அவசரக் குறிப்புகள்

 

ஏன் அப்டேட் செய்யலேன்னு நண்பர்கள் கேள்வி.

கொஞ்சம் பிசி. மய்யம் வேலை எல்லாம் ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு. போன வாரம் திரு.கமலும் நானும் திருவனந்தபுரத்திலே நீல.பத்மநாபன் சார் நேர்காணல் ஒளிப்பதிவு நடத்தினோம். ஆராய்ச்சி அறிஞர் தொ.ப சந்திப்பும் உண்டு. மூணு வாரம் முந்தி குமுதம் ரா.கி.ரங்கராஜன். வித்தியாசமான இணையத் தலைவாசலாக இருக்கும் மய்யம்.

போன வாரம் நண்பர்கள் வட்டத்துக்காக ‘மை நேம் இஸ் கான்’ பார்த்தேன். சிறிய வட்டம் தான். பத்து பேருக்கும் குறைவு. ஆப்பரேட்டிங் காமிராமேன்னு டைட்டில் கார்ட்டில் மனுஷ்நந்தன் பெயர் வந்ததுமே கமல் சார் கிட்டே சொன்னேன் – நண்பர் ஞாநி மகன்னு. மனுஷ் இப்போத்தான் சின்னப் பையனா, அசோகமித்திரன் சாரோட ரெண்டு சிறுகதைகளை குறும்படம் எடுத்து ஸ்கிரீன் செய்து நான் அதைப் பற்றி கல்கி கட்டுரை எழுதின மாதிரி இருக்கு. பதினைஞ்சு வருஷம் பறந்திடுச்சு. மை நேம் இஸ் கான் அருமையான ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் ரவி சந்திரனுக்கு மனுஷ் நல்லா ஒத்திசைந்து வேலை பார்த்திருக்கார். கமல் கிட்டே படம் பற்றி என் விமர்சனங்கள் சில்தை சொன்னேன். கொஞ்சம் ஸ்வாதி முத்யம் (தெலுங்குலே முச்யம்னு சொல்றாங்க – சத்யநாராயணாவை சச்நாராயணாங்கற மாதிரி), கொஞ்சம் பாரஸ்ட் க்ரம்ப் சாயல் இருக்கேன்னேன். இல்லேங்கறார்.

பத்ரி ‘ப்ராஜெக்ட் எம்’ புத்தகம் கொண்டு வர வழி செய்துக்கிட்டு இருக்கார். அடுத்தது அதான் ரிலீஸ்.

அப்புறம் நம்ம ‘ரெட்டைத் தெரு’ குறும்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் ஓவர். டப்பிங்லே தான் ரொம்ப நேரம் இழுத்துது. நடிக்கறது ரொம்ப சிம்பிளா இருந்துச்சு. டப்பிங் அனுபவங்களை விலாவாரியா எழுத நினைச்சேன். நம்ப எல்.ஏ.ராம் (ராயர் காப்பி கிளப் சகா ராமராயர்), ஹரன் பிரசன்னா இந்த இரண்டு நண்பர்களும் எழுதிட்டாங்களே. அதே தான். நான் வேறே எதுக்கு இன்னொரு தடவை. ஒரே வித்தியாசம், எங்க படத்துலே நான் ஹீரோ 🙂

மீதியை நாளைக்கு எழுதறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன