பீரங்கிப் பாடல்கள் – நூல் வெளியீட்டு விழா – அக்டோபர் 27, 2018 சென்னை

பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியீட்டு விழா (27 அக்டோபர் 2018 சென்னை) குறித்து இன்றைய (28 அக்டோபர் 2018) மாத்ருபூமி மலையாளத் தினசரி – சென்னைப் பதிப்பில் இடம் பெற்றிருக்கும் செய்தி

Ack Mr.Prem Nazir

நூல் வெளியீடு

திருமதி திலகவதி, திரு மாலன், திரு. என்.எஸ்.மாதவன், இரா.முருகன்

At Chennai’s CP Arts Centre, author NS Madhavan (Lanthanbatheriyile Luthinyakal) and translator Era Murugan (Peerangi Patalkal)

சென்னை 27 அக்டோபர் 2018 சனிக்கிழமை
’பீரங்கிப் பாடல்கள்’ நாவல் வெளியீட்டு விழா
(மலையாள நாவல் ‘லந்தன்பத்தேரியிலெ லுத்தினியகள்’ மொழிபெயர்ப்பு)

நாவல் ஆசிரியர் திரு என்.எஸ்.மாதவனும், மொழிபெயர்ப்பாளர் இரா.முருகனும்

Picture Courtesy : Mr. E P Unny

Marudhan Gangadharan (Editor, Kizhakku Pathipagam) intro of the book

இது ஒரு நெடுங்கனவு. அல்லது துண்டுத் துண்டான சிறு கனவுகளின் தொகுப்பு. காய்ச்சலில் படுத்துக்கிடக்கும்போது விழிப்பா, மயக்கமா என்று கண்டறியமுடியாத நிலையில் மனம் சில கதைகளை உண்மை கலந்து உற்பத்தி செய்யத் தொடங்கும் அல்லவா? அப்படிப்பட்ட கதைகளைத்தான் ஜெசிக்கா நமக்குச் சொல்லத் தொடங்குகிறாள்.

தன்னை அம்மா கருவுற்ற அந்த மழைக்காலம்கூட ஜெசிக்காவுக்கு நினைவில் இருக்கிறது. அம்மா, அப்பன், அப்பூப்பன் ஆகியோருக்கு முந்தைய கொச்சியையும் எப்படியோ ஜெசிக்கா தெரிந்துவைத்திருக்கிறாள். அவள் சொல்லும் கதையில் போர்ச்சுகீசியர்களின் 165 ஆண்டுகால ஆட்சி வருகிறது. டச்சுக்காரர்களின் கொச்சி; பிரிட்டிஷ் துரைகளும் துரைசானிகளும் வந்து சேர்ந்தது; நேருவின் ஆட்சி; ஈ.எம்.எஸ். நம்பூரிபாட்டின் கம்யூனிஸ்ட் அரசாங்கம்; சீனப் போர், பாகிஸ்தான் போர் அனைத்தையும் ஜெசிக்கா நமக்கு அறிமுகப்படுத்துகிறாள். லந்தன்பத்தேரி என்னும் சின்னஞ்சிறு தீவு இந்த மாற்றங்களையெல்லாம் எப்படிச் சந்தித்தது, எப்படிக் கடந்துவந்தது என்பதை அவள் நமக்கு விவரிக்கிறாள்.

ஜெசிக்காவுக்குக் கட்டுக்கதைகளைக் கேட்கவும் பிடிக்கும், உருவாக்கவும் பிடிக்கும். கதை சொல்லு, கதை சொல்லு என்று எப்போதும் பிடித்து உலுக்கும் ஜெசிக்காவைப் பார்த்து அவள் அம்மா அலுத்துக்கொள்கிறாள். இந்தக் குழந்தைக்குக் கிறுக்கா என்ன?

ஆனால் ஒரு நாள் ஜெசிக்கா தனக்கு நேர்ந்ததைச் சொல்லும்போது அம்மாவும் அப்பனும் மட்டுமல்ல அந்த லந்தன்பத்தேரியே திடுக்கிட்டுப்போகிறது. தண்ணீர் பிசாசு பிடித்திருப்பதால் அடிக்கடி கை அலம்பும் பிலாத்தோஸ் பாதிரியார் தொடங்கி ஜெசிக்காவின் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த அம்மை குத்தும் சாரதாம்மாவரை அனைவரும் ஜெசிக்காவை உலுக்குகிறார்கள். சொல் ஜெசிக்கா, நீ சொன்னது பொய்தானே? இது நீயே இட்டுக்கட்டிய கதைதானே? நீ சொல்வதுபோல் எதுவும் உனக்கு நடக்கவில்லைதானே? மனுஷர்கள் மட்டுமா ஜெசிக்காவைக் கைவிட்டார்கள்? வழக்கமாக எதிரெதிர் நிலைகளில் நிற்கும் தேவாலயமும் கம்யூனிஸ்ட் கட்சியும்கூட ஜெசிக்காவுக்கு எதிராகக் கரம் கோர்த்து ஓரணியில் நிற்கின்றன. பாவமே செய்திராத என்னை மன்னிக்க ஏன் ஒருவரும் முன்வரவில்லை? என்னை நம்புவதற்கு இந்த லந்தன்பத்தேரியில் ஏன் ஒரு ஆன்மாவும் இல்லாமல் போனது?

அதனால்தான் எங்கும் இருள் சூழ்ந்துகிடக்கிறதா? பற்றிக்கொள்ள பாலம் எதுவும் இல்லாததால்தான் லந்தன்பத்தேரி ஒரு தீவாகச் சுருங்கிப்போய்விட்டதா? உண்மை என்றொன்று இல்லை என்பதால்தான் கதைகள் முடிவில்லாமல் வளர்ந்துகொண்டே போகின்றனவா?

லந்தன் என்பது டச்சு என்னும் ஹாலந்து நாட்டைக் குறிக்கும் சொல். டச்சுக்காரர்கள் பிடியில் கொச்சி இருந்தது உண்மை. ஆனால் அவர்கள் ஐந்து பீரங்கிகளைக் கொண்ட ஒரு தொகுதியை (பேட்டரி, லந்தன்பத்தேரி) உருவாக்கிவைக்கவில்லை. லந்தன்பத்தேரி என்றொரு தீவு கொச்சிக்கு அருகில் இல்லை. அது கதை என்றால் ஜெசிக்காவும் அம்மாவும் அப்பனும் அப்பூப்பனும் பாதிரியும் இன்னபிற மனுஷர்களும் கற்பனை என்றாகிறது. லந்தன் அரண்மனை, போனிபேஸ் பாலம், பீரங்கி மைதானம் எதுவுமே நிஜத்தில் இல்லை. தண்ணீர் பிசாசு என்றொன்று கிடையாது.

ஆனால் குட்டையான, பருமனான, கறுத்த, பதினாறு வயது ஜெசிக்கா குட்டிக்கு எல்லாமே நிஜம். லந்தன்பத்தேரியை நம்புவதைப் போலவே அவள் நம்மையும் நம்புகிறாள். அதனால்தான் தன் கதையை அவள் நம்மிடம் நேரடியாகச் சொல்லத் தொடங்குகிறாள். நேர்மையாகவும். அதை எப்படி நம்மால் கேட்காமல் போகமுடியும்? எப்படி அவளை நம்பாமல் இருக்கமுடியும்?

0

பீரங்கிப் பாடல்கள்
என்.எஸ். மாதவன்,
மலையாளத்திலிருந்து தமிழில் : இரா. முருகன்
கிழக்கு பதிப்பகம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன