கொஞ்சம் மரபு – கொஞ்சம் புதுசு 23 ஜூன் 2019 ஞாயிறு

நான்காம் மாடியில்
நாங்கள் வசிக்கிறோம்.
மின்தூக்கி இல்லாமல்
வாழ்க்கை இல்லை என்றும்.

எத்தனை படிகள் மொத்தமாய்?
மின்சாரம் நின்றுபோய்
படியேறும் போது
எண்ணிப் பார்க்கணும்.
அவ்வப்போது கரெண்ட் போனாலும்
படிகளை எண்ணுவது
பாதியில் இருந்துதான்.

கீழிருந்து மேலே போகவோ
மேலிருந்து இறங்கவோ
பொத்தான் அழுத்தி அழைக்கும்போது
எங்கோ லிப்ட் தேங்கியிருந்தால்
எரிச்சலும் கோபமும் பொங்கிவரும்.
பேப்பர் பையனா, பாக்கெட்பால் பாட்டியா
கறிகாய்க்காரனா கூரியர் மற்றும்
தீனி கொண்டுதரும் சேவையாளனா
விருந்தாட வந்த யாரோ ஒருவரா
எந்த மாடியில் மின்தூக்கி நிறுத்தினர்?
போய்ச் சேர்ந்ததும் லிப்ட் கதவை
மூடத் தெரியாத மூடர் கூட்டமோ?

லிப்ட் சிலநாள் இயக்கம் நிலைத்து
பாதியில் நின்றிடும்
ராட்சச ஒலியுடன்.
உள்ளே மாட்டிக் கொண்டவர் யாரோ
ஒருநாள் நானும் இருக்கலாம் இன்றில்லை.

படிக்கட்டுகளில் ஏறி வந்தால்
காலுக்கு நல்ல பயிற்சி
இறங்குவதும் அதில் பாதி
உடல்நலம் தருமாம்.
தெரியும் எமக்கும் எனினும்
சதா இருட்டில் சாரைப் பாம்பாக
நெளிந்து கிடக்கும் படிகளில்
ஏற இறங்க ஏனோ ஒரு பயம்.

மாடமும் கூடமும் வனைந்து
மேகத் திரள் நடுவே
படிக்கட்டுகளால் ஏற்படுத்திய
ஏதோ ஓர் உலகம்
அடிக்கடி கனவில் வந்திடும்
ஏறி இறங்கி பாதியில் விழித்து
மூச்சு முட்டத் தூக்கம் துறப்பேன்.
மின்தூக்கி வரும் கனவுகளுக்காக
இன்னும் காத்திருக்கிறேன்.

நடையானந்தா
23.06.2019

————————————

நாவல் நினைவோடை நன்கொழுக ஜேம்ஸ்ஜாய்ஸு
ஆவல்;கள் மாந்த அடிதடியாம் – கோவாலு
வேரீஸ் ஹெமிங்க்வேசார் வேகம்போய் தஞ்சமடை
பாரீஸ் நகர தெரு.

நாவல் நினைவோடை – Ulysses , novel with stream of consciousness narrative
வேரீஸ் ஹெமிங்க்வேசார் – Where is Hemingway sir?

In 1920s Paris, James Joyce would get drunk, start fights, and then hide behind Ernest Hemingway for protection, screaming, “Deal with him, Hemingway!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன