குறுநாவல் ‘விஷம்’ -6

அத்தியாயம் – 6

 

ஒரு டாக்டரும் இரண்டு நர்ஸ்களும் டாக்டாக் என்று அறைக்குள் நுழைந்தபோது போத்தியை உயிர்ப்பிக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. நிலைமை இப்போது என்னால் கட்டுபடுத்தக் கூடியதாக உள்ளது என்று தோன்றியது. சின்னப் போத்திக்கும் அப்படியே தோன்றியிருக்க வேண்டும் நாய்க்குட்டி போல, என் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தான்.

 

டாக்டர் எங்களை வெளியே போக உத்தரவிட்டு விட்டு சின்னக் கதவை மூடினார். நான் வெளியே மரபெஞ்சில் அம்ரந்து ஒரு சிகரெட்டை எடுக்க, உட்கார்ந்தபடிக்கே தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிப்பந்தி கண் விழித்துப் பார்த்து வெளியே போய்ப் புகை விடச் சொன்னார். நான் அவசரமாக வெளியே வந்தேன்.

 

நடமாட்டம் இல்லாத தெருவில் அவ்வப்போது ஒரு மாருதி கார் போய்க் கொண்டிருந்தது. குல்தீப் பேண்ட் என்று எழுதிய வேனில் நான்கு பஞ்சாபி இளைஞர்கள் அமர்ந்து, ஒற்றை டியூப்லைட் மட்டும் எரியக் கையைத் தட்டிக்கொண்டு போனார்கள். ஆஸ்பத்திரிச் சுவரில், ‘இவர்களை உங்களுக்குத் தெரியுமா?’ என்று பயங்கரவாதிகளின் படங்கள் ஒட்டப் பட்டிருந்தன. அதில் ஒரு முகமும் என் சாயலில் இருக்கக் கூடாதே என்று கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது பின்னால் யாரோ வந்து தோளைத் தொட்டார்கள். மனித குலத்தின் அடிப்படை பயமெல்லாம் அந்தக் கணத்தில் கவியத் திரும்பிப் பார்த்தேன். சின்னப் போத்தி தான்.

 

‘உள்ளே டாடியை என்ன செய்து கொண்டிருப்பார்கள் அங்கிள்? அவர் அலறுகிறது போல் சத்தம் கேட்டதே?’

 

‘பயப்படாதே. குடித்ததை எல்லாம் வெளியே எடுத்துக் கொண்டிருப்பார்கள், அப்புறம் லிட்டர் கணக்கில் சலைன் ஏற்றுவார்கள்’.

 

உள்ளே இருந்து போத்தி இன்னும் இரண்டு ராத்திரி இங்கே தங்க நேரிட்டால், இவளோடு ஜோக் சொல்லிச் சிரிக்க வைத்து மகிழும் ஒரு பந்தம் உருவாகலாம். ஐந்து நிமிடம் முன்னால் டீ குடித்த வாடையோடு திரும்பி உள்ளே போனாள். நாளைக்குத் தங்கினால் இவளோடு சேர்ந்து டீ குடிக்கலாம். மூல்சந்த் ஃப்ளை ஓவர் பக்கம் நல்ல டீ கிடைக்கும். கூட்டிப் போகலாம்.

 

நேரம் என்ன? பையன் கேட்டான்.  என் கையில் ரேடியம் டயல் வாட்ச் இரண்டு முப்பது என்றது.

 

காத்திருக்க வேண்டும். இந்த அசாதரணமான நாள் முடிந்து புதிய தினத்தில் பிரவேஎசிக்கும் போது போத்திக்கு சுவாசமும் ஜீவனும் திரும்பக் கிடைக்கக் கூடும். இது வீண் போகாத காத்திருப்பு. அவன் காத்திருந்ததைப் போல மனதை உளைக்கிற விஷயமில்லை.

 

லெக்சரர் சேகரனின் உடலுக்காகப் போத்தியும் மற்றவர்களும் காத்திருந்தது அது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன