Archive For அக்டோபர் 31, 2024

என் கை நழுவிப்போன க்ராஸ்வேர்ட் விருது

By |

என் கை நழுவிப்போன க்ராஸ்வேர்ட் விருது

என் அல்புனைவு நூல் வரிசையில் இர்ண்டாவதாகப் பிரசுரமாக ஆயத்தம் செய்யப்படும் சற்றே  நகுக நூலில் இருந்து தமிழ்ப் படைப்பிலக்கிய ரசனைக்கும் ஆங்கிலப் படைப்பிலக்கிய ரசனைக்கும் உள்ள வேறுபாடு சென்னைக்கும் மும்பைக்கும் நடுவே ஆறு அல்லது அறுநூறு வித்தியாசம் கண்டுபிடிக்கிறது போல் சுவாரசியமானது. தமிழில் ஒரு நாவல் வெளிவந்தால் கிணற்றில் ஊறப்போட்ட கல்லாக அது அநேகமாக லைபிரரி ஆர்டரில் சகாய விலைக்கு மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு கிளை நூலக மேல் ஷெல்பில் செருகி வைக்கப்படும். கிட்டத்தட்ட நாற்பது வருடம்…




Read more »

குரூரம் இல்லாம குசும்பு இல்லாம சொல்றேன் – வாழ்ந்து போங்கோ

By |

குரூரம் இல்லாம குசும்பு இல்லாம சொல்றேன் – வாழ்ந்து போங்கோ

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி இங்கே –   உடம்பிலே ரோகம் இருக்கும்போது கர்ப்பம் தாங்கினா உசிருக்கே அபாயமாகலாம்னு அந்த டாக்டர் தான் சொன்னாராம்.  கேட்டியா?   கேட்டேன்.   மனசே இல்லாம, கர்ப்பம் கலைக்கலாம்னாராம்.   ஆஹா. அவருக்கு, ரோகம் நிவர்த்தி பண்ண வந்த டாக்டருக்கு எதுக்கு மனசும் மத்தொண்ணும்?   அவரைத்தான் கேக்கணும். அவர் கலைச்சு விட தயார் தானாம். ஆனா அதுக்கு பொறுப்பான நபர்…




Read more »

வல்லிப்பெண் கர்ப்பம் தரித்தாள், தாங்க மாட்டாள்

By |

வல்லிப்பெண் கர்ப்பம் தரித்தாள், தாங்க மாட்டாள்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – சிறு பகுதி அதிலிருந்து       அவர் தோளில் கை வைத்துப் பிடிச்சு நான் கேட்டேன் –   நீங்க அமிர்தவல்லியை வச்சிண்டிருக்கேளா?   இல்லை.   அப்போ நாலு நாள் முன்னாடி கோவில்லே உற்சவக் கொடி ஏத்தின அப்புறம், ஊர் வெளியிலே இருந்து ரெட்டைக் காளை வண்டியிலே அவளோட போனது யாரு?   நான் தான்.   நான் அழுதபடியே அவர் முகத்தில் அறைந்தேன்….




Read more »

அரசூர் சங்கரனை புகையுலை கடையில் சந்திக்க வந்தவள்

By |

அரசூர் சங்கரனை புகையுலை கடையில் சந்திக்க வந்தவள்

  வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நூல். அதிலிருந்து ஒரு சிறு பகுதி ஓதுவார் சொன்ன கதையை நானானா சுவாரசியமாக் கேட்டுண்டிருக்கேன். இந்தப் பொண்ணு சுகுணவல்லி என் மடியிலே படுத்து உறங்கியே போய்ட்டா. பாவம் சின்னப் பொண்ணு. அவ அம்மா மேலே விரோதம்னா அவ என்ன பண்ணுவா?   கதை முடிஞ்சு அவளை வீட்டுலே கொண்டு விட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்தா,  என்னத்தைச் சொல்ல, வாசல் முறியிலே இவர்  குரிச்சி போட்டு, குரிச்சி…




Read more »

நீர் நன்னாயிரும் உம்ம குடும்பம் உறவெல்லாம் நன்னாயிருக்கட்டும்

By |

நீர் நன்னாயிரும் உம்ம குடும்பம் உறவெல்லாம் நன்னாயிருக்கட்டும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் இருந்து ஒரு சிறு பகுதி அதை விட இந்த கொழும்புக்காரி அமிர்தவல்லியோட பெரும்பாடு ரோகம் இன்னும் சிரமம். இனியும் கஷ்டம்.   இங்கே நம்மூர் நம்ம தெருக்கோடி பரமக்குடி வைத்தியர் பிரக்யாதி கொழும்பு வரைக்கும் பரவியிருக்காமே.  எப்போவாவது ஆத்துலே யாருக்காவது ஜுரம் வந்தா, இருமல் ஜலதோஷம் போதும்டா பகவானேன்னு அலுத்து வந்தா, அவருக்கு ரெண்டு நாளா கொல்லைக்குப் போகலேன்னா பரமக்குடி வைத்தியரை வரவழைச்சுடுவார். எங்க அம்பலப்புழையிலே பிஷாரடி வைத்தியர்…




Read more »

சர்க்கார் ஆஸ்பத்திரியில் ட்ரஸ்ஸரை போய்ப் பார்த்தா கசப்பா மருந்து கொடுப்பார்

By |

சர்க்கார் ஆஸ்பத்திரியில் ட்ரஸ்ஸரை போய்ப் பார்த்தா கசப்பா மருந்து கொடுப்பார்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல் – சிறு பகுதி ——————————————————————————————————————————————— அக்கா, தங்கை ஜோடியா பேரழகா, அதி சுந்தர ரூபவதிகளா இருக்கறதை அங்கே எங்க குட்டநாட்டுலே நிறையக் கண்டிருக்கேன்.  அதுலே சிலது, அம்மா இன்னும் அழகாயிண்டே போவா. பொண்ணுக்கு  பொது பொதுன்னு அம்மாக் களை அத்தைக் களை வந்துடும் சீக்கிரமே. உடம்பும் வண்ணம் வச்சுடும்.  இங்கே சௌந்தர்யம் வர்த்திக்கறதே தவிர இறங்குமுகமே இல்லை. இத்தனைக்கும் அமிர்தவல்லி சீக்குக்காரி.   அமிர்தவல்லிக்கு…




Read more »