தமிழாசிரியர் நீலமேகம். 1960-களின் இளம் தி.மு.க காரர். நாத்திகர். வகுப்பில் அடிக்கடி பாரதிதாசனை மேற்கோள் காட்டுவார் – கிளையினில் பாம்பு தொங்க விழுதென்று குரங்கு தொட்டு’, ‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து’, ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே’, ‘தமிழுக்கும் அமுதென்றும் பேர்’, ‘சம்(ங்)காரம் நிசமென்று சங்கே முழங்கு’, ‘காடு கமழ வந்த கற்பூரச் சொற்கோ’ என்று நான் நினைவில் வைத்திருக்கும் பாரதிதாசன் கவிதை எல்லாம் அவர் சொல்லக் கேட்டுத்தான். அவ்வப்போது ‘சேயோன்’ என்ற புனைபெயரில், எதிர்க்கட்சிப் பத்திரிகையான முரசொலிக்குக் கட்டுரை எழுதுவார். போஸ்ட் ஆபீசுக்குப் போய் அங்கே வைத்திருக்கிற அஞ்சல் பெட்டியில் அதைப் போட நம்பிக்கையான ஆள் வேண்டும் அவருக்கு. நான் அடிக்கடி முரசொலிக்குக் கடிதம் அப்படி அனுப்பியிருக்கிறேன்.
வகுப்பில் பாடம் நடத்தும் போது முதுபெண்டிர் நிமித்தம் பார்ப்பது குறித்து (இது நெடுநல்வாடை என்று நினைக்கிறேன்) சொன்னார் – வாழ்வரசிகள் இவ்விதம் போவார்கள். நம்ம ஊர்லே வாவரசின்னு சொல்லுவாகளேடா அவுஹ தான்’.
கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த அண்ணாதுரை சொன்னான் – ‘ஓ வாவரச மரமா?’.
நீலமேக வாத்தியார் நாலெட்டு தாவிச் சென்று அண்ணாதுரையைப் பொறி பறக்க அறைந்தார்.
‘எதைப் பரிகாசம் செய்யறதுன்னு கெடயாதாடா.. அண்ணாதுரைன்னு பேருதான்.. அறிவு சுத்த சூனியம்..உங்கப்பாவை நாளைக்கு என்னிய வந்து…’ பொரிந்து தள்ளி விட்டார்.
ஆத்திகராக, நாத்திகராக, குறிப்பிட்ட மதத்தினராக இருப்பதற்கும் விழுமியங்கள், மரபு மேல் மரியாதை வைப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்து கொண்டேன்.
மேலே சொன்ன ‘கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே’ பாரதிதாசன் பாடலைக் கூட பின்னாளில் ஒரு தோழர் குற்றம் சொன்னார் – பெண்மையை சந்தைப்படுத்தப்பட வேண்டிய பண்டமாக ஆக்கிவிட்டார் கவிஞர்’. நான் சொன்னேன் – ‘பாரதிதாசனின் பெண்ணிய, பெண் விடுதலை சிந்தனைகளைப் புரிந்து கொள்ள அவர் படைப்புகள் முழுவதையும் படிக்க வேணும் தோழர். பெண்குழந்தை தாலாட்டும், தலைவாரிப் பூச்சூட்டி உன்னை பாடலையும் படித்து விட்டு இந்தப் பாடலுக்கு வாருங்கள். அவர் மனதின் ஆதூரம் தெரியும்’.
————————————————————————-
Who said that a scholarly sociological / anthropological work should be devoid of any humor?
/Pānigrahanam. To the Nambūtiri Brāhman this is a very important item, being the binding part of the marriage ceremonial. Some years ago, at a village near Chalakkudi in the Cochin State, a Nambūtiri refused to accept a girl as his bride, because the purōhit inadvertently grasped her fingers, to show how it ought to be done at the time of the marriage ceremony. The purōhit had to marry the girl himself. //
(Edward Thurston – Castes and Tribes of Southern India Volume 1)
—————————————————
State Bank of India (Bodinayakanoor branch) has shamed the students who have defaulted in repaying student education loans – average Rs 50,000- by erecting flex boards with their photographs along with their parents’.
Good idea. Let all banks erect flex boards of their heads and boards of directors to laud them for waiving crores of rupees extended as credit to big business houses and those wielding political clout.
——————————————————