Archive For பிப்ரவரி 7, 2024

திரும்பி வந்த பைராகி சொன்னது – மீண்டும் வருவேன்

By |

திரும்பி வந்த பைராகி சொன்னது – மீண்டும் வருவேன்

வாழ்ந்து போதீரே (அரசூர் நாவல் வரிசை -4ம் புதினம்) பகவதியின் டயரி செப்டம்பர் 1859 தொடர்ச்சி ஏன் இந்த வீட்டை, இவரை மறந்து போனேன்? எங்கே போயிட்டிருக்கேன்? அம்பலப்புழை வீட்டு இங்கே எப்படி வந்தது? அம்பலம் எங்கேயிருந்து இடம் பெயர்ந்து வந்தது? வீட்டுக்குள்ளே வேகமாப் போனேன். அவரும் கதவை அடச்சு உள்ளே வந்தார். கட்டிப் பிடிச்சுண்டேன் ஆமா. கட்டிண்டு கரைஞ்சேன் ஒரு பாட்டம் அழுகை. வேண்டி இருந்தது எல்லாம். அவர் காப்பி டம்ப்ளர்லே இக்கிணி இக்கிணியா சீப்பிக்…




Read more »

விடிகாலை பனிமூட்டத்தில் பழஞ்சோறும் மாவடுவும் யாசித்து வந்த பைராகி

By |

விடிகாலை பனிமூட்டத்தில் பழஞ்சோறும் மாவடுவும் யாசித்து வந்த பைராகி

அரசூர் வம்சம் 4 நாவல் வரிசை நான்காம் நாவல் வாழ்ந்து போதீரே -பகவதியின் டயரி தொடர்ச்சி செப்டம்பர் 1896 நான் ஓட ஆரம்பிச்சேன். அதுவும் என் பின்னாலே ஓடி வந்துண்டு இருக்கு. மயில் ஆடினா கண்ணுக்கு நிறைவா இருக்கும். ஓடினா என்னமோ தத்தக்கா புத்தக்கான்னு கோணலா இருக்கு. தோகை பாரம் இல்லாட்ட இன்னும் வேகமா ஓடுமோ என்னமோ. அதுவும் நல்லதுக்குத் தான். என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாம அது தெருக் கோடியில் நிக்க்றது. சரி அப்படியே…




Read more »

நீல இறக்கை செம்மண்ணில் புரண்டு மின்ன, துரத்தி வந்த மயில்

By |

நீல இறக்கை செம்மண்ணில்  புரண்டு மின்ன, துரத்தி வந்த மயில்

அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. புத்தகத்திலிருந்து ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு பகவதியின் டயரி தொடர்ச்சி 1896 செப்டம்பர் அரசூர் இன்னிக்குக் காலம்பற இப்படித்தான் தெம்பா காப்பி உபசாரம் எனக்கு நானே நடத்திண்டு, கோலம் போட்டு முடிச்சுட்டு உடனே குளிச்சேன். சரி இவ்வளவு பண்ணியாச்சு, மார்கழி ஆச்சே, கோவிலுக்குப் போகலாம்னு கிளம்பிட்டேன். கோவில் பக்கத்திலே ஊருணியிலே ஜில்லுனு வெள்ளம் கோரியெடுத்து குடத்துலே நிறைச்சு வரலாம்னு கூட பரிபாடி. சட்டுனு வார்த்தை வர மாட்டேங்கறது….




Read more »

நாடகாந்தம் கவித்வம் – கேரள இலக்கிய விழா 2024

By |

நாடகாந்தம் கவித்வம் – கேரள இலக்கிய விழா 2024

கேரள இலக்கிய விழா 2024-ல் மலையாளத்தின் முக்கிய எழுத்தாளர்களான எம்.முகுந்தனும், என்.எஸ்.மாதவனும் நாடகம் பற்றி ‘நாடகாந்தம் கவித்துவம்’ என்ற தலைப்பில் உரையாடியதைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் -[ நாடகம் என்ற நிகழ்கலை அமைப்பிலும், உள்ளடக்கத்திலும் நிறைய மாற்றமடைந்திருக்கிறது 50 வருடம் முன்பு நாடக ரசிகராக இருந்த ஒருவர் அன்றைய பிரபல நாடகமான ‘நிங்கள் என்னெ கம்யூனிஸ்ட் ஆக்கி’ பார்க்கப் போன அதே எதிர்பார்ப்புகளோடு இன்றைய நவீன நாடகம் பார்க்கப் போனால் ஏமாற்றமே அடைவார்…




Read more »

1896 மார்கழி அதிகாலையில் துரத்தி வந்த மயில்-பகவதியின் டயரியிலிருந்து

By |

1896 மார்கழி அதிகாலையில்  துரத்தி வந்த மயில்-பகவதியின் டயரியிலிருந்து

அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. இந்நாவல்கள் அனைத்தும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் நேர்த்தியான அச்சுப் பதிப்புகளாக வெளிவந்துள்ளன= வாழ்ந்து போதேரே நாவலில் வரிசைப்படியான அடுத்த பகுதி தொடர்ச்சி இது செப்டம்பர் 1896 பகவதியின் டயரிக் குறிப்பு தொடர்ச்சி இன்னிக்குக் காலம்பற இப்படித்தான் தெம்பா காப்பி உபசாரம் எனக்கு நானே நடத்திண்டு, கோலம் போட்டு முடிச்சுட்டு உடனே குளிச்சேன். சரி இவ்வளவு பண்ணியாச்சு, மார்கழி ஆச்சே, கோவிலுக்குப் போகலாம்னு…




Read more »

காப்பி உபசாரமும், பக்த விஜயமும், புள்ளிவரிசை தப்பாத மார்கழிக் கோலமும்

By |

காப்பி உபசாரமும், பக்த விஜயமும், புள்ளிவரிசை தப்பாத மார்கழிக் கோலமும்

அரசூர் வம்சம் தொடங்கி, விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் வழியே நான்காவது அரசூர் நாவல் வாழ்ந்து போதீரே. நாவலில் இருந்து – ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு (பகவதியின் டயரியில் இருந்து) 1896 செப்டம்பர் 23 புதன்கிழமை விடிகாலையில் குளிக்கறது நல்ல பழக்கம் தான். இங்கே அரசூர்லே, எல்லார் வீட்டுப் பெண்களும் அதேபடிக்குத் தான் செய்யற வழக்கம். முக்கியமா செவ்வாய், வெள்ளிக் கிழமை. அதோடு கூட, மாசாந்திரம் விலகி இருக்கறது கழிஞ்சு. அப்புறம் மார்கழி மாசம் முப்பது நாளும்….




Read more »