Archive For டிசம்பர் 31, 2023
வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் வரிசையில் 4வது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அச்சுப் பதிப்பாக அண்மையில் வெளியானது. அந்நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் இருந்து திலீப்புக்கு அப்பாவின் புத்தகங்கள் நினைவு வந்தன. உயர ஸ்டூலைத் தேடினான். அதில் போன வருடம் விநாயக சதுர்த்திக்கு வந்த விநாயகர் பொறுமையாக இன்னும் நின்று கொண்டிருந்தார். இன்னும் ஒரு மாதத்தில் அடுத்த சதுர்த்தியே வரப் போறது, இன்னுமா என்னை அனுப்பி வைக்கலே என்று திலீப்பைக் கேட்டார் அவர். அவன் பதில் சொல்லாமல்…
அரசூர் நாவல் நான்கு – வாழ்ந்து போதீரே ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து அகல்யாவும், சிரிப்பும், பேல்பூரியும், உயர்ந்து பொங்கும் கடல் அலைகளும் இல்லாத உலகம் அவன் போக வேண்டியது. அதுவும் இந்த ஆறு மாதத்தில் அவனுக்கு ஏற்கனவே அனுபவமான ’கொஞ்சம் போல் நிம்மதி’ சூழல் கூட இல்லை. அப்பா காணாமல் போனதில் தொடங்கியது இது. பரமேஸ்வரன் நீலகண்டன். ஐம்பத்தேழு வயது. தாடையில் மிகச் சரியாக நடுவில்…
அரசூர் நாவல் 4 : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் இரண்டில் இருந்து அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்டிருக்கிற நூல் இது அலை ஓங்கி அடிக்குது அகல், தர்காவுக்கு இன்னொரு நாள் போகலாம். திலீப் அகல்யாவின் கையை இறுகப் பற்றியபடி நின்றான். அவள் இப்போது பிடிவாதம் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். நீ வரட்டா போ, நான் போயே தீருவேன் என்று அவள் ஓட வேண்டும். ஹை டைட், ஹை டைட் என்று ஒரு…
வாழ்ந்து போதீரே, அரசூர் நாவல் வரிசையில் நான்காவதாக வெளிவந்துள்ளது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க் அச்சுப் பதிப்பாக அண்மையில் வெளியிட்ட இந்த நாவலில் இருந்து கதவுக்கு வெளியே நிறையப் பதக்கங்களும் கயிறுகளும் நாடாக்களும் அப்பிய, பச்சை அழுத்தமாகப் பதிந்த ராணுவ உடுப்போடு நடு வயது மேஜரோ வேறே பெரிய பதவியில் இருப்பவரோ ஒருவர் மண்டி போட்டுக் கைகளை ஒருசேர மேலே உயர்த்தி இருந்தார். அவர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அந்த அதிகாரிக்கு இரண்டு அடி தூரத்தில்…
வாழ்ந்து போதீரே நாவல் அரசூர் நாவல்களில் நான்காவது, அதன் தொடக்க்ம் இது வாழ்ந்து போதீரே ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாக 2022ம் ஆண்டு வெளியாகியுள்ளது கடவுள். கிட்டத்தட்ட கடவுள். உறங்கிக் காலையில் விழித்ததும் தேநீர் கொடுக்க ஒரு படையே நிற்கிறது. ராணுவம். நூறு, இருநூறு வீரர்கள். கருத்துத் தடித்தவர்கள். மாறி மாறி வருகிறார்கள். நந்தினிக்கு அவர்கள் எல்லோரும் பகலும் இரவும் காவல். நந்தினி அவர்களுக்கு நிரந்தரக் காவல். ஒரு வருடமாக இப்படித் தான் நடக்கிறது. வீட்டு வாசலில்…
நாவல் தினை அல்லது சஞ்சீவனி இறுதி அத்தியாயம் திண்ணை இணைய இதழில் வந்துள்ளது. அதிலிருந்து நாவல் திணை அல்லது சஞ்சீவனி இந்த ஆண்டு ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப் பதிப்பாக வெளியாகியுள்ளது நாடு முழுவதும் பல கரப்புகள் கரப்புகளாலேயே கொல்லப்பட்டன. இரண்டு இரண்டு கரப்புகளாக அணைப்பில் இருத்தப்பட்டு இந்த இணையர்களில் ஒருவர் மற்றவரின் தலையை கத்தி போன்ற கால் கொண்டு அறுத்து எறியக் கட்டளை பிறப்பிக்கப் பட்டது. கரகரவென்று தலையறுக்கிற காரியம் அவசரமில்லாமல் நடக்கவும், தலைகள் கீழே…