தொண்ணூற்றெட் டில்லிருந்து பின்னிரு பத்தாண்டில்
கண்ணிலே காணவில்லை என்னபொருள் – எண்ணிச்சொல்
கேக்கிறார் பத்திரிகை க்ளிண்டனுடன் பேஜரும்
வாக்மேன் தலையில் முடி
1998-ல் இருந்து, 20 வருடம் கழித்து இப்போது, 2018-ல் காணக் கிடைக்காதவை பட்டியல் போட்டார்கள். இடம் பெற்றவற்றில் முதன்மை – சோனி வாக்மேன், பேஜர், பில் க்ளிண்டன், தலைமுடி
https://www.indy100.com/…/president-donald-trump-toilet-bru…
கொஞ்சம் அதிகமிது கொள்கை பிடிக்கலைதான்
நெஞ்சில் இரக்கமில்லார் சூழ்ந்திடுவார்– வஞ்சம்
பழகுமுகம் ட்ரம்ப்பை படியெடுத்துச் செய்தார்
கழுவக் கழிப்பறை ப்ரஷ்
தைப்பொங்கல் தாய்லாந்தில் சங்கராந்தி கொண்டாட்டம்
மெய்தானா காலிப்பூ கொய்யவிழா – அய்யோடா
ஜப்பான் டிவியிலே காண ரசிகவெள்ளம்
தப்பில்லை ரேட்டிங் உயர்வு
(காலிப்பூ – cauliflower)
வீட்டில் உலவும் விடிந்தால் எழுப்பிவிடும்
ஊட்டமாய்ச் சொற்கள் உரைத்திடும் – பாட்டிசைக்கும்
கட்டில் பகிர்ந்து கலவியா முக்கியம்
கட்டுநீ ஹோலோக்ராம் பெண்
ஜப்பானியர் ஒருவர் ஹோலோக்ராம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். அதுவும் அனிமேஷன் கார்ட்டூன் வரைந்து உருவாக்கி ஏற்படுத்திய ஹோலோக்ராம்.
’ஒரு பிரச்சனையும் இல்லே.. மிக்கு-சான் (அந்தப் பெண்) காலையிலே எழுப்பி விடுவாங்க. ஆபீஸ் அனுப்புவாங்க. சாயந்திரம் ஆபீஸ்லே இருந்து ஃபோன் பண்ணினா, வீட்டில் விளக்கேற்றி வச்சிருப்பாங்க. ராத்திரி படுக்கப் போகற நேரமாச்சுன்னு உறங்க அனுப்பி வைப்பாங்க. வேறே என்ன வேணும் ஃலைப்லே?” அதானே