1953-ம் வருடத்து தமிழ், மலையாள தினப் பத்திரிகைப் பிரதிகள் நண்பர்கள் யாரிடமாவது உண்டா? போட்டோ காப்பி எடுத்துக் கொண்டு நன்றியோடு (அடுத்த நாவலில் இரண்டாம் பக்கம்) திருப்பி அனுப்பப் படும். அட்வான்ஸ் தேங்க்ஸ்:-)
——————————————————————————————-
எஸ்.ஜானகி தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதைப் புறக்கணித்திருக்கிறார் – தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களை விட வட இந்தியர்களே பத்ம விருதுகளுக்காக அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லி.
அவர் குறிப்பிடும் bias உண்மைதான். ஆனால் தனக்கு அளிக்கப்பட்ட தேசிய அங்கீகாரத்தைப் புறம் தள்ளுவது ஜானகி போன்ற பன்மொழிக் கலைஞர்களுக்கு ஏற்புடையது அல்ல.
’ஜானகி வெகுளித்தனமானவர். சங்கீதம் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது. ஆரம்பப் பள்ளி கூட்டல் கழித்தல் கூட அறியாதவர். ஆனால் பாட ஆரம்பித்தால் ஏழு சுவரமும் அவர் சொன்னபடி கேட்கும்’ என்று பொருள்பட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவருடைய இசைத் திறமையை வியந்திருந்தார்.
ஜானகியும் அரசியலுக்கு வரப் போகிறாரா என்று தெரியவில்லை
——————————————————-
தில்லி நிர்பயா கூட்ட வன்புணர்வு வழக்கில் ஆறாவது குற்றவாளியான, பெயர் குறிப்பிடப்படாத சைத்தான் ‘மைனர்’ பயலாம். ஜூன் 4-ம் தேதி ’18 வயது முடியும்போது’ வெளியே வந்துவிடுவானாம்.
நிர்பயாவுக்குள் இரும்புக் குச்சியை நுழைத்து குடல் வரை குடைந்த கிராதகன் இவன். மைனராம் மைனர் பேடிப் பயல்.
இந்த நாட்டில் வெற்று ஆத்திரப்படலாம். எழுதலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்.