ஞாயிறு ட்ரைவிங் லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்ட முயலும் அண்டர் செக்ரட்ட ரி

வாழ்ந்து போதீரே – ==== =====================

இன்னும் கொஞ்சம் உறங்கினால் என்ன? எட்டு மணி தானே ஆகிறது? ஒரு டோஸ் காப்பி. கூடவே கிளாஸ்கோ பிஸ்கட்டும் தோய்த்துச் சாப்பிட.

 

தெரசாவோடு கிடந்த போது ப்ளாஸ்கில் இருந்து காப்பியும் அதில் கிளாஸ்கோ பிஸ்கட்டைத் தோய்த்து அவள் வாயிலிட்டு, எச்சில் கூழாக்கிப் பகிர்ந்ததும் நினைவு வர, தலையைக் குனிந்து கொண்டான்.

 

அது எல்லாம் எதுக்கு? அது வேறே நாள். வேறே உலகம். இப்போ, தில்லியிலே குளிர்காலம். ஞாயிற்றுக்கிழமை. காலைப் பொழுது. வெளியே போய் வந்தால் என்ன? புதுசாக வாங்கி நிறுத்தி இருக்கும் இந்துஸ்தான் காரிலும் சவாரி செய்த மாதிரி இருக்கும். தனியாகப் போவானேன்? குடும்ப சகிதம்.

 

வசந்தியைக் கேட்டான்.

 

ஒழுங்கா ஓட்டக் கத்துண்டாச்சா?

 

அவள் குழந்தையை மடியில் வைத்தபடி விசாரணை செய்தாள்.

 

லைசன்ஸ் வச்சிருக்கேனாக்கும்.

 

கார் ஓட்டவா, ஸ்கூட்டர் ஓட்டவா?

 

சகலமானதிலேயும் ஆரோகணிச்சு சுகமா ஓட்டத் தான். வந்தா புரியும்.

 

அதென்ன காவாலித் தனமான பேச்சு?

 

நான் சாதாரணமாத்தானே சொன்னேன்.

 

போய் தில்ஷித் கவுர் கிட்டே சொல்லுங்கோ.

 

அவ எதுக்கு? நீ ஒருத்தி போறாதா?

 

மயில்கள் வைத்திருந்த மிக உயரமான கம்பி வலை போட்ட வெளியில் இரண்டு மயில்கள் மட்டும் பறக்கத் தொடங்கி இருந்தன. மேலே வலை மூடாத கம்பி மேல் அமர்ந்து அவை கீழே உற்றுப் பார்த்தபடி இருந்தன. சிடியா கர் ஊழியர்கள்  தரையில் தானியத்தை விசிறியடித்து அவைகளைத் திரும்பக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

இரண்டும் ஜிவ்வென்று பறந்து சங்கரனின் தோளில் இறக்கை பட வீசி அவன் முகத்தை மறைத்துப் பறக்க அவன் நடுநடுங்கி நின்றான். குழந்தை வீரிடும் சத்தம் இறக்கைகளுக்குப் பின் கேட்க, வசந்தி திரும்பிக் குழந்தையை அவனிடமிருந்து பறித்துக் கொண்டு தோளில் சார்த்தி இறுகத் தழுவி, இரண்டடி ஓடி நின்று அலறினாள்.

 

அடுத்த நொடியில் கீழே இறங்கி தரையில் தானியம் பொறுக்கியபடி மயில்கள் இருக்க, சங்கரன் உடம்பில் நடுக்கம் குறையாது  பாதை ஓரக் கல் குவியல் மேல் உட்கார்ந்தான்.

 

Nov 26 29 ஹப்பி ஹாலீடே

 

குழந்தை சமாதானமாகிச் சிரித்தது. வசந்தி போகலாம் என்றாள்.

 

சங்கரன் திரும்பிப் பார்த்தான். சிறு தானியம் மேயும் மயிலின் கண் அவன் தெரசாவோடு கலந்தபோது ஊஞ்சலில் ஆடியபடி பார்த்த மூத்தகுடிப் பெண்ணின் கண் போல் இருந்தது.

 

சாமா, நில்லுடா, நானும் வரேன்.

 

ஒரு மயில் குரலெடுத்து அகவ, சங்கரன் அவசரமாகக் காருக்கு நடந்தான்.

 

தப்பு பண்ணிட்டேனா தெரசாவோட?

 

அவன் திரும்பிப் பார்க்க அந்த மயில்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு தாறுமாறாக நிலத்தில் ஓட ஆரம்பித்தன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

=

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன