ராத்திரியில் உறங்கும் முன் ஒரு கதை சொல்ல யாராவது வேணும். அது பரமனப்பாவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றான் குழந்தை .
கறுப்பன் என்பதால் கோச் வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்ட ஒரு உயரமான மெலிந்த மனிதனைப் பற்றி நிறையக் கதை சொல்லியிருக்கிறார் பரமன் அப்பா.
சமுத்திரத்தில் இருந்து உப்பு எடுத்துக் காய்ச்சி உபயோகிக்க வரி ஏன் தர வேண்டும், மாட்டேன் என்று அமைதியாக யுத்தம் செய்தவனாம் அவன். அரை நிர்வாணப் பக்கிரியாம். அவனையும் அவன் சகாக்களையும் அரசாங்கக் காவலர்கள் மூர்க்கமாகத் தடி கொண்டு தாக்கியும் அதெல்லாம் பொறுத்து, திருப்பி அடிக்காமல் வரிசை வரிசையாகப் பிடிவாதமாக உப்பெடுக்க முன்னால் நகர்ந்த அந்தக் கிழவனையும், அவனுடைய சகாக்களையும் பற்றி மஞ்சுநாத் சொன்ன ஆர்வம் எனக்கே அந்தக் கதை கேட்கத் தோன்றியது.
//
மிளகு நாவலில் இருந்து
இது நிகழ்வது 1605-ம் ஆண்டு. உப்புக் கிழவர் தண்டியில் உப்புக் காய்ச்சியது 1930-இல். 1960-லிருந்து 1605-க்குப் போன ஒருவர் 1605-ம் ஆண்டுக் குழந்தைக்கு இதைக் கதையாகச் சொல்கிறார்.
புனைவின் சாத்தியம் தான் எவ்வளவு!