New bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 26

இருட்டில் லலி தொலெந்தால் தெரு நோக்கி உருண்டு கொண்டிருந்தது ராலே சைக்கிள். முன்னால் சைக்கிள் பாரில் என் இறுக்கமான கை அணைப்பும், நெருக்கமும், ஏறும் உடல் தகிப்பும் பகிர்ந்த்படி அமேலி. அவள் தோளில் என் முகவாய் இதமாகப் பதிந்து, சிவந்த காது மடல்களை உதடுகள் வருடிக் கொண்டிருக்க, பெடல்களை இயந்திரமாக மிதித்தபடியே நான். ஐந்து நிமிடம் முந்திப் பார்த்த விபத்தை மனதில் திரும்பத் திரும்ப நிகழ்த்திப் பார்த்தபடி ஊர்ந்து கொண்டிருக்கிறேன்.

நிழற்பட்ங்களின் நீண்ட தொகுதி போல காட்சிகள் . ஒன்று மனதில் வந்து ஒரு வினாடி நிலைத்துக் கலைய, இன்னொரு காட்சி அதன் மேல் பரவி அதைத் துடைத்து அழித்தபடி மெல்ல நகர்கிறது. .

இந்தத் தெருவுக்குப் பொருந்தாத வேகத்தில் முன்னேறி வருகிற பேங்க் ஜீப். நானும் அமேலியும் இருந்த வீட்டு முகப்பை பேங்க் ஜீப் நெருங்குகிறது. வெளிச்சத்துக்கு முதுகைக் காட்டியபடி அணைப்பை விட்டு விலகாமல் முத்தமிட்டபடி இன்னும் நெருங்கி நிற்கும் அமேலி. என் முகத்தை அவள் முகம் பகுதி மறைக்க தன்னிச்சையாக என் கரங்கள் அவள் தோள்களைச் சுற்றி இறுகி இருப்பதை உணர்கிறேன். அவற்றை விலக்க முயற்சி எடுக்க உடல் ஒத்துழைக்கவில்லை. அடுத்து இருக்கும் தெருத் திருப்பம் இருளில் மூழ்கி இருந்ததை விட்டெறிந்த ஹெட்லைட் வெளிச்சம் கசிந்து காட்டுகிறது. டிரைவர் வண்டியை வளைத்துத் திருப்ப முற்பட ஹெட்லைட் வெளிச்சம் தாறுமாறாகக் குலைந்து சுவரில் பூசி வழிந்து காணாமல் போகிறது..

என் பின்னால் ஏதோ சத்தம். பெரிய குரலில் பூனை கத்துகிறது. என் கண்களை மறைத்துள்ள அமேலியின் தலைமுடியைச் சற்றே விலக்கிப் பின்னால் பார்க்கிறேன். கடுவன் பூனை. நாங்கள் பின்னிப் பிணைந்து நின்ற வீட்டு வாசலுக்குப் பக்கவாட்டில் விரிந்த கூரையில் இருந்து குதித்து ஓடும் பெரிய பூனை அது. இருட்டு பொதியாக நகர்ந்து போகிறது போல், கண்கள் மட்டும் மின்ன என் தோளில் பூனையின் நகம் நீண்ட கால்கள் தட்டிப் போக, விதிர்விதிர்க்கிறேன். தெருவில் குறுக்கே ஓடிய கடுவன் பூனை திரும்பிப் பார்ப்பது என்னைத்தான்.

வெய்ட் அமி நான்.

முடிக்க விடாமல் அமேலி திரும்ப வாயில் அழுந்த முத்துகிறாள். எதையும் பார்க்காதே, ஏதொன்றும் கேட்க வேண்டாம் என்று சொல்கிற்வளாக அணைப்பைச் சற்றே நெகிழ்த்தி உடனே இன்னும் இறுக்கமாகத் தழுவிக் கொள்கிறாள். நான் அவள் தோள்களுக்கு மேல் அவசரமாக்த் தலை உயர்த்திப் பார்க்கிறேன்.

