தினமும் நான் நண்பர் கிரேசி மோகனுக்கு ஒரு வெண்பா அனுப்புவேன். அவர் அதற்குப் பதில் வெண்பா அனுப்புவார். அவர் அனுப்பி நான் பதில் அனுப்புவதும் உண்டு.
வெண்பாவை அனுப்பும்போது வழக்கமாக முடிப்பது, ‘The ball is in your court’.
கடந்த சில நாட்களில் அனுப்பிப் பெற்ற வெண்பாக்கள் இவை.
பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் செய்விக்கும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. அவரது பிரம்படி ஒன்றினாலேயே மாணாக்கர்கள் கதிகலங்குவார்கள். விட்டத்தில் கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சில நேரம் இருக்கும்படி செய்வது ஒரு தண்டனை. அதைக் கோதண்டம் என்று கூறுவர். அப்படிப் பையன் தொங்கும் போது கீழிருந்து உபாத்தியாயர் அவனது காலில் அடிப்பதும் உண்டு. நான் ஒரு முறை இந்தத் தண்டனையை அடைந்திருக்கிறேன். பாடம் நன்றாய்ச் சொன்னவனைச் சொல்லாதவன் முதுகில் ஏறச் செய்து பிற்பகலில் பிள்ளைகளைச் சுற்றி வரச்செய்வது வழக்கம். அதற்குக் குதிரையேற்றம் என்று பெயர். அவ்விதம் நான் ஒரு முறை சவாரி செய்திருக்கிறேன்.
(உ.வே.சாமிநாதய்யர் – என் சரித்திரம்)
சுற்றி அலைந்து சுவடிகள் தேடுமுன்
சற்றும் களைப்பின்றி சாமிநாதர் கற்றது
கோதண்டம் தொங்கிக் குதிரை முதுகேறி
ஓதி உணர்ந்த தமிழ்
(இரா.முருகன் 27.3.2018)
கோதண்டம் தொங்கிக் குதிரை முதுகேற்றம்
ஓ!உண்டென் றார்ஸ்கூல் உவேசாசேய் -பாமுண்ட(முண்டகத்தாய் -செந்தாமரை சரஸ்வதி)
கத்தாய் அருள்கொண்டு காப்பியங்கள் தன்முதுகில்,(ஐம்பெருங்காப்பியங்கள்)
சொத்தாகத் தாத்தா சுமப்பு’’….கிரேசி மோகன்….!
Weird History on Twitter
“Etruscan dentistry, more than 2,000 years ago.
லோக்கல் அனஸ்தீஸியா இல்லாம இதெல்லாம் பண்ணினாங்களா?
என் வெண்பா
————————-
நாசி துளையிட்டு நல்லதோர் மூக்குத்தி
தேசுசேர் காதுகுத்திக் காதணிகள் காசுதந்து
சொல்லொணாத் துன்பம் சகித்திருந்து கம்பிகட்டிப்
பல்லலங் காரமிது பார்
இரா.முருகன் 28.3.2018
crazy mohan
பல் வலி வந்த போது….
———————————-
மல்லாண்ட மாயவா வில்லாண்ட வித்தகா
சொல்லாண்ட வாயிலே சொத்தையாய் -பல்லாண்டு
பாடாய்ப் படுத்துது ஆடா(து) அசங்காது
வாடா மருப்பொசித்த வா….!கிரேசி மோகன்….!
இரா.முருகன் பதில் வெண்பா….
—————————————-
பல்லவன் எந்நாளும் நாக்கைக் கடிக்காத
நல்லவன் ஆயினும் ஐம்பதில் -தொல்லையாய்
ஆடி அசைந்தவஸ்தை தந்தானை நேற்றுவே
றோடு களைந்தாயோ சொல்….இரா முருகன்….1
எனது பதில் வெண்பா….
————————————————
பல்லெடுத்தால் வாய்வீங்கி பார்க்க சிரஞ்சீவிக்
கல்லெடுத்தோன்(மலையெடுத்த அனுமார்) ஆவேனாம் காட்சிக்கு -சொல்லுரைத்து
நாடகம் இல்லாத நாளில்வா என்றான்பல்
ஆடும்GUM வைத்தியன் ஆய்ந்து….கிரேசி மோகன்….!
’’கால்மெட்டி கண்டதுண்டு! கம்பிகட்டி கன்னிப்பெண்
பால்கட்டி னாளேபார் பல்மெட்டி: -கால்கட்டு
போட்டால் தெரிந்திடும், பல்அகங் காரிகைக்கு
காட்டு மிராண்டியைக் கட்டு’’….கிரேசி மோகன்….!
நேற்று விஸாகா ஹரி(ராமாயணம் -பாம்பேயில் -சங்கரா டிவியில்) கேட்டேன்….டங் டங் டக டங் டங் டங்ன்று குடம் உருண்டதாய் காளிதாசன் கூறுவதாக அமைந்த பாடல்….!
குடம் உருளும் காளிதாசன் பாடல் டைப்பில்
——————————————————–
காமம் ஒழிந்த அதிகாலை வேளையில்
ராமன் அபிஷேக நீர்குடத்தை -தாமசமாய்
ஏந்திழையோர் போட்டுவிட ஏழு சுரங்களில்
தாம்திமித்தோம் தாளம் பிறப்பு….கிரேசி மோகன்….!
நூறு முகமழித்து நோகாது கத்திகொண்டு
நாறும் சிகைதிருத்தி நம்துரியர் நீராடிப்
பேனும் பொடுகுமெலாம் போகத் தலையலம்பப்
பானுமதி பட்டபாடு பார்
இரா.முருகன்
(துரியர் துரியோதனாதிகள்; பானுமதி துரியோதனன் மனைவி)
The silver chariot of the Chettiars, a title used by various castes from South India, seen here in Saigon. (1912)
தேயம் கடந்துபோய்த் தென்கிழக்கே சைகோன்
நியாயமாய் வட்டிபெற்று நீனாள் வியாபாரம்
வள்ளியப்பச் செட்டியார் வாரிசு காணிக்கை
வெள்ளிரதம் வந்ததே காண்.
