Archive For நவம்பர் 5, 2023
மிளகு பெருநாவல் அத்தியாயம் 56-இல் இருந்து உளிகள் விடிந்ததிலிருந்து ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. தனி உளி எழுப்புவது ஒலி இல்லை. பூவில் தேன் அருந்தப் போய் அமரும் தேனியின் மெல்லிய இறகுச் சிலிர்ப்பு போன்றது அது. பத்து உளிகள் சேர்ந்தால் எழும் ஓசை, காதலனொருவன் அன்புக் காதலிக்கு அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாகக் கன்னத்தில் தரும் முத்தத்தின் சத்தம் போன்றது. சென்னா செவிமடுத்தது, கடல் அலை தனக்குள் பாடியபடி கரைக்கு வந்து, திரும்பப் போய், மறுபடியும் வந்து, திரும்ப…
என் குறுநாவல் தொகுப்பு இரா.முருகன் குறுநாவல்கள் – வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய ஒன்பது குறுநாவல்களின் தொகுப்பு என் அன்புக்குரிய பதிப்பாளர் ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் நிறுவனத்தால் நேற்று மறுபதிப்பு கண்டிருக்கிறது. 1990-களில் எழுதிய முதல் குறுநாவல்கள் விஷம், விஷ்ணுபுரம் தேர்தல் முதல் கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் எழுதிய பசுவன் வரை இத்தொகுப்பில் உண்டு. முன்னுரை இங்கே =================================================================================================================== முன்னுரை இரா.முருகன் குறுநாவலுக்கு என்ன இலக்கணம் என்று தெரிந்து கொள்ளாமல் நான் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இங்கே…