டிரைவரின் கட்டுப்பாடு விலகிய ஜீப் அவசரமாக பிரேக் போடப்பட்டு தீனமாக அலறியபடி பாதை விலகித் தத்தளிப்பதைப் பார்க்கிறேன். எதிரே பூச்செடி வைத்த நகராட்சி வேலிக் கம்பிகளை அது இடித்து உடைத்து நின்றதும் அப்பா திக்பிரமை அடைந்து உட்கார்ந்திருந்ததும் அடுத்தடுத்து காட்சியாகின்றன. அப்பா என்னைப் பார்க்கவில்லை. அடுத்த வினாடி சர்வு சர்வ நிச்சயமாக மேலே கசிந்து அழுத்தும் என்று உணர்ந்த அதிர்ச்சி முகத்தில் எழுதி இருக்க அவருடைய பார்வை எதிரே வெற்றுச் சுவரை வெறிக்கிறது. நான் அதை உள்வாங்கும் முன்னால் ஜீப் நின்று போய் ஹெட்லைட் பிரகாசமாகி அணைகிறது. உயிர் இழைந்து தொடர்ந்த ஆசுவாசம் அப்பா முகத்தில் தெரிகிறது..

’என்ன …என்ன ஆச்சு’

நடுங்கி ஒலிக்கும் அப்பாவின் குரல். ஏதோ சமாதனம் சொல்லியபடி இறங்கி நின்று பூச்செடிக்கு இட்ட கம்பி வேலியில் புகுந்து நிற்கும் ஜீப்பின் ஹெட்லைட் நொறுங்கியதைப் பார்வையிடும் ஜீப் டிரைவர்.

என்னை இவர்கள் பார்க்கவில்லை. அமேலியையும்.

அவளை அவசரமாக நெம்பித் தள்ளி முன்னால் செலுத்தியபடி அவள் பின்னால் முகம் மறைத்து வேகமாக நடந்தேன்.

சைக்கிளை எடு அமேலி

அமேலி சைக்கிளை உருட்டி வர, இருளில் அவளோடு அவள் நிழலாகக் கலந்து அவளில் மறைந்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.

’ஏய் நாம லலி தொலெந்தால் தெரு போகணும் … நீ ஈஸ்வரன் தருமராஜா தெருவுலே இருக்கே’..

அமேலியின் தோளில் ஆழப் படிந்திருந்த என் கன்னத்தில் தன் கன்னம் இழைத்தபடி அவள் சொன்னாள். அவள் வாயில் சூயிங்கம் மணக்க மணக்க வாசனையாகக் கூட வருகிறது. கேட்டால் என் வாய்க்குக் கடத்துவாள். வேண்டாம். அவளை வீட்டில் விட்டு விட்டுத் திரும்பி விடலாம். உடம்பு சொல் பேச்சு கேட்காமல் தறிகெட்டு ஓடுவதை நான் இல்லாமல் செய்வேன். இந்த வினாடி இதுவும் இதோ கடந்து போகும்.

கர்னல் வீட்டு வாசல். அமேலி சைக்கிளில் இருந்து குதித்து இறங்கி, வாசல் கதவைத் திறக்க முன்னால் போனாள். கதவைத் திறந்தபடி என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

’வாயேன் ஏன் வாசல்லேயே நிக்கறே’.

முழங்கால் வரை படிந்து இடுப்போடு ஒட்டிய கறுப்பு ஸ்கர்ட்டும் சிவப்பு மேலுடுப்புமாக மதர்த்து நிற்கிறாள் அமேலி. எங்கெங்கோ வலுக்கட்டாயமாக நிறுத்த முயன்று தோற்ற என் கண்கள், அவள் கனத்த மார்பகங்களில் சரண் புகுகின்றன. நினைப்பை ஒருபாடு அலைக்கழிக்கிறாள் இவள். காமம் விழித்துக் கொண்டு திமிர்த்து நிற்கிறது. உள்ளே போ போ என்று உடலை வற்புறுத்துகிறது அது.

மாட்டேன். வசப்பட மாட்டேன். காமம் தவிர்த்துத் திரும்பி விடுவேன்.

’மோனாஷ், நீ டயர்டா இருக்கே. உறங்கி ரெஸ்ட் எடு. நான் போறேன்’.

சாவு முகத்தில் எழுதியிருக்க அப்பாவின் பார்வை வெற்றுச் சுவரில் நிலை கொண்டதில் நினைவைத் திசை திருப்பு. நினைப்பு வழுக்கி அமேலியின் மார்பில் திரும்ப நிலைக்கிறது மனதும் பார்வையும்.

ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டிருந்தோம். இந்தச் சதுரங்கத்தில் முதல் காய் நகரத்தப் போவது யார்? இரண்டு பேருக்குமே தெரிந்து கொள்ள ஆவல். யார் முதலில் நகர்ந்தாலும் சேர்ந்தே பசியாறலாம். எதிர்பார்ப்பில் வாய் உலர்கிறது.

அருகில் வந்தாள். வா. ஒற்றை வார்த்தை தான். கிசுகிசுவென்று அவள் என் காதில் சொன்னது காது மடலை ஜிவ்வென்று சிவக்க வைத்தது. திரண்டெழுந்து வரும் மோகத்தில் வந்தது அது. உடல் பசி தீ நாளமாக உயிர்த்துத் தகிக்க, என் அமேலி, என்னை எங்கே கூட்டிப் போகிறாய்?

’கர்னல் அங்கிள் எங்கே? பொமனாட்லே நடக்கப் போயிட்டாரா’? நான் உள்ளே, எல்லா விளக்கும் அணைந்த கூடத்தைப் பார்த்தபடி கேட்டேன்

’டெல்லி போயிருக்கார். எக்ஸ் சர்வீஸ் மென் கான்பரன்ஸ். அடுத்த வாரம் தான் வருவார். ஆண்ட்டியை அவங்க அண்ணன் வீட்டுலே தற்காலிகமா விட்டிருக்காங்க. இங்கே இப்போ நான் தான் எல்லாம்’.

அவள் என்னோடு உள்ளே நட்ந்து கதவை அடைத்துச் சொன்னாள்.

’ஷொகொலா கேட்டியே சாப்பிடறியா’? இன்னும் வாசனை சுழன்றடிக்கும் சூயிங் கம் மென்றபடிக்குக் கேட்டாள்.

நான் வேண்டாம் என்றேன். சூயிங்க் கம்? உலர்ந்த வாய்க்கு வேண்டும். சரி என்றேன்.

’இந்தா, அப்புறம் திரும்பக் கொடு’..

அவள் குரல் முணுமுணுப்பாக என் காதில் கேட்க, சூயிங் கம் இடம் மாறியது.

அணைகள் எல்லாம் உடைந்து சிதற அவளும் நானும் இன்னும் நெருங்கினோம். இந்த சதுரங்கத்தில் நானே தோற்று ஜெயிக்கிறேன். காமம் வாழ்த்தப் படட்டும். ஆதாமும் ஏவாளும் ஒன்று கலக்க தேவன் விதிக்காவிட்டால் என்ன. நாங்கள் விதித்துக் கொள்வோம்

சூயிங்கம் மென்றபடியே அவளை அணைத்து அறைக்குள் நடந்தேன். எனக்குப் பழக்கமான படுக்கை அறை. பழக்கமான பெண். பழக்கமான உடல் வாடை. பழக்கம் இல்லாத மிருகம் உறுமி நட்க்க ஆரம்பிக்கிறது.

படுக்கையில் சாய்ந்தபடி அமேலிக்காகக் காத்திருக்க, அவள் படுக்க்கை பக்க ஸ்டூலில் வைத்த சிறு மரப் பெட்டகத்தைத் திறந்து உள்ளே முத்துப பரலாக மின்னிய குளிகையை உறை பிரித்து எடுத்தாள்

’உடம்பு வலிக்குது. மாத்திரை போட்டுட்டு வரேன்’

‘எனக்கும் கொடு’

நான் அந்தப் பெட்டியைப் பறிக்க அவள் வேண்டாம் என்றாள், கையை விலக்கி நானும் ஒரு முத்தை வாயில் இட்டு விழுங்கினேன்.

‘எனக்கு ஒற்றைத் தலைவலி. மைகிரேனை அந்தக் குளிகை குணப்படுத்துமா பார்க்கலாம்’..

’தலையே இல்லாம இருந்தாலும் தலைவலியை இல்லாம செஞ்சுடும்,’ என்றபடி இன்னொரு பெட்டியைத் திறந்தாள் அவள். சாக்லெட்டுகள்.

இருக்கட்டும். அப்புறம் சாப்பிடலாம்’ என்றேன்

அப்புறம்னா?

எல்லாம் முடிஞ்ச பிறகு என்கிறேன்.

எப்போ முடியும்?

நான் அவளைப் படுக்கைக்கு இழுத்தேன். சாக்லெட் பெட்டியின் அடியில் ஒரு சிறு பலகை அடைப்பைத் திறந்து என்னிடம் காட்டினாள்.

வரிசையாக் ஏதோ பொதிந்திருந்தது. பீடிங் பாட்டிலுக்கா இதெல்லாம்?

மடையா.. அவள் என் காது மடலில் விரலால் தீக்கோடு இழுத்தபடி சொன்னாள் – இது காண்டோம்..

கை நீட்டினேன்.

கட்டை விரல்லே மாட்டிக்கிட்டு அழகு பார்க்கப் போறியா?

அவள் சிரித்தபடி என் பிடியில் இருந்து விடுபட்டுப் படுக்கையில் இருந்து குதித்து இறங்கினாள்.

இரு, ரொட்டி டோஸ்ட் பண்ணி எடுத்து வரேன். வயிறு ரொம்ப பசிக்குது. ஒரு நேரத்துக்கு ஒரு பசி தான் பொறுக்க முடியும்.

நான் உடம்பும் மனசும் லேசாகிப் பறக்கத் தொடங்கியிருந்தேன்.

முட்டை இருக்கு. உனக்கும் ஆம்லெட் போட்டுடறேன் ஓகே?

நான் ஏதோ மாய உலகத்தில் நழுவியபடியே ஊம் என்றேன்.

அமேலி ஏன் மிதந்து வரே?

தழையத் தழைய வெள்ளைப் பாவாடை உடுத்தபடி அமேலி அறைக்குள் வந்தாள். என் கண் இமைகள் களைப்போ கனவோ காரணம் மெல்ல மூடிக் கொண்டு வர வலுக்கட்டாயமாகத் திறந்து வைத்திருந்தேன்.

சாப்பிடலாமா? அமேலி குரல் சுவர்களில் மோதி இனிமையாக எதிரொலித்துச் சூழக் கிறக்கம் கொண்டு சிரித்தேன்.

என்ன சாப்பிடணும்?

என்னைச் சாப்பிடு என்கிறாள்.

அவள் மடியில் நான் படுத்திருக்கிறேன். இல்லை, அவள் தான் என் மடியில். ஏதோ ஒன்று. ஊட்டுகிறேன். ஊட்டுகிறாள்.

என்ன சாப்பிடுகிறேன் என்று தெரியவில்லை.

சாண்ட்விச் நடுவிலே என்ன வைச்சிருக்கே அமேலி. உதடா, விரல்களா? போகட்டும்.. ஏதோ ஒண்ணு.

ராட்சசப் பசி உனக்கு.

அமேலி என்னைக் காட்டிச் சிரிக்கிறாள். உடுப்போடு இருக்கிற கர்வம். அவளுக்கு நானும் தான் அப்படி இருந்தேன். எப்போது அது?

அமீ ..ஏய் நீயுமா.. சிகப்பு ஸ்கர்ட் எங்கே?

ஸ்கர்டை சாப்பிடப் போறியா?

நான் படுத்தபடி சிரிக்கிறேன். இதென்ன இன்று இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. ஒன்றுமே இல்லாமல் சிரிப்பு கும்மாளி கொட்டிப் புரண்டு வந்து வாய் கொள்ளாமல் வ்ழிகிறது.

