Archive For ஜூலை 30, 2024

கடவுளின் மூத்த சகோதரி விடுப்பு எடுத்துக்கொண்ட போது

By |

கடவுளின் மூத்த சகோதரி விடுப்பு எடுத்துக்கொண்ட போது

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி ———————————————————————————————————————————   பறவை ஆடும் முன்றிலில் யாரும் இருக்க அனுமதி இல்லை. அவர்கள் அந்தக் காட்சியின் உக்கிரத்தால் இதயம் வெடித்து இறந்து போகலாம்.   எமிலி இந்த ஒரு வாரமாக வினோதமான இந்த இடத்தில் இருக்கவும் உறங்கவும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறாள். நந்தினியின் படுக்கை அறைக்குக் கொண்டு விடும் முன் நடை அது. கடவுளின் சகோதரியாக எப்போதும் நிறைந்திருக்கும் நந்தினியின் படுக்கை…




Read more »

எமிலி ஆந்த்ரோசா என்ற சிறுமியும் மாந்த்ரீக நிகழ்வுகளும்

By |

எமிலி ஆந்த்ரோசா என்ற சிறுமியும் மாந்த்ரீக நிகழ்வுகளும்

வாழ்ந்து போதீரே -அரசூர் நான்கு நாவல் வரிசையில் இறுதி நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி ================================================================================ திலீப் துள்ளி எழுந்து விழித்துக் கொண்டான். கனவு ஏதும் இல்லை. டெலிபோன்.   டெலிபோன் ஓசை மட்டும் நிஜம். இருட்டில் சத்தம் வழி காட்ட, ஓடிப் போய் எடுத்தான்.   திலீப் மோரே கிட்டே பேச முடியுமா?   அகல்யா குரல்.   ஏய் அகல், நான் தான். என்ன ஆச்சு? இப்போ இப்போ நீ இப்போ.  …




Read more »

சந்திக்காமலே இறந்த மத்தாயு மாப்பிள்ளையும் ட்யூஷன் போகும் இளைய தலைமுறையும்

By |

சந்திக்காமலே இறந்த மத்தாயு மாப்பிள்ளையும் ட்யூஷன் போகும்  இளைய தலைமுறையும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது- அடுத்த  சிறு பகுதி இங்கே நீ வா ராஜா. ஒண்ணும் தரவேணாம். அம்பலப்புழையிலே இறக்கி விடறேன்.   நடாஷா இறங்க, திலீப் மனதில் ஏனோ பயம். இந்த டிரைவர் கூட்டிப் போய்க் கழுத்தை நெறித்து விட்டால்? அல்லது பாலியல் ரீதியாக அவனைப் பலாத்காரம் செய்து விட்டால்? இருக்காது, அப்படிப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் சொந்தக் கதை சொல்லிக் கொண்டு துக்கத்தைப் பகிர்ந்திருக்க மாட்டார்.   அம்பலப்புழையிலும் எங்கே போக…




Read more »

சைபீரியாவுக்கு அனுப்பப்பட்ட செர்யோஷாவுக்காக ஆலப்புழையில் ஒருத்தி துக்கம் காத்து

By |

சைபீரியாவுக்கு அனுப்பப்பட்ட செர்யோஷாவுக்காக ஆலப்புழையில் ஒருத்தி துக்கம் காத்து

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -அடுத்த சிறு பகுதி டிரைவர் இல்லாமல் இருட்டில் நிறுத்தி இருந்த ஆட்டோ ரிக்‌ஷாக்களையும்,   விளக்குக் கம்பத்தின் அடியில் உறங்கும் தெரு நாய்களையும், சகலரும் குத்த வைத்து எழ, மூத்திர ஈரம் விரியத் தொடங்கிய முடுக்குச் சந்துகளையும் நின்று நின்று பார்த்து அரை மணி நேரம் கழித்து அம்பாசடர் டாக்சி ஒன்று வந்தது. நம்பிக்கை இல்லாமல் திலீப் நிறுத்தச் சொல்லிக் கையசைத்தான். வண்டி சற்று தூரம் கடந்து போய்…




Read more »

தனக்குத் தெரிந்த ஒரே விவிலிய வாக்கியம் சொல்லி மௌனமாக நின்ற நேரம்

By |

தனக்குத் தெரிந்த ஒரே விவிலிய வாக்கியம் சொல்லி மௌனமாக நின்ற நேரம்

வெளியே இறங்கிய நிமிடத்திலிருந்து பசி பசி என்று ஜபிக்கத் தொடங்கி விட்டாள் நடாஷா.  இன்னும் பனிரெண்டே மணி நேரம். காலையிலே பசியாறிக்கலாம். பொறுத்துக்க முடியாதா?   திலீப் அவள் முன்பு சொன்னதைப் பத்திரமாக வைத்திருந்து மகிழ்ச்சியோடு திருப்பிக் கொடுக்க, அவனை இடுப்பில் கை வளைத்துத் தூக்கி ஒரு தடவை தட்டாமாலை சுற்றி, நூலகத்தின் புல் தரையில் போட்டாள்  நடாஷா. சைக்கிள்களில் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நூலகரும் மற்ற ஊழியர்களும் பலமாகக் கைதட்டி ஆர்பரித்து இந்திய சோவியத் கூட்டுறவை…




Read more »

அவிசுவாசிகள் படிக்கத் தரவேண்டாம் மற்றபடி இலவச விநியோகத்துக்கு

By |

அவிசுவாசிகள் படிக்கத் தரவேண்டாம் மற்றபடி இலவச விநியோகத்துக்கு

வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி அந்தக் கடிதம் கையெழுத்தில் இல்லாமல், அச்சு யந்திரத்தில் எழுத்துக் கோர்த்து அச்சடித்திருந்தது நடாஷாவுக்கு சந்தோஷத்தை உளவாக்கியது. நல்ல ஆங்கிலத்திலும் தொடர்ந்து மலையாளத்திலும் இருந்த அந்தக் காகிதத்தில் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நேரத்தில் குரிசுப் பள்ளியில் சங்கீர்த்தனமாகப் பாடும் பதினேழு ஏசுசபைக் கானங்களும் திருவசனங்களும் அச்சாகி இருந்தன.   விரும்பிக் கேட்டவர்களுக்கு விநியோகிக்க என்று தலைப்பில் அச்சடித்திருந்ததால் அது இலவசமாகப் பலருக்கும் வழங்கப்…




Read more »