வரும் ஜூலை 21, சனிக்கிழமை மாலை என் குறுநாவல்கள் – ‘இரா.முருகன் குறுநாவல்கள்’ தொகுப்பு பற்றிய ஒரு கலந்துரையாடலை வாசகசாலை அமைப்பு நடத்த ஒழுங்கு செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்தின் மூன்றாம் தளம் – பாட நூல் பிரிவில் – மாலை 5:30-7:15 வரை நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழ்ச்சியில் திரு.கணபதி சங்கர், செல்வி மித்ரா ஆகிய நண்பர்கள் இந்தப் படைப்புகள் பற்றிய வாசகர் பார்வையை முன்வைத்து உரையாடலை முன்னெடுத்துச் செல்வார்கள். நிகழ்ச்சியை நிறைவு செய்ய நான் குறுநாவல் இலக்கிய வடிவம் பற்றியும் இந்தப் படைப்புகள் பற்றியும் சற்றே சாற்றுவேன் கேளீர். ஒவ்வொரு குறுநாவலுக்குப் பின்னும் ஒரு கதை இருக்கிறது. அவற்றின் தடம் என் நாவல்கள் வரை நீள்கிறது.
I’m pleased to invite all frineds to the group discussion on my novella collection – இரா.முருகன் குறுநாவல்கள் – on 21st July Saturday evening at Connemara Public Library (3-rd floor), Egmore, Chennai between 5:30 PM and 7:15 PM.
The event has been curated by Vaasakasaalai.
Mr.Ganapathi Sankar and Ms Mitra will be providing the readers’ perspective in the session and I shall be providing the author’s views and observations on the near extinct literary form, NOVELLA in general and about these creations in particular. Each of them has a story behind them!
Meet you on Saturday.