மின்சாரம் நின்று ஃபேன் சுற்றாமல் நிற்கிறது. வியர்வை மெல்ல அரும்புகிறது. குளிர்ந்திருக்கிறது சிமெண்ட் தரை. கீழே சரிகிறோம்.

ஷகொலா எடுத்துட்டு வரேன்.

ஏய் இது இல்லே ஷகொலா. என்கிறாள் அவள் இருட்டில் என் விரல்களை வருடி..

எல்லாம் ஒண்ணு தான்.

மேலே கவிகிறவள் சுகமாக பரவுகிறாள். அவள் உதடுகள் பெரிதாகி என்னை ஒற்றுகின்றன.

பிரஞ்ச் முத்தம். நான் தரேன். நான். யாரோ ஒருத்தர். இல்லே ரெண்டு பேரும்.

மின்சாரம் திரும்ப வந்துவிட்டது.

லைட்டை அணைச்சிடு.

நானும் அமேலியும் பூப்பூவாகத் தலையணைகள் பூத்திருக்கும் பெருவெளியில் மிதக்கிறோம். இல்லை, வார்த்தைகள் என் வசமில்லாமல் வழுக்கித் தானே வந்து விழுந்து சிரிக்கின்றன. தலையணையில் விரிந்த அமேலியின் தலைமுடியில் ஹேர்ப்பின்னை விடுவிக்கக் கைநீட்டுகிறேன். கட்டு அவிழ்ந்த கூந்தல் என்னை மூடி அடிமை கொள்ளட்டும். எவ்வளவு வாச்னையடி நீதான் பெண்ணே.

ஹேர்ப்பின் அங்கே இல்லே ம ஷெரி.

இலக்கு தவறிச் சந்தோஷமாக ஊரும் கையைத் தடுக்காமல் அவள் சொல்கிறாள். சமுத்திரக் கரை இது. அமேலியின் மெத்தென்ற கை விரல்களோடு கை பிணைகிறது. அலை காலில் நனைக்க நிற்கிறோம். அவள் முதுகு என் மார்பில். என் கைகள் அவளுக்கு ஆடையானது. எழுந்து வரும் அலை மெல்ல வெகு மெல்ல என் கண்ணைத் தழுவி நனைத்து மூழ்கடிக்க நான் அமேலி என்னும் பிரவாகத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கிறேன். அவள் என்னிலும். நான் அவளிலுமாக ஒரே மனமாக, ஒற்றை உடலாக இழைந்து கலந்து, லயமும் தாளமும் ஒத்திசைந்து அதிர இயங்குகிறோம். மலை உச்சிக்குப் பயணித்துக் கொண்டிருக்கும் .ரெண்டு பேர் நாங்கள். போனதும் திரும்பக் கீழே சறுக்கி இறங்குவோம். மீண்டும் உச்சிக்குச் சேர்ந்து பயணமாவோம்..

கண் விழித்தபோது இடம், காலம் தெரியாமல் இருட்டில் ஒரு நிமிடம் குழம்பி இருந்தேன். படுத்திருக்கிறேன். மேலே சீராகப் போர்த்திய போர்வையில் மிதமான யுதிகோலன் வாடை மேலெழுந்து வருகிறது. இது ஷோலாப்பூர் பருத்தியும் கம்பளி நூலும் கலந்த போர்வை இல்லை. வழுக்கிப் போகிற பட்டுத் துணி.

எங்கே இருக்கிறேன்?

எழுந்து உட்கார்ந்தேன். பக்கத்து ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் விழுந்து கொண்டிருக்கிறது.

இருக்கும் இடம் என்ன என்று ஒரு வினாடி குழப்பம்.

அடுத்த வினாடி முழு ராத்திரியையும் மனதுக்குள் கொண்டு வந்தது.

அப்படித்தான் நினைக்கிறேன். அமேலியோடு இங்கே வந்து சேர்ந்தது வரை எல்லாம் நினைவு உண்டு. படுக்கைக்கு அருகே சிறிய் முக்காலியில் இருக்கும் அந்த மரப் பெட்டியைத் திறந்தது வரை நினைப்பு துல்லியமாக உண்டு.