இரா.முருகன் 30/03/2018
‘சைகோன் ரதம்பற்றி சொன்னீர் இராமுருகா!
MYகோன் கபாலீஸன், மங்களமாய் -மைதேன்(மைவிழியால் தேன்வடிக்கும்)
விழியாள் கற்பக வல்லியவள் பார்க்க
ஒழிவாகக் கண்டீரோ ஓய்….!
(OR)
பழியாகத் தேரில் பரம்’’….கிரேசி மோகன்….!
Today is #WorldIdliDay in honour of my favourite daily breakfast food! Began my day in Thiruvananthapuram as usual with idlis. Always marvel at the ancient geniuses who invented this greatest of all foods….
வார்க்க மிகவெளிது வாயிலிட்டால் காணாது
சேர்க்க வடையும் சகத்தீரே ஏற்றாங்கு
தட்டிலே சட்டினியும் சாம்பாரும் சூழவரும்
இட்டலிக் குண்டோ இணை.
இரா.முருகன் 31-03-2018
‘கட்டிலில் சாஞ்சுண்டு கட்டியவள்(பொண்டாட்டி) தந்திடும்
இட்டிலிக் குண்டோ இணைமுருகா! -தொட்டுக்க
சட்னி சமேதராய் சாம்பா ரால்BREAK(பிரேக்)
பட்னியைக் காலைப் பொழுது’’….!
(OR) -WORLD KIDNEY DAY க்கு இதே இட்டிலியை வைத்து எழுதியது….!
உப்பென்றும் சீனியென்றும் உண்டுக் களிப்பீரே!
தப்பில்லா இட்லியைத் துன்னுங்கோ! -அப்புறம்(வேறு மாதிரி துன்னால்)
இட்டிலி போன்றிருக்கும் கிட்னிகள் ரெண்டுமே
சட்டினி ஆகும் சிதைந்து’’…..!
(OR) -SALT விஷயத்துல அஸால்ட்டா இருந்துடாதீங்கோ….!
WORLD KIDNEY DAY by DOCTOR RC….!
உப்பில்லா பண்டமோ குப்பையில்: ஆனாலோ
உப்புள்ள பண்டமோ தொப்பையில்: -இப்பவே
ராஜன் ரவிச்சந்த்ன்(டாக்டர்) ராப்பகலாய் சொன்னாற்போல்
போஜனம் செய்யப் பழகு’’….!கிரேசி மோகன்….!
Henry Ford standing next to his 1902 Ford 999 race car.
நம்பர் பிளேட்டில்லை நல்லதோர் சீட்டில்லை
தம்பேரில் லைசன்ஸும் தானில்லை வம்பின்றித்
தார்ரோடு தப்பித் தடதடத் தேவிரையும்
போர்டுசார் ஓட்டிய கார்.
இரா.முருகன் 01-04-2018
”ஓட்டக் களத்திலே ஓடவிட்டார் ஃபோர்டுசார்
ஓட்டைக்கார் வென்றிட ஓட்டத்தில் -ஓட்டுனர்
காரிது கட்டாயம் தோற்க்குமென்று ! சொல்ல,ஃபோர்ட்
பாரினி பாரெங்கும் ஃபோர்ட்(FORD)’’(எஜமான விஸ்வாசம்)….கிரேசி மோகன்
By the 18th century, there was rapid growth in the formal study of medicine and many more cadavers were needed by the expanding medical schools, some private. There were medical schools and also private schools of anatomy in Aberdeen, Edinburgh and Glasgow. The spiralling demand for bodies could not be met by convicted criminals and the anatomists became bitter rivals in their efforts to acquire subjects, so the provision of the bodies became profitable. Inevitably the needs were met in the most ghastly way by a new trade – that of the body-snatcher.
Poor Scottish students of medicine in Edinburgh Medical College could pay their tuition fees in corpses.
http://www.historickilmun.org/stories/a-grave-problem
பேஷண்ட் வருவானா காசு தருவானா
சேஷன் மனைவிக்கு ஆச்சுதா மோஷனென
வாடியிருக் காமல் வசூல்ராஜா ஆவதற்கு
பாடி கொடுத்துப் படி.
இரா.முருகன் 2.4.2018
”(BODY)பாடி கொடுத்தால் படிப்பாம் !, எடின்பரோவில்!
தாடியா தாகூர்கீ தாஞ்சலி!-வாடிநாம்
சித்தா(SIDDHA) படித்து சிகிச்சை அளித்திடுவோம்!
புத்தாவே போதி படிப்பு’’….கிரேசி மோகன்….!
French novelist and poet Victor Hugo (1802 – 1885) suffered from such bad writer’s block that he asked his valet to take away all his clothes until he’d written something.
எண்ணம் கதையாக எத்தனையோ காப்பிடீ
பண்ணுசிக்கன் சூப்போடு பட்டாணி சுண்டல்
கதைவரலே கண்ணன் உடுப்பெடுத்துப் போனான்
பதறாத சேவகன் பார்.
இரா.முருகன் 2.4.2018
கதையா ? கவிதையா ? கட்டுரையா ? கேட்போர்க்(கு)
எதையும் வழங்கும் எழுத்துப் -புதையல்
சுஜாதாவை ஹ்யூகோவே!(YOUGOவே) சொப்பனத்தில் சந்தி!
(அப்புறம்)மஜாவாய் நாவல் மலர்’’….கிரேசி மோகன்….!