என் ‘சில்லு’ நாடகம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி (வியாழன்) சென்னை நாரத கான சபாவில் அரங்கேறுகிறது. 10,11,12,13 தேதிகளில் சென்னையிலும், நவம்பரில் அமெரிக்கா (ப்ரீமாண்ட், கலிபோர்னியா) நிகழ இருக்கும் சில்லு, 2017 புத்தாண்டில் மீண்டும் இந்தியாவில் பரவலாகக் காட்சிப் படுத்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
சில்லுச் சில்லாகச் சில சிந்தனைகள் – 1
அதென்ன CHILLU?
கண்ணாடிச் சில்லு – இந்தச் சொற்றொடரில் சி சொல்வது போல .. அதுதான் சரியான உச்சரிப்பு
ஸில்லு-ன்னு சொல்லலாமா? தாராளமாகச் சொல்லலாம்.
சில்லு – கடைசியில் உகரம் முழுக்கச் சொல்லணுமா? CHILLUUU ?
ஊஹும், அது குற்றியலுகரமாக (பாதி உ) வரும். தமிழில் அப்படித்தான் உச்சரிக்க வேணும்.
CHILLUUUU? சொல்லலாம், தப்பே இல்லை.
நாடகம் பார்க்க அவசியம் வந்துடுங்க.
செப்டம்பர் 10, 11, 12, 13 நாரதகான சபா, சென்னை
சில்லு வாழ்த்துகளோடு – நண்பர் ராஜிவ் மேனோன், சில்லு நாடகத்தை இயக்கும் தீபா ராமானுஜம்
சில்லு சில்லாகச் சில சிந்தனைகள் – 2
உன் கை நகம்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
அகிலமே சொந்தம் அழுக்குக்கு
நகக்கண்ணும் எதற்கு அழுக்குக்கு?
தூக்கி சுமக்கும்
அருமை குழந்தையின்
பிஞ்சு துடைகளில்
ரத்தம் கசியும் ..
இடது கை நகத்தை வெட்டியெறி – அல்லது
குழந்தை சுமப்பதை விட்டுவிடு //
இது பசுவய்யா (சுந்தர ராமசாமி) கவிதை வரிகள் – உன் கை நகம் கவிதையின் தொடக்க வரிகள்.
சில்லு-க்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
அடுத்த பதிவில்..
கூகிள் கடோத்கஜன்
மயிலை கற்பகாம்பாள் சந்நிதியில் நண்பர் கிரேசி மோகனின் ‘கூகிள் கடோத்கஜன்’ நாடகத் துவக்கத்துக்கான பூஜையில் கலந்து கொண்டு சற்று முன் திரும்பினேன்.
நண்பர்கள் கிரேசி மோகன், மாது பாலாஜி, அப்பா ரமேஷ், வாசு, பாட்டி சுந்தரராஜன், ஏ.ஆர்.எஸ், பார்த்தி மற்றும் இதர கிரேசி கிரியேஷன்ஸ் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த மாதம் 14-ந் தேதி அரங்கேறுகிறான் ‘கூகிள் கடோத்கஜன்’. நாரத கான சபா அரங்கில் தான்!
’சில்லு’ நாடக அணியின் சார்பில் கிரேசி கிரியேஷன்ஸ் நண்பர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.