வெள்ளி (மே 3) தினத்தில் இந்தியத் திரைப்படத்துக்கு நூறு வயது. தாதாசாகிப் பால்கேயின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ முதல் இந்தியத் திரைப்படமாக வெளியான தினம் மே 3, 1913.
நான் பார்த்த முதல் படம் ‘டாக்ஸி டிரைவர்’. தேவ் ஆனந்த் படம். 5 வயது சிறுவனாக என் தந்தையோடு (அவர் அப்போது சென்னை தி நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேனேஜர்) ராஜகுமாரி தியேட்டரில் பார்த்த படம். வருடம்? 1958-59.
இந்தப் படத்தை இப்போது தலத் மெஹமுத் பாடிய ‘ஜாயே தும் ஜாயே கஹான்’ பாடலுக்காகவும், அப்பா இண்டர்வெல்லில் வாங்கிக் கொடுத்த கோலி சோடாவுக்கும், பாப் கார்னுக்குமாக நினைவு வைத்திருக்கிறேன்.
நீங்கள் நினைவு தெரிந்து பார்த்த முதல் சினிமா எது? எப்போது? எந்த ஊரில்? எந்த தியேட்டரில்? அந்தப் படத்தைப் பற்றி நினைவில் எதெல்லாம் இருக்கிறது?
இந்தக் கேள்விகளை என் நண்பர்களிடம் கேட்டேன். இன்று காலை கிடைத்த ஒரு சுவாரசியமான பதில்.
இந்தியத் திரைத் துறையில், முக்கியமாகத் தமிழ்த் திரைப்படத்தில் தொடர்ந்து 50 வருடமாகச் சாதனை படைக்கிற எம் பெருமைக்குரிய நண்பர் திரு.கமல் ஹாசன் சொல்கிறார் –
strangely i don’t remember my first film . a film according to my family elders …I seem to have seen nearly a 100 times as a child. Madurai veeran it seems ran for 101 days in our little Paramakkudi, I seem to have visited the theatre astride my caretakers hip. My daily rasanjaatham and thayir saadam were slipped into my mouth as i gaped at the black and white spectacle every day. It seems a guy got a price for seeing the film all the 101 days . I did not qualify since i did not buy tickets . being the last offspring of DS had its benefits.
As i said in the beginning I don’t remember any sequences on a review recently ….strange. it seems i used to even lisp away some dialogues from the film to my Periya manni with improvisations. I think like madurai veeran in the last scene my memory is stored in some cloud some where.
KH