரச் சடங்கு – பொது யுகம் 5000

என் புனைவுப் புதினம் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 39இலிருந்து ———————————————————————————————— நீர் கொதிக்க வைக்கப்பட்டது. இஞ்சியும் ஏலக்காயும் சேர்த்து கலுவத்தில் இடிக்கப்பட்டது. கலுவத்துக்கு மருந்து இடிப்பது தவிர இப்படி தேநீருக்கு இஞ்சியும் சுக்கும் இடிப்பதும் பெரும்பயன் தான். வைத்தியர் வீடு என்பதால் கலுவம் இருக்கிறது. வைத்தியர் அல்லாதவர்கள் கலுவத்துக்கு எங்கே போவார்கள்? நல்ல இஞ்சி சேர்த்த தேநீர் வேண்டுமென்றால் கலுவம் வாங்கித்தான் ஆக வேண்டும் அவர்களும். ஏலம், இஞ்சி இடித்தது வென்னீரில் சேர்க்கப்பட்டு தேயிலையோடு கொதிக்க…




Read more »

நாலாம் நூற்றாண்டில் காப்பி இருந்தது

By |

நாலாம் நூற்றாண்டில் காப்பி இருந்தது

என் நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 39-இல் இருந்து நீலன் வைத்தியர், அதாவது அசல் நீலன், நார்த்தங்காய்ச் சாறில் இஞ்சி பிழிந்து வெல்லம் கலந்து வைத்திருந்த காய்கறி ரசத்தைக் குடுவையோடு எடுத்தார். அது சஞ்சீவனி இல்லை.அவரை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பானம். குளிரக்குளிர குளிர்ந்த சுனை நீர் கலந்தோ, ஒரு நிமிடம் அடுப்பில் ஏற்றிச் சூடு படுத்தியோ அதைப் பருகலாம். இப்போது உறக்கத்தையும் வென்று இரவு முழுவதும் கண்ணுறங்காமல் சஞ்சீவனியை சோதனை செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார்….




Read more »

பிரபஞ்சங்கள் இடையே சஞ்சரிக்கும் ஷேப் ஷிஃப்டர் பெண்கள்

By |

என் நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் shape shifter பிசாசுகள் வந்த போது சாரி, நாங்க இங்கே நீண்டநாள் தங்கின பிசாசுகள். நீங்க – உள்ளே வந்தவை இருந்த இரண்டைக் கேட்டன. நாங்க புதுசா வந்திருக்கோம். இப்போ போயிடுவோம் என்று மரியாதையோடு சொல்லின கர்ப்பூரத்தை வம்பிழுத்த இரண்டும். நீங்க இங்கே இடம் எடுத்துக்கறதுன்னா எடுத்துக்குங்க என்று வீட்டுப் பிசாசுகள் சகஜம் காட்ட, வேண்டாம், நாங்க போகணும் என்று பிரியத்தோடு மறுத்தன வந்த இரண்டும். வீட்டுப் பைசாசங்கள் வெளியே…




Read more »

வந்த பைசாசங்களும் இருந்த பைசாசங்களும்

By |

வந்த பைசாசங்களும் இருந்த பைசாசங்களும்

என் நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து மசகு போல் அடர்த்தியான களிம்பு ஏதோ அடையடையாக அப்பிய கிழிந்த பிடவை உடுத்திய இரண்டும் அந்தச் சேலையையே மேலே தலைப்பு உயர்த்தி மார்பை மூடியிருந்தன. அவை பெருத்த முலைகள் என்று கர்ப்பூரத்துக்குத் தோன்றியது. கழுதைக்குப் பேர் கர்ப்பூரமா, எழுந்திருடா என்று அவன் தலைக்கு வெகு அருகே தலை குனிந்து ஒன்று கிரீச்சிட குமட்டி வாந்தி எடுத்தபடி கிடந்தான் அவன். மிகுந்த சிரமத்துடன் கண் திறந்து பார்க்க, தலையில் மயிர்…




Read more »

கர்ப்பூரனைச் சந்திக்க வந்த இரண்டு பைசாசங்கள்

By |

கர்ப்பூரனைச் சந்திக்க வந்த இரண்டு பைசாசங்கள்

திண்ணை டாட் காம் இணையத் தளத்தில் நாவல் தினை அல்லது சஞ்சீவனியிலிருந்து கர்ப்பூரம் நடுராத்திரிக்கு இரண்டு பிசாசுகளைக் கண்டான். அவன் படுக்கையில் அவன் தலைமாட்டில் ஒன்றும் கால்மாட்டில் இன்னொன்றுமாக துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தன அவை. அவற்றின் கண்கள் குழிந்திருந்தன. பாதி திறந்த இமைகளில் பீழை கனமாக ஒட்டியிருந்தது. வாய் தான் முழு துர்நாற்றத்துக்கும் காரணம் என்று தெரிய வாய் திறந்து வாச்சி வாச்சியாக நான்கு வரிசை மஞ்சள் பல் காட்டி ஏன்யா என்று ஒரு பிசாசு…




Read more »