அப்புறம்?

ஒரே சந்தோஷமாக, குழப்பமாக, வரிசை கலைந்து அடுக்கிய காட்சிகளாக, கொட்டிக் கலந்த வண்ணங்களின் கலவையாக, ஒரு இயக்கம் தீரும் முன் மற்றது மேலெழுந்து பரவி அதுவும் நிறைவடையும் முன் அடுத்தது விழிப்பதாக அந்த ராத்திரி நீண்டு போனது என்பது தவிர வேறேதும் நினைவில் இல்லை.

அமேலி எங்கே?

எழுந்து நின்றேன். எதிரே டிரஸ்ஸிங் டேபிள் முக்ம் பார்க்கும் கண்ணாடியில் முறைக்கிறவன் உடை துறந்திருந்தான்.

அந்நியர் வீட்டில் எனக்கு சொந்தமில்லாத படுக்கையில் நக்னனாக. கட்டிலுக்கு அடியே சுருணையாகக் கிடந்த கால் சராயைக் குனிந்து தேடி இழுத்தேன். அங்கே இருந்த மாத்திரை உறை, சைபால் டப்பா சகிதம் கசங்கி வெளியே வந்த உடுப்பைத் தொடர்ந்து ச்ட்டையும் வந்தது. உள்ளாடை எங்கே போனது?

அவசரமாக உடுத்துக் கொண்டேன். அமேலி எங்கே? அமேலி.. அமேலி..

சமையல் அறையில் அவளைப் பார்த்தேன். என் காலடிச் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள். சின்னதாக ஒரு சிரிப்பு. குளித்திருக்கிறாள். சுத்தமான உடுப்பு அணிந்திருக்கிறாள். எல்லா நிதானமும் கலந்து வந்திருக்க அடுப்பில் பால் குக்கரை அமர்த்திக் காய்ச்சிக் கொண்டிருக்கிறாள்.

ஹாலில் உட்காரு. கபே எடுத்து வரேன்.

பெண்வாடை மிகுந்த பாத்ரூமில் துவைத்து பிளாஸ்டிக் பக்கெட்டில் வைத்த துணிகளில் என் உள்ளாடை உண்டு. மெல்ல எடுக்கிறேன். அமேலியின் மார்க்கச்சையும் சேர்ந்து வருகிறது. ஹால் திரும்புகிறேன்.

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. நினைவு வராமல் தொலைந்த என் பொழுதுகளை அமேலி திரும்பச் சொல்ல முடியுமா தெரியவில்லை. என்னோடு காலத்தினூடே பயணம் செய்தவள் இல்லையா அவள்? அல்லது போதை கொண்ட மனம் சமைத்த குழப்பமான கனவா அது?

அமேலி சீக்கிரம் வா.

அவள் காபிக் கோப்பையை என்னிடம் கொடுத்து விட்டு சோபாவில் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

ஒரு மடக்கு குடித்து விட்டு ரொம்ப சூடா இருக்கு என்றேன். சரி, இதை வாங்கிக்க, சூடு தணிஞ்சிருக்கு என்று நமட்டுச் சிரிப்போடு சொல்லியபடி அவள் குடித்துக் கொண்டிருந்த குவளையை என்னிடம் கொடுத்தாள்.

அமேலி, ராத்திரி

ராத்திரிக்கு என்ன? அவள் என் கண்களில் ஊடுருவிப் பார்த்தபடி கேட்டாள்.

என்ன நடந்ததுன்னு

எனக்குத் தெரியாது என்றாள்.

வந்ததும் அசந்து படுத்துத் தூங்கிட்டேன் போல.

ஆமா அசந்துட்டே என்றாள் கள்ளச் சிரிப்போடு.

சாரி உனக்கு கஷ்டம் கொடுத்திட்டேன்.

ஒரு கஷ்டமும் இல்லே

அவள் கடைசி வாய் காப்பி குடித்து முடித்தாள். என்னையே பார்த்தபடி எழுந்து நின்றாள்.

குவளை தானே. முடிச்சுட்டு நானே கொண்டு வந்து கிச்சன்லே வைக்கறேன் அமேலி.

அவள் பெட்ரூமுக்கு நிதானமாக நடந்து போய்த் திரும்பி வந்தாள். மரப் பெட்டி அவள் கையில் இருந்தது.

இந்தா.

சற்றே திறந்து கொண்ட பெட்டியில் இருந்து பிரஞ்ச் சாக்லெட்கள் தரையில் சிதறின.

வேணாம் அமீ, இப்போ சாப்பிட மூட் இல்லே.

சாப்பிடச் சொல்லல.

புரியாமல் பார்த்தேன்.

பெட்டிக்கு இன்னொரு தடுப்பு இருக்குன்னு சொன்னேனே

நினைவு வந்தது. காண்டோம். அழகாக மெல்லிய் ப்ளாஸ்டிக் அட்டையில் பொதிந்து அடுக்கி நாலு வரிசையில்

நான் திரும்ப அந்த மரப்பெட்டியை வாங்கி அவசரமாக இரண்டாம் அடுக்கைத் திறந்து பார்த்தேன்.

முதல் இரண்டு இடங்கள் வெறுமையாக் இருந்தன.

இதுலே எக்ஸாம் வச்சா டிஸ்டிங்ஷன் தான் நமக்கு.

அவள் சிரிப்பில் நாணம் கலந்திருந்தது.

எழுந்து என் கோப்பையை வாங்கிக் கொண்டு உள்ளே போக, அப்படியே சிலையாக அமர்ந்திருந்தேன்.

ஆம்லெட் போடட்டா என்று கிச்சனில் இருந்தே விசாரித்தாள் அமேலி. நாங்கள் குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டது போல தோன்றிக் கடந்து போனது.

மனதில் ஒரு சலனமும் இல்லை. தப்பு செய்த குற்ற உணர்ச்சி இல்லை. எண்ணி எண்ணிக் குமையப் போவதெல்லாம் இல்லை. ஏதோ நடந்து விட்டது. இப்போது இல்லாவிட்டால், இங்கே நடக்காவிட்டால் வேறு எங்கோ, எப்போதோ நடந்திருக்கும்.

மனம், முகம் தெரியாத யாரை எல்லாமோ எதிர்த்து நிற்கிறது. அப்பாவும் ஜோசபினும் கயலும் அமேலியும் நினைவின் அறைகளைத் திறந்து வரட்டும். எல்லாம் கடந்து, இதுவும் சகஜமாகும் விரைவில்.

நான் நம்பத் தொடங்கி இருந்தேன்.

எழுந்து கிச்சன் வாசலில் கதவு நிலையைப் பிடித்துக் கொண்டு ஒரு நிமிடம் நின்றேன். அமேலி ஆம்லெட் உடைத்து ஊற்றிச் சுட்டதை லாகவமாக் ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே இடம் மாற்றிக் கொண்டிருந்தாள்.

சாப்பிட்டுக் குளி. என்ன? லூஸ் பிட்டிங் ஜீன்ஸ் ஒண்ணு இருக்கு என் கிட்டே. யூனிசெக்ஸ். குளிச்சுட்டு அதையும் என்னோட டீ ஷர்ட்டையும் போட்டுக்க. லிங்கரி வேணுமானாலும் நோ ப்ராப்ளம்..

சொல்லி விட்டு, அவள் கலகலவென்று சிரித்தாள்.

இல்லே அமேலி நான் வீட்டுக்குப் போகணும்

இது வீடா தெரியலையா? அவள் கேட்டாள்.

குடும்பம் நடத்தற இடம் தான் வீடு. .

நீயும் உங்க டாடியும் சேர்ந்து அங்கே தங்கி இருக்கீங்க. இருந்து, சாப்பிட்டு, உறங்கி, குளிச்சு..ரொம்பச் சின்ன ஹாஸ்டல் அது. அவ்வளவு தானே.. இங்கே.. ஷகொலா, புல்ஸ் ஐ, நான்.. நீ..

எனக்கு என் மேல் கோபம் வந்தது. அவள் மேல் பச்சாதாபமும் வந்தது. எங்கள் சதுரங்கத்தில் முதலில் காய் நகர்த்தியவன் நான் தானே.

தப்பெல்லாம் இல்லை. அவளுக்கும் அதேபடி தான். உடல்களின் பசியும் அருகே அருகே இருக்க நேர்ந்ததும், சேர்ந்து மயங்கியதும், இணை விழைந்ததும், , முயங்கிப் பசி ஆறியதும் எல்லாம் கடந்து போகும் வாழ்க்கையின் சாதாரண அம்சங்கள். உண்பதும் உறங்குவதும் போல.

ஜாக்கிரதையாகத் தான் நடந்து கொண்டிருக்கிறோம். பயலாஜிகல் விளைவுகள் வராமல் அந்த மயக்கத்திலும் செயல்பட்டிருக்கிறோம்.

மயக்கம். எப்படி வந்தது? எப்போது வந்தது? மூளையை வற்புறுத்தித் தேடச் சொல்ல, தலைவலியோடு நான் அமேலியிடம் வாங்கிப் போட்டுக் கொண்ட காப்ஸ்யூல் நினைவில் வந்தது. அவளும் விழுங்கிய்து அது. வலி பறந்து போய் மனமே மலை முகட்டில் றக்கை கட்டிப் பறக்க, இன்னும் சந்தோஷமும் துணிச்சலும் அலை அலையாக மனதில் உயர்ந்து கொண்டிருக்க அந்தக் குளிகை தான் காரணம்.

இன்னொன்று இருந்தால் இனி தலைவலியே வராமல் தடுத்து விடலாம் என்று தோன்ற அமேலியைக் கேட்டேன்.

ரொம்ப சாப்பிடக் கூடாது. நானே இனி எடுத்துக்கப் போறதில்லே. எல்லா போதைக்கும் குத்தகை எடுத்து நீ வந்துட்டியே

நான் தரையில் கிடந்த வெற்று மாத்திரை உறையை எடுத்தேன்.

போகிறபோது ஞாபகமா அதைக் குப்பைத் தொட்டியிலே வீசிட்டு போயிடு.

அமேலி தட்டில் வைத்து சுடச்சுட நீட்டிய சாண்ட்விச்சை ஆம்லெட்டோடு அவசரமாக விழுங்கி விட்டு சைக்கிளில் புறபட்டேன்.

விடிந்து வெகு நேரமாகி இருந்த தெருக்களில் வெங்காயம் விற்கிற வண்டிகளும், கூவிக்கூவி மீன் விற்பவர்களும், வீடுகளுக்குப் பால் கொடுத்து வெறும் குவளைகளோடு சைக்கிள் ஏறிப் போகிற தலைப்பாகை தரித்த பால்காரர்களும், அபூர்வமாக கூவித் தயிர் விற்கும் பெண்களும், விளக்கெண்ணெய் சிறிய கொட்டானில் சுமந்து விற்று வரும் கிழவியும் எழுப்பும் சத்தம் வெயிலோடு உயர்ந்து வந்தது.

சைக்கிளை வீட்டுக் காம்பவுண்டுக்குள் நிறுத்தி விட்டு மாடி ஏற்ப் போகும் போது அவ்சரமாக உள்ளே இருந்து வந்தார் பேங்க் வாட்ச்மேன் வின்செண்ட் நடராஜன். முகம் வாடி இருந்தது. பத்ட்டமாகக் காணப்பட்டார் அவர்.

என்ன அண்ணே?

நான் விசாரிக்க அவர் குரல் இடறியது.

தம்பி தம்பி

சொல்லுங்க அண்ணே

நீங்க இங்கேயே இருப்பீங்களாம். மேலே வ்ர வேணாம்னு

யாரு சொன்னது?

நான் தான்.

அப்பா மாடிப்படி இறங்கி வந்து கொண்டிருந்தார்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன