Archive For ஆகஸ்ட் 7, 2024

மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புது நகர் வந்த உலுலூ அதிபர் டாக்டர் நந்தினி

By |

மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புது நகர் வந்த உலுலூ அதிபர் டாக்டர் நந்தினி

சென்ற வாரம் குடியரசாகப் பிரகடனப்படுத்தப் பட்ட  ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான டாக்டர் நந்தினி, மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புதுதில்லி வந்து சேர்ந்தார். பாலம் விமான நிலையத்தில் அவரை வரவேற்ற வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரி.   வைத்தாஸ் ரேடியோவை அணைத்தான்.   நந்தினி தொலைபேசியில் சத்தம் கூடுதலாகவே பேசிக் கொண்டிருந்தாள். பெரிய மூன்று தேசங்களுக்கு நடுவே தென்கிழக்காகக் குறுகி கிழக்கே நீண்டு வடக்கில் சற்றே விரியும் சுடுமணல் பரந்த நாட்டின் மக்கள் தலைவரிடம்,  அங்கே ஆட்சிக்கும்…




Read more »

எமிலி மந்திரவாதம் மூலம் கேக்குகளை வரவழைத்துத் தின்னக் கொடுத்தபோது

By |

எமிலி மந்திரவாதம் மூலம் கேக்குகளை வரவழைத்துத் தின்னக் கொடுத்தபோது

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது – நூலிலிருந்து அடுத்த சிறு பகுதி இங்கே நேற்றைய நிகழ்ச்சிகளில் ஒரு சிறு தவறு.   பெண் அதிகாரி  எமிலியைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னாள்.   நேற்றைக்கு முதல் நிகழ்ச்சியில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் கடவுளின் மூத்த சகோதரியுடைய பிரதிநிதியான எமிலியைச் சந்திக்க வந்திருந்தார்கள். இந்த சந்திப்புக்காக அதிகாலையில் புறப்பட்டு வந்ததால் வீட்டுப் பாடங்களை எழுத முடியாமல் போனதென்று அந்தப் பிள்ளைகள் சொன்னார்கள்.   எமிலியின் மந்திரவாதத்தால் வீட்டுக்…




Read more »

எமிலி அந்த்ரோசா நிகழ்த்திக் காட்ட வேண்டி அங்கீகரிக்கப்பட்ட மந்திர நிகழ்வுகள்

By |

எமிலி அந்த்ரோசா நிகழ்த்திக் காட்ட வேண்டி அங்கீகரிக்கப்பட்ட மந்திர நிகழ்வுகள்

முதல் நிகழ்ச்சியில் சிறு பட்டாம்பூச்சி பொம்மைகளைக் கையசைத்து உருவாக்கிக் கோழிப்பண்ணை சங்க நிர்வாகிகளில் வந்து வணங்கும் முதல் மூவருக்கு அன்பளிப்பாகத் தருவாள் எமிலி. இது அங்கீகரிக்கப் பட்டுள்ளது என்றாள் பெண் அதிகாரி. அடுத்து, ஊசிகளைப் பூப்போட்ட சிறு பட்டுத் துணியில் அழகாகச் செருகி அன்பளிப்பாக ஆப்பிரிக்க உடுப்பு ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகளுக்கு வழங்கலாம் என்றாள் அதிகாரி. அது கையசைத்து வரவழைத்துத் தரச் சற்றே கடினமானது என்றாள் எமிலி.   இதற்கு மந்திரவாதம் செய்ய வேண்டாம், இந்த ஊசிகள் செருகிய…




Read more »

எமிலி அந்த்ரோசா இன்று நிகழ்த்தப் போகும் மந்திரவாதச் செயல்களின் பட்டியல்

By |

எமிலி அந்த்ரோசா இன்று நிகழ்த்தப்   போகும் மந்திரவாதச் செயல்களின் பட்டியல்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி கைக்குட்டையை மரியாதை விலகாமல் காக்கிச் சட்டைப்பையில் இட்டு புன்னகையோடு நின்ற அதிகாரியை எதிரே இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாள் எமிலி. அவள் இதற்காகவே காத்திருந்தது போல் அந்த நாற்காலியில் உட்கார்ந்து, கையில் பிடித்திருந்த கிளிப் செருகிய அட்டையில் மேலாக இருந்த காகிதத்தை அவசரமாகப் படிக்கத் தொடங்கினாள்.   இரவு நன்றாக உறங்கினீர்களா என்பதில் தொடங்கி, காலை உணவு, தேநீரின்…




Read more »