ஆட்டக் கலைஞர்களும் நிர்வாகிகளும் சதா விழா நினைவிலிருந்த விழாக்காலம்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலின் சிறு பகுதி


வாழ்ந்து போதீரே   அத்தியாயம் இருபத்தெட்டு     

          

நாட்டுப்புறக் கலை, கலாச்சார விழாவும் மாநாடும் எல்லோர் மீதும் பரிபூர்ணமாகக் கவிந்திருந்தது. ஆட்டக் கலைஞர்கள் மட்டுமில்லாமல் பிரதிநிதிகளும் கூட, நடக்கும் போதோ, இருந்து பேசும்போதோ அதே நினைவாக இருந்தார்கள். அவர்கள் கை கால் அசைவிலும், கண் அசைவிலும் அவ்வப்போது நளினம் தெறித்துக் காட்சி வைப்பது தன்னிச்சையாக நிகழ்ந்தது.

 

நாலு நாள் கொண்டாட்டம் இன்றைக்கு முடிவடைகிறது. மூன்று நாளிலேயே முடியும் விஷயத்தை வலிந்து நாலு ஆக்கிய சர்க்கார் உத்யோகஸ்தர்கள், நடத்த நிகழ்ச்சி இல்லாமல், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு என்ன வேடிக்கை காட்டலாம் என்று சிண்டைப் பிய்த்துக் கொண்டார்கள்.

 

அம்பலத்தில் இருந்து மாராரை வரவழைத்து, பத்து மணி தொடங்கி ஒரு மணி நேரம் சங்கீதமாக எடக்கையோ கடைக்கயோ தட்டிக் கொண்டு கேவி அழுது கேட்க வைக்கணும். அப்புறம் கெஸ்டுகளை நாலு ஹவுஸ்போட்டுகள், அதான் படகு வீடுகளில் அடைத்து ஆளுக்கு ரெண்டு போத்தல் பியரும் கொடுத்து வேம்பநாட்டுக் காயலில் போய் வரச் சொல்லணும். அப்படிச் செய்தால், சாயந்திரம் முடிவுரை, விருது என்று நடந்து எல்லோரும் சவுக்கியமாக வீடு போய்ச் சேர்ந்து, போக வர டிராவலிங் அலவன்சும், நாலு நாள் தங்குமிட அலவன்சும் கிளெய்ம் செய்யலாம்.

 

இந்த யோசனை எல்லாத் தரத்து அதிகாரிகளாலும், அவர்களுடைய உதவியாளர்களாலும் உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டுச் செயலாக்கப் பட, விழாப் பந்தலே வெறிச்சென்று போனது.

 

ராஜா ஒருத்தர், அவர் கூடவே ரெண்டு களவாணிகள் குட்டையும் நெட்டையும் கையில் பிடித்த எலுமிச்சம்பழமுமாக. பார்த்தேளா?

 

பட்டை நாமத்தோடு அரசூர் ஜோசியர் ஆளில்லாத பந்தலுக்குள் ஒன்றிரண்டாக உருண்டு நேரம் கெட்ட நேரத் தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி விசாரித்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன