ஒரு சேஞ்சுக்காக இன்றைக்கு ராமோஜியம் நாவல் எழுத வேண்டாம் என்று வைத்து, அமர்ர் தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ படித்துக் கொண்டிருக்கிறேன்.
எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளருமான அலக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதிய ‘The No, 1 Ladies Detetctive Agency’ போன்ற நூல்களைக் கொண்டாடி விட்டு தேவனின் துப்பறியும் சாம்பு படிக்கும்போது தேவனின் சிறப்பு புலப்படுகிறது. என்ன அற்புதமாகத் துப்பறியும் கதைகளை வளமான கற்பனையும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து எழுதியிருக்கிறார். அதுவும் எண்பது வருடம் முன்பு, 1940-களில்!
கல்கியைக் கொண்டாடும் அளவு தேவனையும் கொண்டாட வேண்டும்.
1) தேவனின் துப்பறியும் சாம்பு கதை ஒன்றில் திரிபுராந்தகா பேங்க் சூழலை வர்ணிக்கும்போது – டைப்பிஸ்ட் சுப்பிணி தலையை நட்டுக்கொண்டு டைப் அடித்துக் கொண்டிருந்தான்.
அப்படீன்னா?
2)விஷயத்தைச் சொல்லாமல், எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டுக்கொண்டு விலை பேசுவதுபோல், இப்படிக் கேட்டால் என்னத்தைச் சொல்வது என்று கேட்க சாம்புவுக்குத் தெரியாதென்பதில்லை
அதென்ன எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டுக்கொண்டு