அன்பு நண்பர் ஜெயமோகன் இன்று அறுபது வயது நிறைவு காண்கிறார்.
அவருக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.
இது ஜெயமோகனம் அல்ல’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை jeyamohan60 blog-இல் பிரசுரமாக இருக்கிறது.
கட்டுரையில் ஒரு சிறு பகுதி –
ஆக, ஜெயமோகனைப் பார்க்காமலேயே ரொம்ப நாள் போனது. கணையாழி குறுநாவல் தேர்வு தொடர்ந்தது. நான் ராத்திரி வண்டி எழுதித் தேர்வானால், ஜெயமோகன் டார்த்தீனியம், நான் படம் குறுநாவல் எழுதினால், ஜெயமோகனின் கிளிக்காலம், நான் விஷ்ணுபுரம் எழுதித் தேர்வானால், நிற்க. தமிழ்நாட்டில் ஒரு சிறு நகரத்தில் நடைபெற்ற நகரசபை தேர்தல் பற்றி ஒரு பத்து வயதுப் பையனின் கண்ணோட்டத்தில் எழுதிய குறுநாவல் விஷ்ணுபுரம். ஜெயமோகனும் ஒரு விஷ்ணுபுரம் அந்தக் காலகட்டத்தில் எழுதியிருந்தார். அவருக்கு ரப்பர் ஜெயமோகனிலிருந்து விஷ்ணுபுரம் ஜெமோவாக அழியாப் புகழ் கொடுத்த ஐகானிக் நாவல். என் விஷ்ணுபுரத்தை அண்மையில் இரண்டாம் பதிப்பு புத்தகமாக வந்தபோது விஷ்ணுபுரம் தேர்தல் ஆக்கி விட்டேன்.