மன்றோ வனப்பதனை மாநாடு தான்கூட்டி
சென்றோத ஓர்யுகம் போதாதே – என்றைக்கும்
யாக்கை நிலைக்காது யாண்டும் நினைவாகும்
சாக்கை உடுத்த அழகு.
இரா.முருகன்
மன்றோ – மறைந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ
சாக்கை உடுத்தும் அழகு – உருளைக்கிழங்கு அடைத்து வந்த சாக்கு மூட்டையை மர்லின் மன்றோ உடுத்திக் கொண்டபோதும் அழகாகத் தெரிந்தார்.
”டெர்லின் உடுப்பில், தறிகாட்டன் ஆடையில்,
மர்லின்மன் றோசினி மாமயக்கம் -பெர்லினின்
ஹிட்லரே தோற்றிடுவார், HER-SELFஃபின்(மர்லின் மன்றோ) பேரழகு
கட்லட் உருளைக் கிழங்கு’’….கிரேசி மோகன்….!