music season and panchamirtham in the earsகாதில் பஞ்சாமிர்தமும், காற்றில் வரும் இசைவிழாவும்

மலையாள மகாகவிகளில் ஒருவராகப் போற்றப்படும் உள்ளூர் பரமேஸ்வர ஐயர் (மற்ற இருவர் – குமாரன் ஆசான், வள்ளத்தோள்) தன் ‘அன்னும் இன்னும்’ கவிதையில் ‘விடியல்’ பற்றி வர்ணிக்கிறார்.

பூங்கோழிகள் நிரன்னெங்கும்
புலரிப்பூக்கள் வாழ்த்தவே
பஞ்சாமிர்தம் செவிக்குள்ளில்
பச்சகிளிகள் தூகவே

(பூங்கோழி – சேவல்; தூக – தூவ)

வீட்டில் தமிழும், வெளியே மலையாளமும் பேசி இருக்கக் கூடியவர் உள்ளூர். அவர் மலையாளத்தோடு தமிழிலும் தேர்ச்சி பெற்றிருந்தவர்.

பாரதியின் ‘இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’யால் பாதிக்கப்பட்டு பஞ்சாமிர்தம் செவிக்குள் பச்சைக் கிளி தூவ விட்டிருப்பாரோ?
——————————————

இந்த சங்கீத சீசன் நிகழ்ச்சி நிரலை வேகமாகப் புரட்டிக் கொண்டிருந்தபோது ச்ட்டென்று தோன்றியது – காயத்ரி வெங்கடராகவன் கச்சேரிகள் சாயந்திர slot-ல் எல்லா சபாவிலும் நடக்கின்றன. வாழ்த்துகள் Gayathri Venkataraghavan

‘சிலிக்கன் வாசல்’ நாடகத்தில் இவருக்கு ஒரு honorary mention கொடுத்திருந்தேன்..

அதே போல் இன்னொண்ணு கவனீச்சீங்களா? அக்கரை சிஸ்டர்ஸ் (வயலின்) இந்த சீசனில் ப்ரமோஷன்.. இரு வயலின் கச்சேரி கூட உண்டு போல..

அக்கரை அக்கா தங்கை வாய்ப்பாடு கச்சேரி வேறே – அகாடமியில் பகல் கச்சேரி
——————————————–
இந்த வருஷம் தம்பி ஈரோடு நாகராஜ் கச்சேரி ஒண்ணையும் விடாமல் பார்த்து ரசிக்கக் கொடுத்து வைக்கணுமே, அம்பலப்புழ ஸ்ரீக்ருஷ்ணா

———————————————

இந்த வருஷம் இசை விழாவிலாவது எல்லா வித்வான்களும் பாடப் போகிற ராகத்தைச் சொல்லிட்டுப் பாடலாம். அல்லது சஸ்பென்ஸை தக்க வைக்க, பாட்டு முழுக்கப் பாடிவிட்டுச் சொல்லலாம்.

மேற்கத்திய இசையில் இந்த ‘ புரிஞ்சா ஆகா இந்த ராகமான்னு கேட்டு அனுபவி, புரியலின்னா, சங்கீதத்தை மட்டும் அனுபவி’ மனப்பான்மை இல்லை. சிம்ஃபனி ஆர்கெஸ்ட்ரா எதாக இருந்தாலும், சோலோ கச்சேரியாக இருந்தாலும், வாக்னரா, மொசார்டா, பித்தோவனா, ஷெகோவ்ஸ்கி எழுதிய எந்த சிம்பெனி என்று ஒவ்வொரு ஐட்டத்துக்கும் விவரம் இருக்கும்.

இங்கேயும், இந்துஸ்தானியிலும் NDA non disclosure agreement (among musicians) தான்.

ராகத்தைச் சொல்லி விட்டுப் பாடுவது – அபூர்வ ராகங்களை மட்டும் சொல்வது பற்றி (நண்பர் கே ஜவர்லாலுடன் அரட்டையில் நான் சொன்னது)

ஏசுதாஸ் கூட அப்படித்தான் எனக்கு ரொம்ப வருஷம் முன் (ப்ரபொசர் டி.என்.கே வயலின்) ரிஷபப் ப்ரியாவை அறிமுகப் படுத்தினார். அவர் சொல்லாமல், ‘நம்ம் ப்ரபசர் சார் சொல்வார்’ என்று சஸ்பென்ஸை நீடித்து டி என் கே அவர்களைச் சொல்ல வைத்தார்.

எனக்கென்னமோ எல்லாப் பாட்டுக்குமே சொல்லலாம் என்று தோன்றுகிறது.

இன்னும் கொஞ்சம் எனக்கு இடம் கொடுத்தால், பாடி முடித்ததும், ஒரு வரி அதே ராகத்தில் பிரபலமாகி இருக்கு திரைப்பட இசைப் பாடலை பாடிக் கோடி காட்டி விட்டுத் தொடரலாம். கரகோஷம் அள்ளும்.

வெகுஜன இசையையும், சம்பிரதாய் இசையையும் இணைத்துப் பாலம் போட்டுக் கொண்டே இருக்கும் இளையராஜா போன்ற இசைக் கலைஞர்களுக்கு சபா சங்கீதம் செலுத்தும் மரியாதையாக அது இருக்கும்.
————————-
எல்லா வருஷமும் எல்லா வாய்ப்பாட்டு வித்வான்களுக்கும் விடுக்கும் என் இன்னொரு கோரிக்கை இப்பவும் ரிபிட்டு.

தமிழில் மட்டும் பாடுங்கள் என்று சொல்லவில்லை. தமிழிலும் பாடுங்கள். ’ச’வை ஷ என்று உச்சரிக்காத தமிழில் நீங்கள் வாய்ப்பாட்டையோ, பதினாறாம் வாய்ப்பாடை ராக மாலிகையாகவோ பாடினாலும் ரசித்துக் கைதட்டுகிறோம்.
————————–
நான் இந்த வருட இசை விழாவை ( ரிடையரானதால், நிறைய நேரம் கிடைக்க, வாய்ப்பு கிட்ட ப.அ.ஸ்ரீ (பகவான் அம்பலப்புழ ஸ்ரீகிருஷ்ணன்) அருள் புரிக.

இந்த வருடம் நான் விஜயம் செய்ய இருக்கும் சபா கேண்டின்கள் பற்றி எழுதும் போது சபாவில் அப்போது நடக்கும் கச்சேரி விவரம் கலக்காமல் பார்த்துக் கொள்கிறேன்

2 comments on “music season and panchamirtham in the earsகாதில் பஞ்சாமிர்தமும், காற்றில் வரும் இசைவிழாவும்
  1. பொன்.முத்துக்குமார் சொல்கிறார்:

    // ’ச’வை ஷ என்று உச்சரிக்காத தமிழில் நீங்கள் வாய்ப்பாட்டையோ, பதினாறாம் வாய்ப்பாடை ராக மாலிகையாகவோ பாடினாலும் ரசித்துக் கைதட்டுகிறோம். //

    சாமி, கையக்குடுங்க. இணையத்துல ஏதோ இரண்டு சகோதரிங்க பாடுறாங்க பாருங்க, “ஆஷை முகம் மறந்து போச்சே”-ன்னு. யப்பா காதுக்குள்ள மணல போட்டு தேய்ச்சா மாதிரி இருக்கும். அத எங்க வீட்டம்மணி போட்டு கேட்டு கேட்டு, எனக்கு புடிக்கலன்னு தெரிஞ்சதும் பொண்ணு வேணும்ணே என்கிட்ட வந்து அதையே பாடுவா பாருங்க 🙁

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன