Venpa -2

 

எல்லோரும் அறுபது ஆனதுக்கு ‘தப்புத் தப்பாக ‘வாழ்த்துவதால் (ஐம்பத்தொன்பது தானே முடிஞ்சுது!) 🙂

கேட்பீர் சகத்தீரே லேட்ஃபிப்டி தானெனக்கு
நாட்டில் மணிவிழா கூட்டிட வாட்டமாய்
மின்னல்போல் நாள்நகர்ந்து அண்ணன் அறுபதாக
இன்னுமோர் ஆண்டு இருக்கு.

****************************

வெண்பூ வெண்பா 100 முடித்துக் கொண்டிருக்கும் நண்பர் க்ரேஸி மோகன் –

பொன்மகள் வந்தாள் (OR) திரு விளையாடல்….
முக்கியமாக நான் விரும்பும் வெற்றிலையில் வீற்ற மகாலஷ்மியை மறந்து விட்டேன்….

‘’திருத்துழாய் காட்டில், திருமால்கால் மாட்டில்
குருத்திளம் வெற்றிலைக் காம்பில் -திருத்தமாய்
மேவி இலக்குமி தேவி இலங்கிடுவாள்
பூவில் மகரந்தம் போல்’’….//

நம் பதில்

கற்றிலேன் பாப்புனையக் கண்டதும் கேட்டதும்
சற்றே உமக்கேநான் சாற்றுவேன் – உற்றவனே
பெற்றவளுன் நாவமரும் ரெட்கார்ப்பெட் மென்றிடும்
வெற்றிலை வெல்லும் இலை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன