நேற்று முன் தினம் மாலை தொலைபேசி ஒலித்தது. பழக்கமான குரல். கவிதாலயா கிருஷ்ணன்.
‘சார் பேசணுமாம் உங்க கிட்டே’
‘ப்ளீஸ் ..’
‘வணக்கம் முருகன்.. நேற்று ஷ்ரத்தாவோட … நீங்க எழுதிய மூணு நாடகமும் பார்த்தேன்.. பிரமாதம்.. மூணும் மூணு விதம்… என்னை ரொம்பவே பாதிச்சுது.. நாடகம் பார்த்துட்டு வந்து வெகு நேரம் அதைப் பற்றியே யோசிச்சிட்டு இருந்தேன்.. concept and content.. presentation.. excellent.. முக்கியமா எழுத்துக்காரரில் கவிதா assertive stage presence and amazing dialogue delivery.. ஆழ்வார்.. TDS அருமையான performance.. ஆழ்வார் கதை அருமை..’
நான் தயங்கித் தயங்கிக் குறுக்கிட்டேன்.
’சார், ஆழ்வார் கதையே உங்களுக்காகத்தான் பதினஞ்சு வருஷம் முந்தி எழுதினது .. குமுதத்திலே சிறப்பாசிரியரா ஒரு இதழுக்குக் க்தை கேட்டு உங்க அசிஸ்டெண்ட்.. இப்போ டைரக்டர் நண்பர் சரண் என் வீட்டில் வந்து காத்திருந்து ரெண்டு கதை வாங்கிட்டுப் போனார். ’ரெண்டையும் கடைசி நிமிடத்தில் இடப் பிரச்சனையால் குமுதத்தில் போட முடியலே, ஆனால் அவை மிக நல்ல கதைகள்’ என்று அப்போ எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தீங்க.. இன்னும் அதை பத்திரமா வச்சிருக்கேன்..’
‘அப்படியா?’
‘ஆமா சார், அதிலே ஒரு கதை, ‘வெறுங்காவல்’ கதிர்லே பிரசுரமாகி அந்த வருட இலக்கியச் சிந்தனை விருதுக்கு திரு தி.க.சி சார் தேர்ந்தெடுத்தார். இன்னொண்ணு கோமல் ஆசிரியரா இருந்த சுபமங்களாவிலே பிரசுரமாகி, அகில இந்திய அளவில் பல மொழிச் சிறுகதைகள் தேர்வில், தமிழுக்காக ‘கதா’ விருது வாங்கிச்சு.. ‘
‘அப்படியா, சந்தோஷம்.. கதா விருது எந்தக் கதைக்கு வாங்கினீங்க?’
‘உங்களுக்காக எழுதின ஆழ்வார் தான் சார்.. ஒரே கதைக்கு உங்க கிட்டே இருந்து ரெண்டு தடவை பாராட்டு.. தேங்க்ஸ் சார்’
கே.பாலசந்தர் சார் ரசித்துச் சிரித்தார்.
‘ நாடகம் முடிஞ்சதுமே நீங்க எங்கேன்னு தான் எல்லோரையும் கேட்டேன்..’
‘வர முடியாமல் ஒரு அவசரம் சார்.. சாரி..’
‘அவசியம் நேரில் வாங்க.. பேசணும்’
இந்தப் பாராட்டை முதலில் நான் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டது என் அருமை நண்பர் KH அவர்களோடு தான். அடுத்து இன்னொரு அருமை நண்பர் கிரேசி மோகன். அடுத்து குடும்பம், நண்பர்களாகிய நீங்கள்..
எல்லோருக்கும் நன்றி
perumai arumai.
vashistar vayal vazthugal.
-surya