ரெட்டை நாயனம் – வெண்பாக்கள் : நூற்றுப் பதினேழில் போயிந்தி இசைகேட்டு


கிரேசி மோகன் – இரா.முருகன் வெண்பாக்கள்

பூஜியாமா தப்பித்து பூமிக்கு நீதியின்றி
யோஜியாது பாம்போட்டு நாகசாகி மாஜிசெய்யா
ஆயுசும் கெட்டியொரு நூறும் பதினேழும்
போயிந் திசைகேட்கப் பார்.

இரா.முருகன் 23-04-2018

பூஜியாமா தப்பித்து – பூஜியாமா எரிமலை வெடித்துத் தீக்குழம்பு பொங்கியபோது உயிர் பிழைத்து

யோஜியாது பாம்போட்ட நாகசாகி – அமெரிக்கா 1945-ல் அணுகுண்டு போட்ட ஜப்பானிய நகர் நாகசாகியில் இருந்தும் மாஜி (லேட்) -காலமாகாமல் தப்பித்து

ஆயுசு போயிந்தி இசை கேட்டு – யாரோ கித்தாரும் ட்ரம்ஸும் வாசிக்கும் இசை கேட்டு உயிர் பிய்த்துக்கொண்டு ஓடிவிட்டது!!!
*******************************************************************************************

“நூத்திப் பதினேழில் தாத்தா இறந்திட
வாத்தியத்தால் ஷெர்லாக்கும் வந்திட -பாத்தவர்(ஷெர்லாக் ஹோம்ஸ்)
செத்தார் நாகசாமி(தாத்தாவின் பேர் ) சாவதன் காரணம்
கித்தார் அபஸ்வரம் கேள்”….கிரேசி மோகன்….!

The Independent – World’s oldest person dies in Japan aged 117 https://ebx.sh/2vAKNhZ – he was listening to music when death came (see the picture below)
********************************************************************************************

180423 – Tvameva -A4 -icam -lr

ஓவியம் காப்புரிமை திரு கேஷவ்
நன்றி நண்பர் கேஷவ்
**********************************************************************************
’கன்றூபோல் என்றுமே கண்ணனே காப்பாக,
சென்றவர் சேவடியில் சேர்ந்திடு-நன்றிதைச்,
சொன்னது கேசவ், சரண்புகு சென்னியால்,:
ஒண்ணது ஒண்ணாக்கும் ஒண்ணு’’….கிரேசி மோகன்….!

ஆதாரம் நீதானே அன்பனென் பானும்நான் ***
பாதார விந்தம் பணிந்திட்டேன் மாறாது
கண்ணாநீ காவென்று திண்ணம் சரண்புகுந்தால்
ஒண்ணாக்கும் ஒண்ணாக்கும் கால்.

– இரா.முருகன்

*** AADHAAR-ம் நீதானே அன்பனென் PAN-ம்நான்
ஒண்ணாக்கும் ஒண்ணாக்கும் – (கன்றின்) ஒளிரும் நாக்கும் கண்ணன் காலும் ஒண்ணாக்கும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன