சிங்கப்பூரின் முக்கியமான இலக்கிய விருதுகள் ‘சிங்கப்பூர் புத்தக கவுன்சில்’ Singapore Book Council ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து வழங்குபவை.
கவிதை, புதினம், இலக்கியம் புதினம் அல்லாதவை ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுபவை இவை. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் மொழி நூல்களை எழுதிய எழுத்தாளர்களைக் கவுரவப்படுத்தும் விருதுகள்.
ஒவ்வொரு துறையிலும் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை மதிப்பிட நீதிபதிகளின் குழு Judges Panel ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் குழுக்களில் இடம் பெற்ற தமிழகப் படைப்பாளிகள் –
கவிதை – நண்பர் சமயவேல்
இலக்கியம் புதினம் அல்லாதவை – நண்பர் யுவன் சந்திரசேகர்
புதினம் – இரா.முருகன்
குறும்பட்டியலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதினம்/குறுநாவல் -சிறுகதைத் தொகுப்புகள்
மரயானை – திரு சித்துராஜ் பொன்ராஜ்
ஓந்தி – திரு எம்.கே.குமார்
வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும் – திரு. யூசுப் ராவுத்தர் ரஜித்
தமிழ் கவிதை, புதினம் அல்லாதவை துறைக் குறும்பட்டியல்களில் இடம் பெற்ற படைப்புகளின் விவரம்
நாளை குறும்பட்டியல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பு – படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழா நெட்டில் நடைபெறுகிறது. virtual function
ஆகஸ்ட் 27 வியாழன் இந்திய நேரம் மாலை 5:30
விழா விவரங்கள் https://bookcouncil.sg தளத்தில்
https://bookcouncil.sg/singapore-literature-prize/page/about
கலந்து கொள்ள, நண்பர்களை சிங்கப்பூர் புத்தக கவுன்சில் சார்பில் அன்புடன் வேண்டுகிறேன்