மூன்று கவிஞர்கள்

கரோல் ஆன் டஃபி

மூன்று கவிஞர்கள்

நேற்றுப் பிற்பகல் சுட்டெரிக்கும் வெய்யில் நேரத்தில் ஒரு நண்பரும் நானும் கவிதை பேசிக் கொண்டிருந்தோம்.

அவர் அண்மையில் படித்த ஒரு தமிழ்க் கவிதையைச் சொன்னார். வாழ்வை முடித்துக் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி மற்ற யாரோ கூறும் கையறுநிலைப் புதுக் கவிதை.

நான் சொன்னேன் –

கவிதை எளிமையாக, உருவகப் பூட்டுப் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறது. ஆனாலும் முதல் வரியிலேயே கடைசி வரிக்கான struct pointer * கிடைத்து விடுகிறது. இன்னொன்று அந்தப் பெண் வாழ்வை முடித்துக் கொள்வது ஒரு செய்தியாக மட்டும் பகிரப் படுவதால் மன லயிப்பு ஏற்படக் கடினமாக இருக்கிறது. அதனாலோ என்னமோ defeatist ஆகத் தொனி உள்ளது.

நான் அடுத்து எனக்குப் பிடித்த ஸ்காட்டிஷ் பெண் கவிஞரான கரோல் ஆன் டபியின் ’பிறந்த மேனிப் பெண் நிற்கிறாள்’ கவிதையைச் சொன்னேன். அது –

Standing Female Nude
by Carol Ann Duffy

Six hours like this for a few francs.
Belly nipple arse in the window light,
he drains the colour from me. Further to the right,
Madame. And do try to be still.
I shall be represented analytically and hung
in great museums. The bourgeoisie will coo
at such an image of a river-whore. They call it Art.

Maybe. He is concerned with volume, space.
I with the next meal. You’re getting thin,
Madame, this is not good. My breasts hang
slightly low, the studio is cold. In the tea-leaves
I can see the Queen of England gazing
on my shape. Magnificent, she murmurs,
moving on. It makes me laugh. His name
is Georges. They tell me he’s a genius.
There are times he does not concentrate
and stiffens for my warmth.

He possesses me on canvas as he dips the brush
repeatedly into the paint. Little man,
you’ve not the money for the arts I sell.
Both poor, we make our living how we can.
I ask him Why do you do this? Because
I have to. There’s no choice. Don’t talk.
My smile confuses him. These artists
take themselves too seriously. At night I fill myself
with wine and dance around the bars. When it’s finished
he shows me proudly, lights a cigarette. I say
Twelve francs and get my shawl. It does not look like me.

இந்தக் கவிஞரை 2005. 2006 காலகட்டத்தில் எடின்பரோவில் ஒரு கவிதை வாசிப்பு நிகழ்விலும், எடின்பரோ ப்ரிஞ்ச் பெஸ்டிவல் அரங்கு ஒன்றிலும் சந்தித்திருக்கிறேன். மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் புதுக்கவிதைத் துறைப் பேராசிரியர். LGBT ஆதரவுப் பணியாளரும் கூட.

கவிதை, ஓவியத்துக்கு மாடலாக வரும் ஒரு பெண்ணின் கூற்று. அவளும் ஓவியனும் ஓவியமும் உலகமும் வாழ்க்கையும் சிறிய எளிமையான வரிகளில் அற்புதமாக வந்து நிற்பதை உணர்கிறோம்.

எடுத்த எடுப்பிலேயே அவளுடைய அலுப்பு – he drains the colour from me…Six hours like this for a few francs.
Belly nipple arse in the window light,

எள்ளல் – I shall be represented analytically and hung
in great museums. The bourgeoisie will coo
at such an image of a river-whore. They call it Art

ஓவியன் கலைப் பார்வை துறந்து இயற்கையான தூண்டுதலால் பார்க்கும் ஆண் பார்வை –
There are times he does not concentrate
and stiffens for my warmth.

கவிதையை நிதானமாக ரசித்து, நண்பரும் நானும் நிறையப் பேசிக் கொண்டு போனோம்.

மாலை மங்கி வரும் போது நண்பர் மறுபடி கூப்பிட்டார்.

’உங்க ஸ்காட்லாந்து கவிஞருடைய கவிதைபாதிப்பில் என் கவிதை. வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கேன். பாருங்க’ என்றார்.

