Archive For செப்டம்பர் 15, 2024

இறப்பு நிகழ்ந்த வீட்டில் பகடி செய்து கொண்டிருந்தவன்

By |

இறப்பு நிகழ்ந்த வீட்டில் பகடி செய்து கொண்டிருந்தவன்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல். சிறு பகுதி அதிலிருந்து: திலீப் அவனை விழித்துப் பார்த்தான். எல்லோரும் அவனிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சினிமாவில் பார்த்தபடி, தொடர்கதையில் படித்தபடி, மேடை போட்டு நீட்டி முழக்கித் தலைவர்கள் பேசுவதைக் கேட்டபடி, எல்லாரும் எதிர்பார்க்கிற படி அவன் இப்போது அழுது புரண்டு கொண்டிருக்க வேண்டும். கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்து சட்டையை நனைக்க, விம்மி விம்மி அழ வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் தேற்றத் தேற்ற,…




Read more »

மும்பை பாண்டுப் சர்வமங்கள் சாலில் ஒரு கல்யாணம், ஒரு சாவு

By |

மும்பை பாண்டுப் சர்வமங்கள் சாலில் ஒரு கல்யாணம், ஒரு சாவு

வாழ்ந்து போதீரே -அரசூர் நான்காவது நாவலின் தலைப்பு. நாவலில் இருந்து  ஒரு மிகச் சிறிய பகுதி மலா பாக ருபயீ த்யா, மோதா பாவு. அப்பன் காஹீ தூபா கரீதீ கரூ.   ஐந்து நிமிஷம் முன் டோம்பிவிலி ஃபாஸ்ட் லோக்கல் ரயிலில் வந்து சேர்ந்தவன், ரிடர்ன் டிக்கட்டை சிகரெட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியபடி திலீப்பிடம் சொன்னான்.  ஐந்து ரூபாய் வேணுமாம். போய் நெய் வாங்கி வருவானாம்.   நாலு மூங்கில் கழிகளும் தென்னங் கிடுகுமாக சைக்கிளில் வந்த…




Read more »

ஏர்ள்ஸ் கோர்ட் மதுக்கடையில் சின்னச் சின்ன சண்டைகளோடு மது அருந்துகிறவர்கள்

By |

ஏர்ள்ஸ் கோர்ட் மதுக்கடையில் சின்னச் சின்ன சண்டைகளோடு மது அருந்துகிறவர்கள்

  ஆல்பர்ட் பிரபு இல்லாமல் போய் நானூறு வருஷம் கழித்தும் வேறு மொழியில் கவிதை இருக்கிறதாம். அவருக்குப் பரிச்சயமான இங்கிலீஷிலும் கொஞ்சம் வித்தியாசத்தோடு அது இருக்கும். கல்யாணம் ஆன பெண்களைக் காமுறும் கவிஞர்கள் ஏர்ல்ஸ் கோர்ட் மதுக்கடையில் பியர் அருந்தியபடி சின்னச் சின்னதாகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.   மன்னிச்சு முடிஞ்சுது. நான் போகறேன்.   இன்னும் நான் பாவமன்னிப்பு கோர இல்லையே.   இதுவரை சொன்னது?   இது இரண்டாம் நிலை பாவம். Collateral sin….




Read more »

கல்யாணக்காரி மேல் மையலுற்றுக் கவிதைகள் எழுதிய பாவம்

By |

கல்யாணக்காரி மேல் மையலுற்றுக் கவிதைகள் எழுதிய பாவம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து- அவனை ஏனோ பிடித்துப் போனது. நானூறு வருஷமாக அவரிடம் யாரும் உதவி என்று கேட்டதில்லை. இன்றைக்கு இந்த மனுஷன் அவரைப் பாதிரியார் ஆக்கியிருக்கிறான்.  அலமாரியில் கடற்படை மேலதிகாரியின் சலவை உடுப்புகள் கிட்டாமல் எதையோ அணிந்து வந்திருப்பதால், அவருக்கே தான் யாரென்று குழம்புகிறது. நேரம் வேறே விரைந்து கொண்டிருக்கிறது. அவர் மறுபடி உறங்கப் போக வேண்டும்.   சொல்லலாமா? அவன் கேட்டான்.   முதல்லே உன் பேரைச் சொல்லு….




Read more »

நானூறு வருடம் முன் இருந்தவரும், லத்தீனும்

By |

நானூறு வருடம் முன் இருந்தவரும், லத்தீனும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நூல். அதிலிருந்து – அவன் இந்திய பாணியில் இரு கரம் கூப்பிக் கும்பிட்டுக் கேட்டான் –   துரையவர்கள் யாருன்னு புலப்படலே.  அமேயர் பாதிரியாருக்கு உறவா?   பாதிரியாருக்கு எப்படி உறவு இருக்க முடியும்?   மன்னிக்கணும்.   அதைச் சொல்லியாச்சு.   ஆமா, ஆனா உங்க கிட்டே சொல்லலே. கொச்சு தெரிசா கிட்டே சொன்னேன்.   நான் கேட்டதாலே, என்கிட்டே சொன்னதாகவும் அர்த்தமாகும்.  …




Read more »

நானூறு வருடம் பழையது, எனவே புனிதமானது

By |

நானூறு வருடம் பழையது, எனவே புனிதமானது

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இதோ – ஆல்பர்ட் பிரபு கம்பீரமும், பொறுப்பும் கருணையும் இடைகலந்த குரலில் சத்தம் தாழ்த்தி அவனிடம் சொன்னார் –   நான் கொச்சு தெரிசா இல்லை. லார்ட் ஆல்பர்ட். நானூறு வருஷமா உலவறேன். இது என் வீடு.   அப்போது அவருடைய கையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் சொன்னது –   நல்லது. நீங்க எனக்கு பாவமன்னிப்பு…




Read more »