Archive For ஏப்ரல் 21, 2024

வாடிக்கையாளர் இல்லாத நாவலாசிரியரும் சிறாரில்லாத வாடிக்கையாளரும்

By |

வாடிக்கையாளர் இல்லாத நாவலாசிரியரும் சிறாரில்லாத வாடிக்கையாளரும்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் நான்கில் அடுத்த சிறு பகுதி ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]] இந்தப் புத்தகங்களில் ஒரு புதுமை இருக்கிறதே, கவனித்தீர்களா என்று கேட்டார் பக்கத்து இருக்கை தாடிக்கார பப்ளிஷர்.   பக்கங்கள் கொஞ்சம் கூடுதல் கனத்தோடு இருக்கின்றன. படங்கள் அடர்த்தியான வர்ண மசியில் அச்சடிக்கப் பட்டு இன்னும் அக்ரலிக் வாடை பலமாக மூக்கில் முட்டிக் கொண்டிருக்கிறது. சற்று பிசுபிசுப்பும் படத்தில் உண்டு. மற்றப்படி வேறுபட்டு எதுவும் இல்லையே?   நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள், தெரியுமே.   தொலைந்து…




Read more »

நர்சரி பாடல்களின் பயன்பாடு யாது எனச் சிற்றுரை ஆற்றுக

By |

நர்சரி பாடல்களின் பயன்பாடு யாது எனச் சிற்றுரை ஆற்றுக

வாழ்ந்து போதீரே- அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி   நான் இங்கே உட்காரலாமா?   சந்தனமும் மற்றும் ஏதுமோ மணக்கும் குரல். அளவாக நறுக்கிச் சீராக்கிய நரைத் தாடி வைத்த மனுஷர் ஒருத்தர் வைத்தாஸின் இருக்கைக்கு அருகே எதிர்பார்ப்போடு இடுப்பு வளைத்து நின்று நைச்சியமாக அவனைக் கேட்டார்.   தாராளமாக உட்காரலாம்.   விமானப் பணிப் பெண் ஒழித்துப் போன இருக்கையில் அமர்ந்தவர் இரு கண்ணும் மூடி ஒரு நிமிடம்…




Read more »

இந்த விமான சேவையைப் பயன்படுத்திக் கொள்க அல்லது நரகத்துக்குச் செல்க

By |

இந்த விமான சேவையைப் பயன்படுத்திக் கொள்க அல்லது நரகத்துக்குச் செல்க

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காம் நாவலின் அடுத்த சிறு பகுதி [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[              வைத்தாஸ்  எழுதும் நாவலில் இருந்து   ஆர்க்கிட் விமான நிறுவனம் உங்களை வரவேற்கிறது. உங்களைப் பயணியாகப் பெற்றுள்ளதில் இந்த ஆர்க்கிட் விமானத்தின் விமான ஓட்டியர் மற்றும் உதவி விமான ஓட்டியர், உபசரிணியர் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.   இந்த விமானம் இன்னும் ஐந்து நிமிடத்தில் வானில் ஏறும்.   (அதற்கப்புறம் நீங்கள் to The Hell போகலாம்).  …




Read more »

ஆப்பிரிக்க மந்திரவாதம், மலையாள மாந்த்ரீகம், சீன மந்திரம் இன்ன பிற

By |

ஆப்பிரிக்க மந்திரவாதம், மலையாள மாந்த்ரீகம், சீன மந்திரம் இன்ன பிற

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலின் அடுத்த சிறு பகுதி   உங்கள் நாட்டில் இருந்து ஒரு நாட்டியக் குழு உடனே வர முடியுமா?   அமைச்சர் ஆவலோடு விசாரித்தார்.   கடந்த இரண்டு ஆண்டு காலமாக அரசியலில் நிச்சயமற்ற நிலை காரணமாக வைத்தாஸின் நாட்டில் இலக்கியமும் கலையும் கலை வெளிப்பாடும் சீர்குலைந்த நிலையில் தற்போது உள்ளதை வருத்தத்தோடு தெரிவித்தான் வைத்தாஸ். அடுத்த ஆண்டு நிலைமை சீரடைந்து விடும். அப்போது சகல கலைஞர்களையும் கூடவே அழைத்து…




Read more »

நல்ல செய்திகளை அனைவரும் வரவேற்கிறார்கள். அவை இல்லாத பட்சத்தில் உருவாக்கப்படுகின்றன

By |

நல்ல செய்திகளை அனைவரும் வரவேற்கிறார்கள். அவை இல்லாத பட்சத்தில் உருவாக்கப்படுகின்றன

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவல் அடுத்த சிறு பகுதி வைத்தாஸ் கை சுட்டிக் காட்டும் முன் ததரினனா என்ற சத்தம் நின்று போய்த் திரும்ப ஆரம்பத்தில் இருந்து மெல்லிய தம்பூரா மீட்டுதலோடு இசை தொடங்கியது.  உயர்வு நவிற்சியோடு சொன்னான் –   இதயம் தைக்கும் இந்த இசையோடு, எங்கள் நாட்டு முரசு வாசிக்கும் கானகம் சார்ந்த கலைஞர்களைச் சேர்ந்து இசைக்கச் சொல்லி சர்வதேச சங்கீதம் உருவாக்கலாம்.  உலகம் முழுக்க ஒற்றுமையும், அன்பும், சகோதரத்துவமும், அமைதியும்,…




Read more »

ஒரு ராத்திரியில் ட்ரிக்னோமெட்ரி கற்றுத் திறமை காட்டும் பொருளாதர நிபுணர்களில் உலகம்

By |

ஒரு ராத்திரியில் ட்ரிக்னோமெட்ரி கற்றுத் திறமை காட்டும் பொருளாதர நிபுணர்களில் உலகம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவல் அடுத்த சிறு பகுதி இது தென்னிந்தியாவுக்கே உரிய பாரம்பரிய இசை தானே?   எங்கே சுட்ட வேண்டும் என்ற இலக்கு இல்லாமல், மேஜையில் தாழ்வான பகுதியில் சுழன்று கொண்டிருந்த ஒலி நாடாவில் இருந்து வரும் இசையைக் குத்துமதிப்பாக அவதானித்துக் கேட்டான் அவன். அது கேட்க நன்றாகத் தான் இருந்தது. ஆனால் ஏதோ பிடிவாதத்தோடு சில வார்த்தைகளையும் சொற்கட்டுகளையும் திரும்பத் திரும்ப உச்சரிப்பதில் அடம் தெரிந்தது. வார்த்தைகள் நிறுத்தாமல் வாதாடுவதை…




Read more »