நண்பர் எழுதிய கவிதை
————————————–
கண்ணில் மட்டும் பக்தி ததும்பும் ஒரு நொடி நன்றி
கழுவிடப் போகுமவன் அவளுள் வடித்த காமம்
பற்றித்தொடரும் பாவம்போல எஞ்சும் ரோகம்
பூசடம் தந்த பார்புகழ் ஔடதம்
பெநிஸிலீனைக்குத்திக்கொண்டால்
தின்பண்டத்தைத் தொட்டுத் தின்னும்
துல்லிய சுத்தம் அவ்விடமெய்தும்
இப்படி ஒர் யுகம் ஐந்து வருடத்தில்
இருபது வயதில் கொண்டு சேர்த்தது
நாடகம் சினிமா வடித்த கனவுகள்
நன்றாய்க் கழுவியும் எஞ்சிப்படிந்து
கூட்டிக் கொடுத்தவன் மாமன் முறையென
காதல் பிரமை காட்டி மயக்கிட
ஓரிரு வருடம் அவ்வழி கழிந்தது
ஆணுறை கிழிந்த காரணத்தாலே
பெண்சிசு ஒன்று முழுவுருப் பெறுமுன்
போகித் தீயில் பொசுங்கிப்போனது
மாமனார்களும் மாறி மாறிவர
மாமாங்கம் ஒன்று கடந்து போனது
செருப்பில்லாத கால்கள் போல
உறுப்புக்குள்ளும் காய்ப்புகள் வருமுன்
நொடித்துப் போகும் விளிம்பிலிருந்த
நகைக்கடைக்காரன் தொடர்பு வலுத்து
ஜோஸியக்காரன் ஜாதகம் பார்த்து
ஐஸ்வரியங்கள் மீண்டு மகிழ்ந்தது
இவளால் தான் என
ஏடு படித்துச் சொலவது போல
பேரப்பிள்ளை பெற்றுப் பல்கி வாழ்வது போல
பகல்னவுகள் காண்பதுகூடத் தற்போதில்லை
வாடிக்கையாக வருபவன் கூட
ஜாடைகாட்டி இளயவள் பக்கம்
கடந்து போகிறான் அநுதாபம் இன்றி
கொண்டவன் கண்ணில் அன்றவள் கண்ட ஒருநொடி நன்றி ,
இனி காண்பதற்கில்லை போகித்தீயில் என்றோ பொசுங்கிய அப்பெண் சிசுபோல.
Thanks to the English Lady poet. She spawned one in Tamil as well

இந்தக் கவிதையை எழுதியவர் நண்பர் கமல் ஹாசன்.

Subramanian Narayanan That was a lovely poem from Ann. Kamal’s effort pales in front of it.
Like · Reply · 3 · 23 hrs

Era.Murukan இரா.முருகன் he is so spontaneous SN.. wrote it in an hour’s time. may be it requires an hour more to revisit and revise
Like · 2 · 23 hrs

Era.Murukan இரா.முருகன் ஆன் கவிதை படிக்கும்போதெல்லாம் எனக்கு அருண் கொலட்கர் நினைவு வருவார். சின்னச் சின்னச் சொற்கள். உரையாடல் தொனி. சட்டென்று தொடும் உயரங்கள். காட்சிச் சித்தரிப்பு…..

போர்முனைப் புகைப்படக் கலைஞர்கள் பற்றிய ஆன் கவிதை ஆரம்பம் இது –

War Photographer (poem)

In his dark room he is finally alone
with spools of suffering set out in ordered rows.
The only light is red and softly glows,
as though this were a church and he
a priest preparing to intone a Mass.
Belfast. Beirut. Phnom Penh. All flesh is grass.
Like · Reply · 3 · 23 hrs · Edited

Tk Kalapria போலச் செய்வதில் எப்போதுமே ஒரு செயற்கைத் தன்மை வர வாய்ப்பிருக்கிறது.. மேலும் நிறைய விஷயங்களைச் சுற்றி வருகிறது கமல் கவிதை.என்றாலும் அவரது poetic spirit is awesome
Unlike · Reply · 3 · 22 hrs

Subramanian Narayanan We can add many city’s name to the list but the last line is something extraordinary.
Like · Reply · 1 · 22 hrs

Era.Murukan இரா.முருகன் yes, of course, the poem continues..
Like · 22 hrs

Kiruba Kannan Poetry has many dimensions.. Every time you read it, you find the newer one..so, no poem or poetic talent can be paler than the other …
Unlike · Reply · 1 · 22 hrs

Ramesh Kalyan ஆன் கவிதை அழகாயிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட படி stiffens for my warmth என்பதில் ஒரு நக்கல் தெரிகிறது. மேலும் and get my shawl என்பதில் “போங்கடா ணொண்ணைங்களா” எனும் த்வனி கொள்கிறது. அது எனக்குப் பிடித்திருக்கிறது.

நண்பரின் கவிதையில் நூதனத்தை பழந்தமிழ் பிரயோகத்தில் சந்தமாக்கும் நுட்பத்தில் ஞானக்கூத்தன் வாசனை.

போகித்தீயில் என்பதில் போகி என்பதை -போகி ரோகி யோகி – எனும் வழக்காடல் வரியின் தொடர்ச்சியாய்ப் பார்க்கையில் கவிதை இன்னொரு உருக்கொள்கிறது. இந்த அர்த்த சுதந்திரத்தை தருவதால் இக்கவிதை மேலும் கவிதையாகிறது. நன்றி.
Unlike · Reply · 2 · 22 hrs

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன