ரூபன் ஜே Ruben Jay எழுதியது :
நன்றி EraMurukan Ramasami
மூன்று நாள் மாயலோக சஞ்சாரம் த்வ்யமாக இருந்தது.
நடேசன்,குஞ்சம்மினி,தெரிசா அப்புறம் அந்த துளுவ பட்டன் எல்லாம் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார்கள்.
அந்த மகாலிங்கையன் என்கிற மகானுபாவன் சென்னை வந்த பிறகு நடக்கும் சிங்கம்பட்டி ஜமீன்,கஞ்சா,போலீஸ் தவிர மற்ற எல்லாம் நேர்த்தி,! இது மட்டும் பகவதி கன்னத்தில் விசாலம் வைத்த திருஷ்ட்டி பொட்டு
சிறையில் இருக்கும் ரெட்டி@ மகாலிங்கய்யனை தெரிசா பார்க்க வரும்போது ‘ஜேம்சை’ ஏன் கொலை செய்தாய் என்கிறாள்.
அவன் முதன்முதலாக தெரிசாவிடம் தமிழில் பேசுகிறான்.
அப்புறம் விடை பெறும்போது மறுபடி ‘ஜேம்சை’ கொன்றிருக்க வேண்டாம் என்கிறாள்.
ரெட்டியும் ஒற்றைகையனும் கொன்றது பீட்டர் மெக்கன்சியை இல்லையா?
அதேபோல் ‘நாறும் எண்ணை’ யில் வரும் கப்பலில் இப்போது பயண்பாட்டில் இல்லாத நிலக்கரியில் பல் தேய்க்கிறார்கள்.அக்குள் முடிக்கு கருப்படிக்கிறார்கள்.
அந்த மஹாலிங்கய்யன் என்கிற பிரம்மஹத்தியை நீங்கள் லண்டனிலேயே கொன்றிருக்க வேண்டும்.
அவன் இங்கே வந்து தன் வீட்டு வாசலில் உட்கார்ந்தபடியே சாவது சினிமா!
அப்புறம் ரெட்டி அலையாஸ் மகாலிங்கன் எப்போது ‘சாமி’ ஆனான்
உங்களின் அச்சுதன் கேசவம் வாங்கி
இருக்கிறேன்.அதிலும் இந்த மகாலிங்கன் எனும் பிரஸ்ட்டன் வரக்கூடாது என்று அம்பலபுழை கிருஷ்ணணை பிரார்த்திக்கிறேன்.நான் நடேசன் ஜாதியல்ல மருதையன் ஜாதி என்று அந்த கிறுக்கு பயலிடம் சொல்லி வையுங்கள்!
அப்புறம் ஒரு பர்சனல் மேட்டர்,அந்த பெங்களூர் ராஜா அய்யங்கார் உண்மையான கதாபாத்திரமா?
‘ஷீர சாகர சயனா’ பால முரளியும்,ஜேசுதாஸும் பாடித்தான் கேட்டு இருக்கிறேன்.
நன்றி,வணக்கம் !
Tk Kalapria அண்ணாச்சி நீங்கள் சொல்லித்தான் விஸ்வரூபம் படித்தேன்.
அடுத்து மறுபடியும் உங்களின் 486 பக்க நாவலுக்குள் நுழைய ஆவி இல்லை.என் அடுத்த சாய்சான பூமணியோ 586 பக்கம்.ஆகவே ஞாயம்மாரே நான் ஏதாவது ரெண்டு ஒல்லி புத்தகங்கள் படித்து விட்டு உங்களை சந்திக்கிறேன். வணக்கம்.
————————————————————————
என் மறுமொழி
நன்றி ரூபன். நாவலில் அமிழ்ந்து படித்திருக்கிறீர்கள். வாசிப்பு அனுபவத்தை இன்னும் விரிவாகப் பகரக் கோருகிறேன்.
நீங்கள் சொல்வது சரிதான். பீட்டர் மெகென்ஸி அந்த அத்தியாயத்தில் தவறுதலாக ஜேம்ஸ் என்று விளிக்கப்படுகிறான். மன்னிக்கவும். என் பிரியமான துளசி சேச்சி நாவல் வந்ததுமே சுட்டிக் காட்டியும் நேர் செய்ய விட்டுப் போனது. இப்போது நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். கிழக்கு நோக்கிப் பிரார்த்திக்கிறேன்.
ராஜா அய்யங்காரின் ஷீரசாகர சயனா கொஞ்சம் தேடினால் நெட்டில் கிடைக்கலாம். 1960களில் திருச்சி ரேடியோவில் கேட்டிருக்கிறேன். இதோ யூட்யூபில் இருக்கிறதே
https://www.youtube.com/watch?v=eKRCRSJlDW8
கப்பல் அனுபவங்கள் – அந்தக் கப்பல் எஸ்.எஸ்.ரஜூலாவின் ஒரு பழைய அவதாரம். பல் துலக்க கரியிலிருந்து சகலமானதையும் அந்தக் கடலோடிகள் எடுத்துப் போனார்கள்.
இங்கே வருவது கரி charcoal இல்லை – கருவண்டல் soot.
சாமி அந்தக் காலத்தில் தென்னிந்தியனைச் சுட்டப் பொதுவிளி.
இன்னொரு முறை நன்றி கூறுகிறேன். மற்ற இரண்டு நாவல்களையும் – அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே – படித்து விட்டுப் பகிருங்கள்.
நண்பன் கலாப்ரியாவுக்கு சிறப்பு நன்றி – இந்தப் பதிவை எனக்குச் சுட்டியதற்காக. உங்களுக்கு இந்த நாவலைப் பரிந்துரைத்தற்காக.
—————————————————————————
முகநூல் உரையாடல்:
Thirugnana Sundaram புத்தகத்தை படித்தது போல, அலசல் அற்புதம்
Arul Rajan அண்ணா நீங்கள் ஒரு பொக்ககிஷம் பொறுமையாச்சொல்லுங்கள்
Tk Kalapria என்னுடைய நாவல் வேகமாக ஓடிவிடுகிறது என்று மக்கள் தீர்ப்பு
Ruben Jay நன்றி அண்ணா,இரா முருகன் ரொம்ப கிறங்கடிச்சுட்டாரு
Ruben Jay · Friends with Tk Kalapria and 318 others
வாழ்ந்து போதீரே என் கண்ணில் படவில்லை.பிடித்து படித்துவிடுகிறேன்