Archive For நவம்பர் 6, 2024
வாழ்ந்து போதீரே (அரசூர் வம்சம் நாவல் தொகுதியில் நான்காவது நூல்) நாவலில் இருந்து – இவளை ஏமாற்றியாகி விட்டது. இந்தக் குழந்தையையும் தான். சங்கரனுக்குத் தோன்றியது. ஒரு நல்ல புருஷனாக, ஒரு தங்கமான அப்பாவாக, இதுதான், இவர்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு எல்லாம் என்று தாங்கி முன் நடத்திப் போகிறது தானே சங்கரனுக்கு விதிக்கப்பட்டது? இதில் கொச்சு தெரிசா எங்கே வந்தாள்? அவளோடு எப்படி சுகித்திருக்கப் போனது? ஒரு வாரப் பழக்கத்தில் உடம்பு கலக்கிற…
இந்தச் சிறு பகுதி ‘வாழ்ந்து போதீரே’ என்னும் நான்காவது அரசூர் நாவலில் வருவது – சங்கரன் விழித்துக் கொண்டபோது குழந்தை வீரிட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு குளிர்கால தினம் தில்லியில் விடிகிறது. ஞாயிற்றுக்கிழமைக்கே ஏற்பட்ட சோம்பலும் குளிரோடு இறுகக் கட்டியணைத்துக் கவிந்திருக்க, ஊரே சூரியனை அலட்சியப்படுத்திக் கவிழ்ந்து படுத்து உறங்கும் பொழுது அது. குழந்தை மூத்திரம் போய் உடம்பெல்லாம், மெத்தையெல்லாம் நனைந்து இருந்தது. அது அனுபவிக்கும் மூன்றாவது குளிர்காலம். மாறி வரும் பருவங்கள் பழக இன்னும் நாலைந்து…