Letter’s வந்த கடிதங்களில் இருந்து

Hello ERM

I am Mani from Mumbai, running software company……..

Your project management article could have been little more crisp. But anyway it is good attempt. You can assume the readers have some sort of official eco system knowledge and you can aim for them

I guess, you have forced yourself to write for all segment readers..

I am reading your book of short story collection..

Mani 

இரா. முருகன்,

வணக்கம். திண்ணை இணைய இதழில் உங்களுடைய விஸ்வரூபம் படித்தேன். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்து கதையாற்றே…இதில் உங்கள் வழக்கமான, லேசான கிண்டல் கலந்த நடை இருக்குமா என்ற சந்தேகத்துடனே படிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயத்திற்குள்ளே என் சந்தேகத்தை போக்கிவிட்டீர்கள். மலையாளத் திரைப்படங்கள் மூலமாகவும், மலையாள மொழிபெயர்ப்புகள் மூலமாகவும் நான் நெருக்கமாக உணரும் கேரள தேசத்தின் பிண்ணனியில் உள்ளதால் தொடர்ந்து படித்துவிட்டு எனது கருத்துகளை தெரிவிக்கிறேன்.

யாரடா இவன்……… மொட்டையாக யார்? என்ன என்று சொல்லிக்கொள்ளாமல் விஸ்வரூப தரிசனத்தில் இறங்கிவிட்டான் என்று உங்களுக்கு தோன்றலாம். இரண்டாவது அத்தியாயத்திற்கு கீழே உங்கள் மின் அஞ்சல் முகவரியைப் பார்த்தவுடனேயே ஒரு ஆர்வக் கோளாறில் ஆரம்பித்துவிட்டேன். —————————————————–

Murugan,

I’ve read your Arasur Vamsam, few months back. That is one of the very good novels in Tamil.

It is very happy to see you started writing its sequel Visvaroopam in Thinnai.com
It is great pleasure to have a writer like you in Tamil.

Eagerly awaiting your writings.

(Cognizant) Boobalan
——————————————————–

 நாம் ஒரு முறை சந்தித்திருக்கிறோம். சுஜாதா இறந்த அன்று, அவருடைய உடல் மறுநாள்தான் வரும் என்ற விபரம் தெரியாமலே நாம் காலையிலேயே மலர் மாலையுடன் வந்துவிட்டோம். அப்போது உங்களை சந்தித்து என்னை அறிமுகப்படுத்திவிட்டு சிறிது நேரம் பேசினேன். ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. பெயர் சுரேந்தர்நாத். தலைமைச் செயலகத்தில் இருக்கும் ஆயிரமாயிரம் கோப்புகளில் சில நூறு கோப்புகளுக்கு சொந்தக்காரன். மனதில் சுஜாதாவும், ஆதவனும் ஓடிக்கொண்டிருக்க… கை, காகிதத்தில் கைன்ட் அட்டன்ஷனை இன்வைட் பண்ணிக்கொண்டு வாழ்க்கை ஓடுகிறது. குறையொன்றுமில்லை. அது இல்லாவிட்டால், மாலை காலாகாலத்திற்கு வீட்டுக்கு வந்து விஸ்வரூபமெல்லாம் படிக்க நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை.

நான் நீண்ட காலமாக உங்கள் வாசகன். உங்களுடைய சிறுகதைத் தொகுப்புகயைம் சரி…இப்போது வந்துள்ள முருகன் சிறுகதைகளும் சரி… உங்கள் பெயரைப் பார்த்தவுடனேயே யோசிக்காமல் வாங்கிவிடுவேன். இந்த மாதிரி சில பேருடைய புத்தகங்களையே வாங்க முடிகிறது.

சமீப காலமாக உங்கள் எழுத்துகள் அதிகம் காண கிடைக்கின்றது. கல்கியில் தொடர்ந்து எழுதுகிறீர்கள். அமுதசுரபியில் கூட ஒரு கட்டுரைப் படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள். விஸ்வரூபத்தில் எழுதியிருக்கிறீர்கள்: ~~நீலகண்டன் வக்கீலுக்கு காந்தியுடன், யௌவனமான இளம் விதவைகள் மீதும் அலாதி பிரியம் உண்டு. தேச சேவை பல தரத்திலாச்சே||. மற்றும் மலையாள எழுத்துகள் குறித்த உங்கள் வர்ணனையையும் ரசித்து படித்தேன். தொடர்ந்து நிறைய எழுதுங்கள். எல்லோருக்குமா இந்த மாதிரி எழுத வாய்க்கிறது…….

மீண்டும் விஸ்வரூபம்; படித்துவிட்டு எழுதுகிறேன்.

அன்புடன்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்.
சென்னை 28.
—————————————————

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன